[10/14, 8:24 PM] Jagadeesh Krishnan: புகுந்த வீட்டில் பெண்களின் மனநிலை...
எங்க வீட்டில் புளிக்குழம்பு வச்சா போமா நீ சாப்பிடு அதை என்று சொல்லிக்கொண்டே, fridgeயை திறந்து ரெண்டு முட்டை எடுத்து ஆம்ப்லேட் போட்டு சாப்டுவேன்.
அதுவே மாமியார் வீடுனா? டக்குனு நம்ம இஷ்டத்துக்கு எல்லாம் நம்ம வீட்ல அம்மாட்ட சண்டை பண்ணுற மாதிரி மூஞ்சை தூக்கிவச்சிட்டு ஆம்லேட் எல்லாம் போட்டு சாப்பிட முடியாது. இது தான் உண்மை.(திருமணமான சில வருடங்களுக்காகவது இது பொருந்தும்)
ஒரு வேளை ஆண்கள் இப்படி நினைக்கலாம். இதுல என்ன இருக்கு? நீங்க பிறந்த வீட்டில் இருப்பது போலவே இங்கேயும் இருக்க வேண்டியது தான என்று.
எங்க? எங்க வீட்டுக்கு வந்து நீங்களே உரிமையாய் கிட்சனுக்கு போய் தண்ணீர் மொண்டு குடிங்க பார்ப்போம்?
முடியாதுல? அதே தான் பெண்களுக்கும். அந்த தயக்கம் கண்டிப்பாக இருக்கும். சில நாட்களுக்கேனும். அதுவும் அம்மாக்கள் போகும்போதே சொல்லிவிடுவாங்க அங்க போய் புளிக்குழம்புக்கு எல்லாம் மூஞ்சை தூக்கிவச்சிக்காதமா. எது குடுத்தாலும் சாப்பிடு தங்கம் உடம்பை பார்த்துக்க. சந்தோசமா இருக்கனும் என்ன?
இந்த உரையாடலின் பின் இருக்கும் இரண்டு பெண்களின் வலியும் யாருக்கும் புரிவதில்லை.
25 வருட பழக்கத்தை உடனே மாற்றிக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டு சொல்றேன் பாருங்க.
தூத்துக்குடியில் பிறந்து அங்கேயே 25 வருடம் வளர்ந்த ஒரு பெண்ணை ஈரோடு பையனுக்கு கல்யாணம் பண்ணி குடுத்துவிட்டு இரெண்டு வீட்டாரும் போய்டுவாங்க. இந்த பொண்ணு வாரத்துல நாலு நாள் மீன், ஒரு நாள் சிக்கன், ஒரு நாள் மட்டன் மீதி இருக்குற ஒரு நாளும் கருவாட்டு குழம்பு சாப்பிட்டு வளர்ந்திருக்கும்.
நம்ம ஈரோடு பையன்? ஞாயிறன்று இந்த வாரம் மீன் என்றால் அடுத்த வாரம் சிக்கன் என்று சாப்பிட்டு வளர்ந்திருப்பான். இப்ப அவனுக்கு எதுவும் மாற போவதில்லை.
அவனிடம் யாரும் புகுந்த வீட்டிற்கு வந்த பெண்ணை எப்படியெல்லாம் நடத்த கூடாது என்றோ? ஆண்கள் ஏன் கால்மேல் கால் போட்டு அமரக்கூடாது என்றோ? ஆண்கள் லெகின்ஸ் அணியலாமா சாரி சாரி அது என்ன? ஆன் பட்டு வேட்டி அணியலாமா? ஜீன் அணியலாமா என்றோ அடுக்கடுக்காக கேள்வி மேல் கேள்விகளை தொடுக்க போவதில்லை.
அந்த புள்ள பாவம் இட்லிக்கும் நேற்று வச்ச பழைய மீன் குழம்பை வச்சி சாப்ட்டு பழகிருக்கும். அந்த புள்ளய கல்யாணம் பண்ணிட்டு போய் சோத்துல சாம்பார ஊத்துனா எப்படி இருக்கும் மனநிலமை?
உண்மைய சொல்லனும்னா உள்ளுக்குள்ள அழுதுகிட்டே வெளிய சிரிச்சிட்டு இருக்கும். இது பொதுவா பெண்களுக்கே உள்ள குணம் தான். எங்கேயோ வசித்தேன் எவ்வளவு செல்லமாக வளர்ந்தாலும் எல்லாவற்றிற்கும் முற்றுபுள்ளி வைத்துவிடுகிறது திருமதியாகிய அந்த தருணம் என்று.
அப்பா ஃபீல் பண்ணக்கூடாது அவ்வளவு தான். மனுசன் பத்து வட்டிக்கு வாங்கி கல்யாணம் பண்ணி வச்சாரு இந்த புளிக்குழம்புக்கா உட்கார்ந்து அழணும்னு அதுவாவே அடுத்த நாள் எல்லா பழக்கவழக்கங்களையும் மாற்றிக்கொள்ள தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும்.
நடை பழகும் குழந்தை மாதிரி தான். புதுவீட்டிற்கு வரும் பெண்களின் நிலை. புதுவீட்டில் இங்க உட்காரலாமா? மாமனார் ஹால்ல உட்கார்ந்து பேப்பர் வாசித்துக் கொண்டிருக்கிறாரே அவங்க வெளியே கிளம்புற வரைக்கும் நாம பெட் ரூம்லையே இருப்போம் என்று தன் கால்களுக்கு தானே சங்கிலி இட்டுக் கொள்ளும் அவள் உண்மையில் அவள் வீட்டில் பாடி, பறந்து திரிந்த வண்ணக் கிழியாக இருந்திருப்பாள். கால் ஒரு இடத்துல இருக்கா பாரு? சக்கரத்தை கட்டி விட்ட மாதிரி அங்கேயும் இங்கேயும் ஓடிக்கிட்டு, போற வீட்டில் எப்படி இருக்க போறியோ என்று அம்மா திட்டியதை அசை போட்டுக் கொண்டே அந்த படுக்கையறையில் தனியாக அமர்ந்திருப்பாள். அய்யோ 7 மணிக்கு நான் ஜீ தொலைக்காட்சியில் அந்த சீரியல் பார்ப்பேன் இங்க என்ன எல்லாரும் விஜய் தொலைக்காட்சி பார்த்துட்டு இருக்காங்க. இப்படி தான், விருப்பமே இல்லை என்றாலும் இனி இவள் இந்த சீரியல் தான் பார்த்தாக வேண்டும்.
பிடிக்குதோ பிடிக்கவில்லையோ இங்க இருக்குற அக்கம் பக்கத்துவீட்டுக் காரங்க தான் இனி பக்கத்துவீட்டுக்காரர்கள் என்பதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.
எங்க பக்கத்து வீட்டு அக்கா சமையலறையில் உரிமையாக சென்று கறிவேப்பிலையை எடுத்துக் கொண்டு வருவது போல் இங்க பண்ண முடியாது.
என்ன அவ மருமகள் இப்படி இருக்கா என்று ஊர் முழுவதும் அன்றைய பேச்சு அதுவாக தான் இருக்கும்.
மாதவிடாய் நாளில் கையில் பொவோண்டா வாங்கிக் கொடுத்து, எந்திரிமா ரெண்டு வாய் சாப்பிட்டுட்டு படு என்று பெட் ரூமிற்கே சாப்பாட்டைக் கொண்டு வந்து ஊட்டி விட்டுருப்பாள் அவள் தாய். புகுந்தகத்தில்????
பால் அடுப்புல இருக்குமா, பொங்கிடாம பார்த்துக்க. அப்படியே டீ போட்டு எல்லாருக்கும் குடுத்துடு. மறக்காம பூனைக்கும் கொஞ்சம் பால் எடுத்து வச்சிடுமா. சின்னவன் வேற டீ குடிக்க மாட்டான் அவனுக்கு மட்டும் பூஸ்ட் போட்டு குடுத்துருமா. நைட்க்கு சப்பாத்தி செஞ்சிடுவோமா?
ம்ம்ம்ம் சரி அத்தை. ..
அப்படினா கையோட கையா ரெண்டு உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு ரெண்டு விசில் வந்ததும் இறக்கிடுமா. மாவு வேற பிசையனும்........
நீண்டுகொண்டே போகும் அவள் வேலை. காலை பிடித்து யாரேனும் சற்று தடவி விட்டு நெடி எடுத்து விட மாட்டார்களா என்று மனம் ஏங்கினாலும், அதையும் மனதுக்குள் மட்டும் வைத்துக்கொண்டு குக்கருக்கு விசில் போட்டுக் கொண்டிருப்பாள். அருகில் ஆறிய டீ அவளைப் பார்த்து சிரிக்கும். வீட்டில எப்படி எல்லாம் திமிரு பண்ணுன? எப்படி? எப்படி?
மேடம் டீயை கையில கொண்டு வந்து கொடுத்தால் தான் எந்திரிப்பாங்க. அதுலையும் சூடு கொஞ்சமும் குறைஞ்சிருக்க கூடாது. ஆவி பறக்கனும்.....
அம்மாவின் அருமை அப்பொழுது தான் புரிய தொடங்கியிருக்கும் அவளுக்கு. ஓடிச் சென்று கல்யாண ஆல்பத்தில் இருக்கும் குடும்பத்தினரின் போட்டோவை பார்க்கையில் அவளையும் அறியாமல் கண்ணீர் வடியும்.
அழுகவும் நேரம் இல்லை இங்கு அவளுக்கு. குக்கர் ரெண்டாவது விசில் அடிக்குது பாருமா. என்ன பண்ணிட்டு இருக்கா இந்த பொண்ணு? எங்க போனா? என்று பின்னாடியே தேடி வந்துவிடுவார் அத்தை.
வந்துட்டேன் அத்தை. ரெஸ்ட் ரூம் வந்தேன் என்று சொல்லிவிட்டே கண்ணாடியை பார்த்து அழுத தடம் தெரியாமல் முகத்தை துடைத்து செல்வாள்.
போன் ரிங் ஆகும். தோழி போன் செய்கிறாள் என்று தெரியும் அவளுக்கு . அவளுக்கென்று தனி காலர் டியூன் வைத்திருப்பாளே. அழைப்பை எடுத்து பேச கூட முடியாது இவளால்... ஆம் இப்பொழுது ரெண்டு கைகளாலும் மாவை பிசைந்து கொண்டிருப்பாள்.
வேலைக்கு செல்லும் பெண் என்றால் கொடுமையோ கொடுமை. என்னைக் கேட்டால், பெண் சுதந்திரம் பெண் சுதந்திரம் என்று பேசி பேசி பெண்களுக்கு வேலைப் பளு அதிகமானது தான் மிச்சம் என்பேன்.
வெளியில் 9 மணி நேர வேலை முடித்து வீட்டிலும் அத்தனை வேலைகளையும் பார்த்து, நைட் 11 மணிக்கு படுக்க சென்று காலை 5 மணிக்கு எழுந்திருந்து குடும்ப தலைவிகள் ஓடும் ஓட்டம் என்ன?
சொல்லி மாளாது. பேச்சுலர்ஸ் நமக்கே முழுடா 8 மணி நேரம் தூங்க கிடைப்பதில்லை. அத்தனை பணி சுமைகள். காலை சமைத்துவிட்டு அப்படி அப்படியே போட்டுவிட்டு சென்ற பாத்திரம், சேரில் குவிந்து கிடக்கும் மடிக்காத துணி, பார்ப்பதற்கே அருவருப்பாக இருக்கும் டைனிங் டேபிள், சிங்க்கில் குவிந்து கிடக்கும் பாத்திரங்கள், பெருக்காமல் கிடக்கும் வீடு (பாவம் அவள் குழந்தைக்கு தூசி அலர்ஜி) அதனால் அணு அளவு தூசி இருந்தாலும் துடப்பத்தை தூக்கிவிடுவாள்....
எனக்கெல்லாம் வேலைக்கு செல்லும் குடும்ப தலைவிகளை பார்த்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது.
ஒரு மரத்தை வேரோடி பிடுங்கி இன்னொரு இடத்தில் நடுகையில் வேர் பிடிக்க நாட்கள் ஆக தானே செய்யும்?
பெண்களுக்கு மட்டும் இதயம் என்ன இரும்பிலா செய்யப்பட்டிருக்கிறது?
By
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[10/14, 8:25 PM] Jagadeesh Krishnan: The mood of the women in the house ...
I will open the fridge and take the awesome egg and put it in the template and eat it.
Is that the mother-in-law's house? Takunu can't put everything in our house and eat everything to our liking. That's the decent thing to do, and it should end there.
Maybe men think like this. What's in it? That you should be here as well as in the house where you were born.
Where? Where can we come home and see for yourself and go to the kitchen and drink some water?
Can't? The same goes for women. That reluctance will definitely be there. For a few days. That too when the moms go to tell me if you can go there and put everything in the pickle. Eat whatever you want to see the health of gold. What could be happier?
No one understands the pain of the two women behind this conversation.
25 years of habit should be changed immediately. Take a look at the example.
A woman who was born in Thoothukudi and grew up there for 25 years is getting married to an Erode boy and the two go home. This girl has grown up eating fish four days a week, chicken one day and mutton broth one day for the rest of the day.
Our Erode boy? If this week was fish on Sunday I would have eaten chicken next week and grown up. Nothing is going to change for him now.
How could he not treat the woman who came to the house where no one had entered him? Why shouldn't men sit cross-legged? Can Men Wear Leggings Wing Wing What is it? Can I have a silk dress? The question of whether Jean can be worn or not is not going to raise questions over and over.
Vacci is accustomed to the old fish broth that was added yesterday to that dirty sin itli. What is the state of mind after the marriage of Pullaya and Sothula Sambara Uthuna?
To tell the truth, the inside is crying and the outside is smiling. This is a characteristic of women in general. No matter how pet I grew up living somewhere that moment that puts an end to everything Ms.
That's all Dad should not feel. Manusan bought ten at interest and got married.
That's the kind of kid who walks. The status of women coming to the new home. Can I sit here in the new house? Uncle Hall is sitting and reading the paper and chaining himself to his feet so that we can stay in the bedroom until he leaves the room. See if the foot is in one place? She would sit here and there alone in the bedroom, running around like a wheelbarrow, stirring up what her mother had told her about how to stay at home. Alas at 7am I will watch that serial on Zee TV and everyone here will be watching Vijay TV. This is how it is, although she has no desire to watch this serial anymore.
Like it or not, you have to accept that the neighbors here are no longer neighbors.
It can't be done here like the sister next door who goes right into the kitchen and picks up the curry leaves.
That would be the talk of the town that day about what her daughter-in-law might be like.
On the day of menstruation, her mother would buy a povonda in her hand and bring it to the bedroom and feed it so that Endirima could have a good mouthful. புகுந்தகத்தில் ????
To see if there is a milk stove, Pongidama. Put the tea as it is and give it to everyone. Do you want to take some milk to the forgetful cat? Chinnavan will not drink any other tea. Shall we make chapati red for the night?
Hmmm ok aunty. ..
Then Kaiyoda Kaiya put the potatoes in the cooker and let it die when the awesome whistle came. Flour and other dough ........
Her work that goes on and on. She kept whistling to the cooker, keeping in mind that she would not let anyone grab her leg and take a nap. Tea cooled nearby and smiled at her. How did everything go wrong at home? How? How?
Only if you bring Madame Tea by hand will you be enthralled. The heat should not be too low. The spirit flies .....
Only then did she begin to understand her mother's awesomeness. Tears well up in her eyes as she runs away and looks at the family photo in the wedding album.
No time to cry for her here. Cooker Second Whistle Baruma. What is this girl doing? Where did you go Aunty will come looking for that later.
I have come aunty. After telling her that she had come to the restroom, she looked in the mirror and wiped her face without knowing the pressure.
The phone is ringing. She knew her friend was calling. Have a separate collar tune for her. She can't even take the call and talk ... yes now she is kneading the dough with her bare hands.
If the woman who goes to work is cruel or cruel. If you ask me, I would say that women's freedom is women's freedom and that the workload for women is too much.
After finishing 9 hours of work outside and looking after all the work at home, going to bed at 11pm and getting up at 5am What is the flow of family heads running?
சொல்லி மாலாது. Bachelors do not get us a full 8 hours of sleep. So many workloads. The utensil that was left after cooking in the morning, the folded cloth that was left in the chair, the dining table that was disgusting to look at, the utensils that were piled up in the sink, the house that was not multiplied (sin her baby is allergic to dust) so she would lift the pillow even if it was atomic size dust ....
It hurts so much to see family heads going to work for all of me.
Will it take days to uproot a tree and plant it in another place?
What heart is made of iron only for women?
By
Jagadeesh Krishnan is a psychologist and international Author
No comments:
Post a Comment