[3/7, 11:36 AM] 98 41 121780: அடையாளப்படுத்திக் கொள்ளாமல் இரு
ஆணவம் ஒரு செயலுடன், ஒரு குணநலனுடன், தன்னை
அடையாள படுத்திக் கொள்கிறது. ஒருவர் கிளார்க், ஒருவர் கமிஷ்னர், ஒருவர்
தோட்டக்காரர், ஒருவர் கவர்னர் என இருந்தால் அவை யாவும் செயல்கள். நீங்கள் செய்பவை
அவை, நீங்கள் அல்ல.
யாராவது ஒருவர் நீங்கள் யார் என உங்களிடம்
கேட்டால் நீங்கள் உடனே நான் ஒரு என்ஜினீயர் என்று கூறுகிறீர்கள்.
உங்களது கூற்று மிக தவறானது.
நீங்கள் எப்படி என்ஜினீயராக முடியும். அது நீங்கள் செய்வது,
நீங்களல்ல. உங்களது செயல்களுடன் மிகவும் ஆழ்ந்த தொடர்பு கொள்ளாதீர்கள். ஏனெனில்
அந்த செயல் உங்களை அடிமைப்படுத்திக் கொண்டு விடும்.
நீங்கள் ஒரு டாக்டரின் வேலையையோ,
என்ஜினீயரின் வேலையையோ, கவர்னரின் வேலையையோ செய்யலாம்.
ஆனால் அதனால் அதுதான் நீங்கள் என்றாகிவிடாது. நீங்கள் என்ஜினீயர் வேலையை விட்டுவிட்டு ஒரு பெயிண்டர் ஆகலாம், பெயிண்டர் வேலையை
விட்டுவிட்டு ஒரு தெரு கூட்டுபவராக மாறலாம்.
நீங்கள் அளவற்ற ஆற்றலுடையவர்.
ஒரு குழந்தை பிறக்கும்போது இருக்கும் அளவற்ற
ஆற்றல் மெதுமெதுவாக குறைந்து, அது ஒரு குறிப்பிட்ட திசையில் நின்றுவிடுகிறது.
ஒரு குழந்தை பிறக்கும்போது பல்வேறு பட்ட ஆற்றலுடன் இருந்தாலும் விரைவில் அது
தேர்ந்தெடுக்க துவங்கி விடுகிறது.
நாம் அதுபோல தேர்ந்தெடுக்க துணை புரிகிறோம்.
அப்போதுதான் அது புகழடைய முடியும்.
அளப்பரிய ஆற்றலுடன்தான் எல்லோரும் பிறக்கின்றனர், ஆனால் ஒரு சிலர் மட்டுமே அளப்பரிய ஆற்றலுடன் இறக்கின்றனர் என்ற ஒரு சீனப் பழமொழி உண்டு.
மனிதன் அளவற்ற ஆற்றலுடன் பிறந்தாலும் இறக்கும்போது குறுகி
விடுகிறான்.
நீ பிறக்கும்போது பிரபஞ்சமாக இருக்கிறாய், இறக்கும்போது ஒரு டாக்டராக,
ஒரு விரிவுரையாளராக, ஒரு என்ஜினீயராக இறக்கிறாய். வாழ்வை நீ இழந்து விடுகிறாய்.
எல்லா சாத்தியங்களும் உள்ள திறந்துள்ள நிலையில், எல்லா ஆற்றல்களும் கிடைக்கக்
கூடிய நிலையில் நீ பிறக்கிறாய்.
ஒரு விரிவுரையாளராகவும், ஒரு விஞ்ஞானியாகவும், ஒரு
கவிஞனாகவும், மாறலாம். கோடிக்கணக்கான வாய்ப்புகள் உள்ளன. எல்லா கதவுகளும் திறந்துள்ளன.
பின் மெதுமெதுவாக, ஒரு விரிவுரையாளராக – கணக்கு பேராசிரியராக, ஒரு தேர்ச்சி பெற்ற பேராசிரியராக, அதில் நிபுணத்துவம் பெற்றவராக மாறி விடுகிறாய்.
நீ குறுகி கொண்டே சென்று விடுகிறாய். நீ குறுகி கொண்டே செல்லும்
ஒரு குகை வாயில் போல மாறி விடுகிறாய்.
ஆகாயத்தை போல பிறந்து ஒரு குகை போல மாறி,
பின் அதிலிருந்து நீ வெளியே வருவதேயில்லை.
அடையாளப்படுத்தி கொள்ளாமல் வாழ், பணி செய் ,, வாழ்வே சொர்க்கமாகும் ..
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[3/7, 11:36 AM] 98 41 121780: Do not identify
Arrogance with an action, with a character, itself
Identifies. One clerk, one commissioner, one
Gardener, if one is the governor they are all actions. What you do
They are, not you.
Someone tells you who you are
If asked you immediately say I am an engineer.
Your claim is very false.
How can you become an engineer. That's what you do,
Not you. Do not get too deeply involved with your actions. Because
That act will enslave you.
If you work as a doctor,
Can do the job of an engineer or the job of a governor.
But that does not mean that you are. You can leave the engineer job and become a painter, painter job
Can leave and become a street collector.
You are infinitely powerful.
Infinite to be present at the birth of a child
The energy slowly decreases and it stops in a certain direction.
As soon as a baby is born it has different degrees of energy but sooner
Starts to select.
We support the selection as such.
Only then can it be glorified.
There is a Chinese proverb that says that everyone is born with tremendous power, but only a few die with tremendous power.
Man is born with infinite energy but shrinks when he dies
Leaves.
You are the universe at birth, as a doctor at death,
You die as a lecturer, as an engineer. You are losing life.
With all possibilities open, all energies are available
You are born with the potential.
As a lecturer, as a scientist, a
Become a poet, too. There are millions of opportunities. All the doors are open.
Then slowly, you become a lecturer - a professor of accounting, a professor, a specialist in it.
You keep getting shorter and shorter. You will keep shrinking
You become like the mouth of a cave.
Born like the sky and transformed into a cave,
Then you never get out of it.
Live, work without being identified, life is heaven
By
Jagadeesh Krishnan is a psychologist and international Author
No comments:
Post a Comment