Saturday, 28 May 2022

my books are available in amazon.com amazon.in and flipkart.com and

[5/28, 11:34 AM] Jagadeesh ChandraKrishnan: ஹிரோசிமா, நாகசாகி நகரங்களின் மீது அணுகுண்டு வீசும்படி அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ட்ரூமன் உத்தரவிட்டார். இரண்டு லட்சம் பேருக்கு மேல் எரிந்து எரிந்து சாம்பலாய்ப் போனார்கள்.

அணுகுண்டுகள் வீசப் படும்வரை அவர் உறங்காமல் விழித்துக் கொண்டே இருந்தார். போடப்பட்டது தெரிந்த பிறகுதான் தூங்கப் போனார் ட்ருமேன்!

மறுநாள் காலையில் பத்திரிகையாளர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு முதலில் கேட்ட கேள்வி இதுதான்:

“இரண்டு லட்சம் பேரைக் கொன்ற பிறகு, உங்களால் நிம்மதியாகத் தூங்க முடிந்ததா?”

ஜனாதிபதி ட்ரூமன், “ஓ, நிம்மதியாகத் தூங்கினேனே! சில மாதங்களுக்குப் பிறகு நேற்றுத்தான் நான் நன்றாகத் தூங்கினேன். காரியம் கச்சிதமாக முடிந்துவிட்டது. இனி ஜப்பான் சரணடைய வேண்டியதுதான். தகவல் வந்ததும் நான் மிகவும் திருப்தியடைந் தேன். இரவு முழுவதும் ஒருமுறை கூட விழிக்காமல் நிம்மதி யாகத் தூங்கினேன்,” என்றார்.

சுரணயற்ற மனிதர்கள் இப்படித்தான் இருப்பார்கள்.பலம் மிக்கவர்களுக்கு எந்த உணர்வுகளும் இருக்காது. மனிதர்களின் தலையை வெட்ட முற்படும்போது, அவனுக்கு இரண்டாவது யோசனை வருவதே இல்லை.

அப்படிப்பட்ட மனிதனின் பெயர் “ட்ரூமேன்!” அன்றுமுதல் அந்த மனிதனை நான் 'அன் ட்ரூமேன்' (உண்மையற்ற மனிதன்) என்றுதான் குறிப்பிட்டு வருகிறேன்.

மற்றொரு மனிதர் ஜார்ஜ் பெர்னாட்ஷா.
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மனிதர் ஜார்ஜ் பெர்னாட்ஷா.

ஓவியப் படைப்பாளியும், நாவலாசிரியருமான ஒருவர் அவரைப் பார்க்க வந்திருந்தார்.

ஷாவின் வீட்டுத் தோட்டத்தில் பூக்கள் பூத்துக் குலுங்கின. அவருடைய அறைக்குள் சென்றபோது அங்கே ஒரு பூ கூடக் காணப்படவில்லை.

'அதிசயமாக இருக்கிறதே... தோட்டத்தில் அத்தனைப் பூக்கள் இருக்கின்றனவே, சிலவற்றைப் பறித்து இங்கே ஒரு பூத்தொட்டி பில் வைத்திருக்கலாமே," என்றார் நாவலாசிரியர்.

அதற்கு ஷா, “நான் குழந்தைகளைக் கூட நேசிக்கிறேன். அவர்களும் மலர்களைப் போல அழகானவர்கள்; அதற்காக அவர் களின் தலைகளைக் கொய்து இந்த அறையை அழகு செய்ய முடியுமா? மலர்கள் மலர்கின்றன. மழையிலும், கதிரொளியிலும் காற்றிலும் அவை ஆடி மகிழ்கின்றன. அவை உயிரோடு இருப் பவை. நான் கசாப்புக் கடைக்காரன் அல்லன். உயிருள்ள அவற்றை என்னால் வெட்ட முடியாது என் அறையில் பிணங்கள் இருப்பதை நான் விரும்பவில்லை என்றார்.

அவர் சொன்னது சரிதான் அவர் உணர்ச்சிமயமான அவர் மிகுந்த உணர்ச்சி உள்ளவர். உண்மையான மனிதர்.

இந்த இரண்டு விதமான மனிதர்களையும் நீங்கள் தினமும் சந்திக்கிறீர்கள்.

சிலருடன் கைகுலுக்கும் போது, வெட்டுண்ட மரக்கிளை யுடன் கைகுலுக்குவது போல உணர்வீர்கள்.

அதில் உயிரிருக்காது: கதகதப்பு இருக்காது; சக்தி இருக்காது.

வேறு சிலருடன் கை குலுக்கும்போது ஏதோ ஒன்று உங்களுக்குள் பாய்வதை உணரலாம்; ஒரு வெப்பம், அன்பான நட்பு பரிமாறப்படுவதை உணரலாம். அப்படிப்பட்ட மக்களுடன் அமர்ந்திருந்தால், நீங்கள் வளம் பெறுவதை உணரலாம்.

மற்றவர்கள் வெட்டுண்ட மரக்கிளைகள் - அவர்களு டன் அமர்ந்திருந்தால், நீங்கள் வற்றிப் போய்விட்டதாக ஒரு வினோத உணர்வுதான் தோன்றும்.

உணர்ச்சிகளை, ஆயிரம் விதங்களில் பகிர்ந்து கொள்ளலாம். மிகவும் அடிப்படையான அம்சம் அன்புடைமை.

அது வெறும் உறவன்று; ஆனால், அன்புடைமை, எந்த நிபந்தனையும் அற்றது, பிரதிபலன் எதிர்பாராதது. மனிதருக்குள் அன்பை ஊற்றுவது அது. அன்னியர் என்றாலும்கூட அது உணர்வுடன் பாயும்.

விஞ்ஞானிகள் இப்போது சொல்கிறார்கள். நீங்கள் மரக்கிளை யுடன் கை குலுக்கினாலும், நீங்கள் நட்புணர்வோடு இருந்தால் அந்த மரத்திலும் ஏராளமான உணர்வு தோன்றும் என்று சொல்கிறார்கள்.

இந்தியாவின் முதல் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஜகதீஷ் சந்திரபோஸ், மரம் செடி கொடிகளுக்கு உயிருண்டு என்று நிரூபித்தவர். அதற்காகவே அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதற்குப் பிறகு அவருக்கு எத்தனையோ அனுபவங்கள்.

விஞ்ஞானிகள் மரத்தோடு இணைக்கப்பட்ட அளவுமானி ஒன்றை பொருத்திவிட்டார்கள். ஒரு மனிதன் அன்புடன் மரத்தை நெருங்கும்போது, மரம் மகிழ்ந்து உள்ளுக்குள் ஆடுவதை அளவுமானி காட்டியது! காகிதத்தில் காணப்பட்ட கோடுகள் அழகு தருவதாக மாறிவிட்டன.

ஒருவர் கோடரியுடன் நெருங்கும்போது, வெட்டும் நோக்கத் தோடு வரும்போது, அவன் அருகில் வராவிட்டாலும் கூட 'கார்டியோகிராம்' கருவியில் கோடுகள் தாறுமாறாய் ஓடின. அது எல்லா ஒழுங்கையும் இழந்துவிட்டது.

தனக்குத் தீங்கு வருவதை மரம் உணர்ந்துவிட்டது. மரம் வெட்டியின் மன உணர்வையே புரிந்து கொண்டு விட்டது மரம்!

மனிதனின் மென்மையான உணர்வைப் புரிந்து கொள்ளும் சக்தி மரத்திற்கு இருக்கிறது. அதே மனிதன், மரம் வெட்டும் எண்ணம் இல்லாமல், ஆனால் கோடரியுடன் வந்தால், கருவியில் கோடுகள் தெளிவாக ஓடும். மரத்திற்கு அப்போது பயம் இல்லை.

விஞ்ஞானிகள் இன்னொன்றையும் கண்டுபிடித்தார்கள். ஒரு மரம் பயத்தால் நடுங்கினால், அருகிலுள்ள மற்ற மரங்களும் நடுங்கும் என்பதைக் கண்டறிந்தார்கள். இதை அவர்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

அவைகளெல்லாம் நட்புடன் இருக்கிறது ஒரே பகுதி மற்றொன்றுடன் தொடர்பில் உள்ளது அவைகள் அன்பை பகிர்ந்து கொண்டிருக்கின்றன.

இந்த பிரபஞ்சமே உணர்வு பூர்வமானது மனிதன் உயர்ந்த பட்சமான உணர்வுகள் நிறைந்த படைப்பு.

புத்தர் நடந்து செல்லும்போது மொட்டை மரங்கள் துளிர்விட்டாதாக சொல்லப்படுகிறது. அது உவமையாக இருக்கலாம். அல்லது உண்மையாகவும் இருக்கலாம்.

இயல்பாகவே உங்கள் இதயம் உங்கள் இருப்பு  பிரவகிக்க தயாராக இருக்கின்றது நீங்கள் தான் அதை மறைத்து வைக்கிறீர்கள், அடக்கி வைக்கிறீர்கள்.

கவிஞர்கள் சிற்பிகள் ஓவியர்கள் இசைவாணர்கள் போன்றவர்கள் போராடும் உலகோடு இருக்கவில்லை. கோடிக்கணக்கில் சம்பாதிக்கவும் விரும்புவதில்லை இப்படிப்பட்டவர்களிடம் மட்டுமே கொஞ்சம் உணர்வுகள் ஒட்டிக் கொண்டிருக்கின்றன.

நீங்கள் உண்மையற்ற மனிதராக இருக்கக்கூடாது.
உண்மையுள்ள மனிதராக மாற வேண்டும்.

நீங்கள் மரங்கள் மீதும், மலைகள் மீதும், ஆறுகள் மீதும், கடல்கள், விண்மீன்கள் மீதும், முழு உலகின் மீதும் காதல் கொண்டு விடும் போது, உங்கள் உணர்வுகளையும் அன்பையும் நட்பையும் பாசத்தையும் நீங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது,

நீங்கள் ஒரு உண்மையுள்ள மனிதராக,ஞானி ஆவதற்கான குறிக்கோளை மிகவும் நெருங்கி கொண்டிருக்கிறீர்கள் என்பதாக அர்த்தம்.

ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[5/28, 11:34 AM] Jagadeesh ChandraKrishnan: US President Truman has ordered an atomic bomb on the cities of Hiroshima and Nagasaki.  More than two lakh people were burnt to ashes.

 He remained awake until the atomic bombs were dropped.  Truman went to sleep only after he knew he had been put down!

 The next morning, journalists surrounded him and asked him the first question:

 "After killing two lakh people, were you able to sleep peacefully?"

 President Truman said, "Oh, I slept peacefully!  Only a few months later I slept well yesterday.  The thing is perfectly done.  No longer did Japan have to surrender.  I was very satisfied when the information came.  I slept peacefully without waking up even once during the night, ”he said.

 Mineless human beings are like this. The strong have no feelings.  When he tries to cut off the heads of men, he never gets a second thought.

 Such a man's name is "Truman!"  Ever since then I have been referring to that man as 'Un Truman'.

 Another man was George Bernadette.
 The greatest man of this century was George Bernadette.

 A painter and novelist came to see him.

 Flowers bloomed in Shaw's home garden.  When we went to his room not even a flower was found there.

 'Wonderful ... there are so many flowers in the garden, maybe pick some and have a flowerpot bill here,' said the novelist.

 To which Shah replied, “I love children too.  They are also as beautiful as flowers;  Can he cut off their heads for that and beautify this room?  The flowers are in bloom.  They enjoy playing in the rain, sunshine and wind.  They are alive.  I am not a butcher.  I can not cut them alive said I do not like the presence of corpses in my room.

 He was right he was emotional he was very emotional.  Real man.

 You meet these two kinds of people every day.

 When shaking hands with someone, you will feel like shaking hands with a cut tree branch.

 There will be no life in it: there will be no warmth;  There will be no power.

 When you shake hands with someone else you may feel something flow into you;  You can feel a warm, loving friendship being exchanged.  If you sit with such people, you can feel prosperous.

 Others have cut branches - if they sit in tons, you will have a strange feeling that you have withered.

 Emotions can be shared in a thousand ways.  The most basic aspect is affection.

 It's just unrelated;  But, affectionate, unconditional, the response is unexpected.  It is the pouring of love into man.  Even if it is a stranger it will flow consciously.

 Scientists say now.  They say that even if you shake hands with a tree branch, if you are friendly, a lot of emotion will appear in that tree as well.

 Jagadish Chandrabose, India's first Nobel Prize-winning scientist, proved that tree vines are alive.  For that he was awarded the Nobel Prize.  How many experiences he had after that.

 Scientists have fitted a gauge attached to a tree.  When a man lovingly approached the tree, the scale showed the tree playing happily inside!  The lines found on the paper have become aesthetically pleasing.

 When a person approaches with an ax and comes with a cutting object, the lines on the 'cardiogram' instrument run randomly even if he does not come close.  It has lost all order.

 The tree has realized that it is harming itself.  The tree has understood the mental feeling of the woodcutter!

 The tree has the power to understand the gentle senses of man.  The same man, without the intention of cutting wood, but if he comes with an ax, the lines on the tool will run clearly.  The tree was not afraid then.

 Scientists have discovered something else.  They found that if one tree trembled with fear, the other trees nearby trembled.  They did not expect this at all.

 They are all friendly The only part is in contact with each other They are sharing love.

 This universe itself is emotional, a creation full of the highest senses of man.

 It is said that the buds did not bloom as the Buddha walked.  That may be a metaphor.  Or it may be true.

 Naturally your heart is ready to spread your existence and you are the one who hides and suppresses it.

 Poets, sculptors, painters and musicians do not exist in a world of struggle.  Only those who do not want to make millions and have little feelings are stuck.

 You must not be an unreal human being.
 To become a faithful man.

 When you fall in love with trees, mountains, rivers, seas, stars, and the whole world, when you share your feelings, love, friendship and affection with others,

 It means that you, as a faithful human being, are very close to the goal of becoming a sage.
By 
 Jagadeesh sh Krishnan is a psychologist and international Author