Thursday, 10 October 2019
Tuesday, 8 October 2019
Psychology
[08/10, 23:54] Dr. Jagadeesh Krishnan: அவன் ஒரு பெரிய நாட்டின் மன்னன்.
ஒரு நாள் இரவு மன்னனின் காதில் ஒரு பூச்சி நுழைந்து விட்டது.
காதில் இருந்த பூச்சியை எடுக்க மன்னனைச் சேர்ந்தவர்கள் படாத பாடுபட்டார்கள்.
அவர்கள் முயற்சி எதுவும் பலிக்கவில்லை.
மன்னனின் பிரச்னையைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பிரமாண்டமான பரிசுகள் அறிவிக்கப்பட்டன.
எங்கிருந்தெல்லாமோ வைத்தியர்கள் வந்தார்கள்.
யாராலும் அந்தப் பூச்சியை வெளியே எடுக்க முடியவில்லை.
மன்னனால் தூங்க முடியவில்லை.
உணவும் குறைந்து விட்டது.
மன்னன் பொலிவு இழந்தான்.
இந்த நேரத்தில் இமயமலையிலிருந்து ஒரு துறவி வந்து சேர்ந்தார.
மன்னனின் காதை நன்றாகப் பரிசோதித்தார்.
"இது மிகவும் அபூர்வ வகை பூச்சி, நம் பக்கத்து மூலிகைகளுக்கு இது கட்டுப்படாது.
இங்கிருந்து நூறு யோஜனை தூரத்தில் உள்ள ஒரு காட்டில் விளையும் அபூர்வமான ஒரு மூலிகைக்குத்தான் இந்தப் பூச்சி கட்டுப்படும்.
இன்றே என் சீடர்களை அனுப்புகிறேன்.
எப்படியும் ஒரு மாத காலத்திற்குள் அவர்கள் திரும்பி வந்துவிடுவார்கள்.
அதன்பின் உங்கள் பிரச்னை முற்றிலுமாகத் தீர்ந்துவிடும் கவலைப்படாதீர்கள் என்றார்.
மூன்றே வாரங்களில் சீடர்கள் மூலிகையுடன் வந்தார்கள்.
மறுநாள் காலை விடிவதற்கு முன்னால் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மன்னனின் காதில் அந்த மூலிகைச் சாறு அரைத்து ஊற்றப்பட்டது.
அடுத்த சில நொடிகளில் செத்த பூச்சி வெளியில் வந்து விழுந்தது.
மன்னனிடம் அந்தப் பூச்சியைக் காட்டினார் துறவி.
மன்னன் இப்போது நிம்மதியாகத் தூங்கினான்.
நன்றாக உண்டான்.
பழைய பொலிவு திரும்பி விட்டது.
அவருக்கும் அவரது சீடர்களுக்கும் உரிய மரியாதை செய்து அனுப்பி வைத்தான் மன்னன்.
அவர்கள் நாட்டு எல்லையைத் தாண்டியதும் துறவியின் சீடர்களில் ஒருவன் கேட்டான்.
""குருதேவா! அந்த அற்புதமான மூலிகை பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்!''
''துறவி புன்னகை பூத்தார். ""பூச்சி அத்தனை நாள் எங்கே இருந்தது என்று நினைக்கிறீர்கள்?, மன்னனின் செவிக்குள், ''அதுதான் இல்லை, மன்னனின் காதிற்குள் பூச்சி போனது உண்மையாக இருந்திருக்கலாம், சிறிது நேரத்திலேயே அது செத்திருக்கும். இல்லை, உடனே வெளியே வந்திருக்கும்,
அந்தச் சிறிது நேரத்தில் அது மன்னனின் செவிகளுக்குள் ஒரு குறுகுறுப்பு உணர்வை ஏற்படுத்தி விட்டது.
அது மன்னனின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.
அந்தப் பூச்சிகாதுக்குள் உயிருடன் இருப்பதாகவே மன்னன் நினைத்துக் கொண்டிருந்தான்.
"குருதேவா அதை விளக்கிச் சொல்லி மன்னனை குணப்படுத்தியிருக்கலாமே?''"
"மனோவியாதியை அப்படி எளிதாகக்குணப்படுத்திவிட முடியாது!
பிரச்னை தீவிரமானது என்று மன்னன் நினைத்துக் கொண்டிருந்தான்.
அதனால் தான் நானும் சிகிச்சை தீவிரமானது என்று பாசாங்கு செய்தேன்..
தொலைதூரத்தில் இருந்து மூலிகை வர வேண்டும் என்று பொய் சொன்னேன்."
''அந்த மூலிகை?''
"நம் ஊரில் சாதாரணமாக விளையும் செடியின் இலைகள்தான்.
அதை யாரும் கவனிக்காமல் பார்த்துக் கொண்டேன்.
பின் ஒருநாள் பூஜை செய்து காலை இருட்டு நேரத்தில் மூலிகைச் சாற்றை மன்னனின் காதில் விட்டுஏற்கனவே பிடித்து வைத்திருந்த ஒரு செத்த பூச்சியைக் காட்டினேன்.
மன்னன் நம்பி விட்டான். அவன் மனநோயும் தீர்ந்தது."
இன்று மனித இனத்தைப் பீடித்திருக்கும் நோய்களில் பெரும்பான்மையானவை நம் மனங்களில் தான் இருக்கின்றன.
காதில் நுழைந்த பூச்சி வெளியேறி விட்டது.
மனதில் நுழைந்த பூச்சிதான் நம்மைச் சாகடித்துக் கொண்டிருக்கிறது.
இன்று நம்மில் பலர் சூழ்நிலையைக் காரணம் காட்டி தமது வாழ்க்கையைத் தாமே கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
"எங்கப்பா மட்டும் பொறுப்பா சம்பாதித்திருந்தா, பெரிய படிப்பு படிக்க வச்சிருந்தா, பணம் கொடுத்திருந்தா, யாராவது உதவி செய்திருந்தா நான் பெரிய ஆளாயிருப்பேன்'' என்று எத்தனை பேர் வெளியே சொல்லிக் கொண்டு திரிகிறார்கள் பாருங்கள்.
இன்று பெரிய ஆட்களாக இருக்கும் பலரும் காசில்லாத தகப்பனுக்குப் பிறந்தவர்கள்தான்.
பெரிய படிப்பு படிக்காதவர்கள்தான்.
பிரச்னை நம் பெற்றோரிடமோ, நம் ஆசிரியரிடமோ, நம் பள்ளி, கல்லூரியிடமோ, நம் சூழ்நிலையிலோ இல்லை.
அது நம் மனதில் இருக்கிறது.
பூச்சி காதில் இல்லை, மனதில் இருக்கிறது.
ஒரு இல்லாத பிரச்னையை, இருப்பதாக நினைத்துக்கொண்டு நம் வெற்றி வாய்ப்புக்களைக் கெடுத்துக் கொண்டிருக்கிறோம்!.
By
Jagadeesh Krishnan psychologist and International Author
Knight Dragon Tantra Galaxy psycholical counselling services
[08/10, 23:54] Dr. Jagadeesh Krishnan: He is the king of a great country.
One night an insect entered the king's ear.
The king had to suffer from the insect that was in his ear.
Their efforts yielded nothing.
Great gifts were announced for those who solved the king's problem.
Doctors came from everywhere.
No one was able to get the insect out.
The king could not sleep.
The food has also declined.
The king lost his brilliance.
A monk arrived from the Himalayas around this time.
The king's ear was well examined.
“This is a very rare species and it is not bound to our herbs.
The insect is bound to a rare herb that grows in a forest about a hundred yards from here.
I am sending my disciples today.
They'll be back in a month's time anyway.
Then don't worry that your problem will be completely resolved.
In three weeks the disciples came with the herb.
The herb juice was poured into the king's ear at the time of Brahma mukurta before dawn the next morning.
The dead insect came out in the next few seconds.
The monk showed the insect to the king.
The king was now asleep.
Well done
The old glow is back.
The king sent him and his followers with due respect.
One of the monk's disciples asked as they crossed the border.
"" Gurudeva! Let me tell you a little about that wonderful herb! '
'' The monk smiled. "" Where do you think the insect was that day ?, in the king's ear, '' it was not. No, come out right away,
In a short time it caused a seizure within the ears of the king.
It is deeply ingrained in the mind of the king.
The king thought he was still alive in that pest.
"Gurudeva could have explained it and healed the king."
“It is not easy to treat a psychopath!
The king was thinking that the problem was serious.
That's why I pretended the treatment was serious ..
I lied that the herb should come from a distance. "
'' Is that herb? ''
“These are the leaves of a plant that normally grows in our town.
I watched it without anyone noticing.
Then one day after the pooja, in the dark of the morning left herbal extract in the ear of the king and showed him a dead insect.
The king trusted. He's also exhausted. "
Most of the diseases that plague mankind today are on our minds.
The insect that entered the ear had left.
The insect that comes to mind is killing us.
Many of us today are ruining their lives by the circumstances.
"How many people come out and say," If only we had a responsibility, if I had a big study, paid for it, if someone had helped, I would be great. "
Many of today's big men were born to a cashless father.
Great study is uneducated.
The problem is not with our parents, our teachers, our school, college or our situation.
It is in our minds.
The pest is on the mind, not on the ear.
Thinking that there is a problem, we are ruining our chances of success !.
By
Jagadeesh Krishnan is a psychologist and international author
Knight Dragon Tantra Galaxy psycholical counseling services
Thursday, 3 October 2019
Time
Jagadeesh Krishnan: வரலாற்றில் மிகப் பெரிய தத்துவவாதி யார்?
உலகின் மிக சிறந்த தத்துவவாதி யார் என்றால் அது நிச்சயமாக காலேதேவதையாகத்தான் இருக்க முடியும்
அனைத்து தத்துவங்களும் சித்தாந்தங்களும் சகலவிதமான உயிர் களும் அவைகளின் வாழ்க்கை மற்றும் ஆசாபாசங்கள் கனவுகள் மகிழ்ச்சி ஏமாற்றம் கோபதாபங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் காலத்தின் கைகளில் ஒப்படைக்கப்படுகிறது.
இதுதான் காலதேவனின் தத்துவம்.
ஒருவர் தாம் சொல்லும் தத்துவத்தை கடந்த காலம் நிகழ்காலத்தில் இருந்து எடுத்து இது எதிர்காலத்திற்கும் பொருந்தும் என கூறுகிறார். ஆக இங்கு தத்துவம் உருவாகவும் அது நிலைபெறவும் காலதேவதையின் அருள் நிச்சயம் தேவைப்படுகிறது.
எனக்கு தெரிந்து பல சிந்தனையாளர் அறிவாளிகள் விஞ்ஞானிகள் என அனைவரும் தத்துவங்களை காலத்திடம் இருந்து பெற்று அதை உண்மையாக்க அதே காலத்திடம் கையேந்தி நின்றவர்களே.
ஐன்ஸ்டின் அவர்கள் தனது ஒரு ஒளியியல் சார்ந்த கோட்பாட்டை நிரூபிக்க சூரிய கிரகணத்தை எதிர்பார்த்து பல நாட்கள் காத்திருந்தாராம்.
இன்றும் கூட பல விஞ்ஞானிகள் ஒளியை விட வேகமாக சென்றால் காலத்தை வென்று எதிர் காலத்திற்கோ கடந்த காலத்திற்கோ சென்று வரலாம் ஏன் டைம் மெஷினை கூட கண்டுபிடித்து விடலாம் என மனப்பால் குடித்து வருகிறனர்.
ஆக காலத்தை மையமாக கொண்டு எத்துனை எத்தனை கற்பனைகள் கனவுகள்???
அதே போல பலரின் மனக்காயங்களுக்வும் அருமருந்தாக அமையும் காலம் அனைத்தையும் சரிசெய்துவிடும் இதுவும் கடந்து போகும் என்ற தத்துவங்கள் கூட காலத்திடம் இருந்தே பிறந்து காலத்துடன் கலந்து விடுகிறது
நம்ம ஊரில் காலத்தத்துவம் மிகவும் பிரிசித்தம்.
பிறருக்கு இன்னா முற்பகல் செய்யின்
தமக்கு இன்னா பிற்பகல் தாமே விளையும்
என்ற வள்ளுவன் வாக்கு கூட காலத்தை மையமாக கொண்டே உள்ளது.
நமது ஊரில் காலத்தே பயிர் செய் என்பார்கள்.விவசாயத்தில் காலம் மிகவும் முக்கியம்.
சிறியவர்களை பெரியவராக்குவதும்
உழைப்பவர்களை உச்சந்தொட வைப்பதும் நம்பிக்கை இழந்து போராடும் நபர்களுக்கு கவலை வேண்டாம் நான் இருக்கிறேன் என தோள் கொடுக்கும் தோழனாகவும் என்னிடம் இல்லாத அதிகாரமா செல்வமா என ஆணவத்தால் ஆடுபவர்களின் தலையில் இரண்டு தட்டு தட்டி அறிவை புகட்டும் ஆசானாகவும் பாவம் செய்தவர்களை தண்டிக்கும் நீதிமானகவும் காலதேவன் திகழ்கிறார்.
ஆக பலபல தத்துவங்களை பலர் மூலம் உண்டாக்க வைத்து அந்த தத்துவங்களை தனது காலசக்கரத்தின் மூலமே சுழல வைத்து இறுதியில் தம்முடனே ஐக்கியப்படுத்திக் கொண்டு சிருஷ்டியும் நானே ஸ்திதியும் நானே சர்வமும் நானே என அமைதியாக இருக்கும் காலதேவன்தான் உலகின் மிகச்சிறந்த தத்துவவாதி.
By
Jagadeesh Krishnan
Who is the greatest philosopher in history?
If one is the greatest philosopher in the world, it can certainly be a goddess
All philosophies and ideologies, all sorts of lives, their lives and aspirations, dreams, happiness, disappointments, anger, expectations, are all handed over to the hands of time.
This is the philosophy of Kaladevan.
One takes his philosophy from the past to the present and says that this applies to the future. Therefore, in order for philosophy to be formed and sustained, the grace of time is definitely needed.
I know that many thinkers, intellectuals, and scientists have all come up with theories from time to time and come to fruition.
Einstein spent several days waiting for a solar eclipse to prove his theory of optics.
Even today, many scientists are wondering why they could go back to the past or the past to find the time machine if it goes faster than the light.
How many fantasies and nightmares with the center of time ???
Likewise, many people's grievances and the time of death will be corrected.
In our town, the period is very divided.
If it is too early for others
He'll have it later in the afternoon
Even the Valluvan vote is centered around time.
Cultivate early in our town.
And making little ones big
Callawayan is a janitor who punishes those who sin, as a doer of the shoulder, and the power of my lack of authority, to put on the heads of those who are arrogant as to the power of my power.
He is the best philosopher in the world, so that the creation of myself, the existence of myself, and the whole of myself, is the greatest philosopher.
By
Jagadeesh Krishnan