Sunday 22 September 2019

Date of birth astrology

பெண்கள் பிறந்த கிழமை ஜாதக பலன்
1. ஞாயிற்று கிழமை பிறந்த பெண்களுக்கு

"அறுசுவை யறிந்தநல்லாள் அனல்கொண்ட தேகியாகும்

பெருமைசேர் கீர்த்திரூபம் பேசுவள் கடினவாக்கு

தருகுவள் பதிக்குயின்பம் தருமநன் னடக்கைபின்னால்

வருமென புத்திரலாபம் வழ்த்தினார் கதிர்வாரத்தே"

சூரிய வாரத்தில் உலகில் பிறந்த பெண்ணானவள் கடினமான சுபாவமும், சுகவாசியும், பிரகாசமான முக அமைப்பும் அருசுவை ருசியினை நன்கு அறிந்தவள், உஷ்ணமான தேகமும், கணவனுக்கு பிரியமானவள், தர்ம குணமும், நல்ல நடவடிக்கையும், முதிர்ந்த காலத்தில் புத்திர விருத்தியும் உடையவளாய் இருப்பாள்.

2. திங்கட்கிழமை பிறந்த பெண்களுக்கு

" திங்கட்போல் தேகிபாக்கியம் தினமுஞ்சந் தோஷபுத்தி
மங்கள குணங்கள்கற்பு மகவுபெண் போக முள்ளாள்
நங்கையா பாணம்வாசந் நளிலும் தவறாள்நித்தம்
கங்கையா டுவளேயென்று கணிதநூ லுரைத்தவாறே "

சந்திரனுடைய நாளாகிய திங்கட்கிழமை பிறந்த பெண் சந்திரனைப் போல் குளிர்ந்த தேகம், பாக்கியம், உத்தமீ, மனசந்தோசம், ஆடை, ஆபரணங்களோடும் கூடி வாழ்பவள் மேலும் பல நற்குணங்களும் பெண் சந்ததியுடையவள்.

3. செவ்வாய் கிழமை பிறந்த பெண்களுக்கு

"பார்சுதன் நாளில்வந்தப் பாவைநான் வடிவுசாந்தம்

நேர்சுகம் சனகரில்லம் நித்தமுங் குறைந்தசெல்வம்

பார்வையுங்  கடினவாக்குப் பகருவள் சினத்தாள் சற்று

சோர்வுள நெஞ்சம்செம்மை சுந்தரி யாடையாமே"

அங்காரகனுடைய நாளான செவ்வாய் கிழமையில் பிறந்த பெண்கள் நல்ல அழகுடையவர்கள், பிறர் சுகிக்கப்பாராள், பொறுமை, விரோத சுவாபம் உடையவரய், தான் பிறந்த இடத்தில் நாளுக்குநாள் குறைவான செல்வம், சிகப்பு ஆடை தரிப்பாள், என்றும் தன்னை இளமையாக எண்ணிக் கொள்பவளாய் இருப்பாள்/.

4. புதன் கிழமை பிறந்த பெண்களுக்கு

"சிந்தையுந் தருமவாக்குச் சீருள வித்தைநல்லாள்

புந்தியில் குரோதமின்றிப் புகலுவள் சத்தியமாக

நிந்தையில் சேராள்கற்பு நிலைத்திடுந் தேகியாவாள்

புந்திநா ளுதித்தமங்கைப் புண்ணிய தவத்தாளென்றார்"

புதன் கிழமை ஜனனமான பெண்களுக்கு தரும புத்தி, சத்தியமான வாக்கு, வித்தை நற்குணம், எப்போதும் சந்தோசமான மனம், அன்பான வார்த்தைகள், சுக துக்கத்தை சமமாக எடுத்துக் கொள்ளும் மனோ பக்குவம், கெட்ட வழியில் செல்லாதவள், கற்பை நிலைகாக்கும் புண்ணியவதி ஆவாள்.

5. வியாழக்கிழமை பிறந்த பெண்களுக்கு

"செய்யாள்துற் காரியன்கள் சேமமே நிலைக்குமில்லம்

உய்யவனோ டிணைபிரியா ளுத்தமியென் றுலகுமெய்க்க

பொய்மையு மில்லையென்றும் புகலுவாள் தருமநீதி

மெய்மைநன் னடக்கையென்பார் மேதினி குருவாரத்தாள்"

குருவாரமென்னும் வியாழக்கிழமையில் ஜனனமான பெண்ணான நீங்கள் மனமரிந்தும் கூட பாவங்கள் செய்யமாட்டீர்கள். தன தான்ய செல்வங்கலள் பெற்றிருப்பீர்கள், கணவனை என்றும் பிரியா மனமுடையவர், உத்தம மான குணமுடையவள், பொய்சொல்லாள், தர்மநீதி வார்த்தை கூறுபவள்.

6.வெள்ளிக்கிழமை பிறந்த பெண்களுக்கு

"சுக்கிர வாரந்தன்னில் சுந்தரி யுதயமானால்

மிக்கவா பரணபிரீதி மேன்மையவா கனமுங்கற்பு

தக்கதோர் தனங்கள்செல்வம் தரணியில் நிலைக்குமென்றார்

முக்கியமுள்ளா ளெங்கும் முமலர் வாக்குநன்றாம்"

திருமகளுக்கு உகந்த சுக்கிர வாரத்தில் (வெள்ளிகிழமை) பிறந்த பெண்களுக்கு ஆடை ஆபர்ணங்களில் அதிக ஆர்வமும், வாகன ஆசையும் பெற்றிருப்பார்கள், பதிவிரதை, உத்தமியாகவும், தனம், தான்யம், செல்வம் நிறைந்து இருப்பார்கள், பிரியமான முகமுடையவள், அன்பான செல்லுடையவளாகவும், அனைவரையும் எளிதில் நம்பும் சுபாவம் உடையவள்.

வெள்ளி கிழமை பெண்குழந்தை பிறப்பது மிகவும் சிறப்பானது.

7. சனிக்கிழமை பிறந்த பெண்களுக்கு

"மந்தனில் லழுக்குவாடை மனமதில் பயமுமில்லாள்

நிந்தையும் பிறர்விரோதம் நிச்சய மில்லாநெஞ்சம்

அந்தமும் தயையுமீனம் அல்பபுத் திரராமென்றார்

வந்ததே யிருக்கும்வியாதி வையகந் தன்னிற்றானே"

சனிக்கிழமை பிறந்த பெண்மணியானவள் அழுக்குத் துணிகளையணிதல், பயமில்லாமல் சஞ்சரித்தல், பிறரைத் தூஷிதல், ஜனவிரோதம் சபல சித்தம் அழகில்லாள் அற்ப புத்திரர் விசுவாச மில்லாள், வியாதியுள்ள சரீரமுடையவளாம்.

இத்தகவல் கொலும்பு ஜாதக புத்தகத்தில் இருந்து சேகரிக்கப் பட்ட ஓர் பொது பலன்கள் மட்டுமே, அவரவர் பிறந்த கிழமை, நேரம் மற்றும் நட்சத்திரங்களை பொருத்தே சரியான பலன் தெரிந்து கொள்ள முடியும் என்பதை மனதில் நினைவுக்கொள்க
பெண்கள் பிறந்த நட்சத்திர பலன்கள்

அசுவனி

"அழகுநற் பார்வைபுத்தி அகமகிழ் பெருத்தஉந்திக்

கழருவா ளினியவாக்குக் காதலாள் சனசகாயம்

குழவியர்த் தோடந்தேவ குருவிச வாசமுள்ளாள்

சழக்குள மதத்தாள்வாசி சனித்தவள் பலநிதாமே"

                அசுவனி  நட்சத்திரத்தில் அவதரித்தால் அழகுள்ளவள் நல்ல பார்வை மனசந்தோஷம் சற்று பெருத்தவயறு பிரியமான வாக்கு சனசகாயம் விசுவாசம் நற்பத்தி தேவதா குருபக்தி அற்ப சந்தானதோஷம் பொருளகங்காரம் உள்ளவளாம்.

பரணி

"பரணியிலுதித்த மாதுபலவித சருக்கு வெண்ணம்

அரணுள மேனிதன்னுள்  ளமர்ந்திடுஞ் சுகத்தாள்முன்னம்

அரியவர் கூட்ட முள்ளா ளழுக்குளறுயி லிலாசை

தரித்திரதர்ப் புகழ்ச்சி தந்தைதாய்க் கினியளாமே "

                 பரணி நட்சத்திரத்தில் ஜனனமானவளுக்குப் பல விதமான கோரிக்கைகளோடு கூடியவெண்ணம் அழகுள்ள சரீரம் தனக்குள் சுகம் பெண்கள் கூட்டமுள்ளாள் அழுக்கான ஆடையைத்தரிப்பாள் சற்று தரித்திரம் தன்னைத்தான் புகழ்தல் தாய் தந்தைக்கு பிரியமானவள்.

கார்த்திகை

"கார்த்திகை நாளில் வந்தகன்னியின் குணத்தைக்கேளீர்

கீர்த்தியாள் சனவிரோதி கிருபணி வலிவதீனம்

சீர்த்தியும் மில்லள்கோபி சிடுசிடென் றிடுவாள்சண்டை

பார்த்திபன் மனைவியாம் பயநிலை பகருவீரே"

                 கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண் சனவிரோதி கீர்த்தியுள்ளாள் வலிவு குறைந்த சர்ரீரம் கொடுப்பதிலும் செலவிலும் ரெம்பவும் ஹினமானவள் பரிசுத்தமில்லாள் முன்கோபம் சிடுசிடுப்புடன் சண்டையிடுவாள் பந்துக்களிடம் அன்பில்லாள் புருஷன்அரசனாயிருப்பினும் இவளுக்கு சுகமில்லை.

ரோகிணி

"பதிதனக் கினியாள்சுத்தம் பக்ருவோம் பெருத்ததேகம்

சதிருடன் பெற்றோர்வாஞ்சை சந்ததி விருத்தியாயுள்

விதியுள குலத்தாள்கீர்த்தி விழிமயி ரழகிபின்னால்

சதியுள சஞ்சலங்கள் சாருமே ரோகணிநாள்."

               ரோகிணி நட்சத்திரத்தில் உதித்த பெண் புருசனுக்குப் பிரியம் சுத்தம் சற்று பெருத்ததேகம் தந்தை தாயருக்கு ஆசையுள்ளவள் புத்திர விருத்தி தீர்க்காயுள் குலவர்த்தனீ மானவதி செல்வமுள்ளவள் நல்ல ரூபம் விழியும் மயிலும் அழகுடையவள் பின்னால் சற்று சஞ்சல தோஷமும் உள்ளாள்.

மிருகசீரஷம்

"மானிநல் லுருவம்வாக்கு மதுரமா பரணசத்திரம்

தானியம் பிள்ளைப்பேறும் தருமநற்ப் பொருள்பால்விர்த்தி

ஈனமில் குலமும்சீலம் மிசைந்திடும் யோகம்றன்பால்

நானிலத் திங்க நாளின் நங்கையாள் குணமிதாமே"

               மிருகசீரஷ நட்சத்திரத்தில் பிறந்த பெண் மானம் நல்ல ரூபம் பிரியமாகி மதுரமான வார்த்தை வஸ்திராபரணம் சாஸ்திர ஞானம் பலபதங்களுக்கு ஒரு வார்த்தை சொல்லுவாள் பசு தான்னியம் பொருள் சந்தன விர்த்தி தருமகுணம் நல்ல வம்சம் ஆசாரம் தன்னால் பிறந்த இடத்திலும் பதிக்கும் யோகம் உண்டாம்.

திருவாதிரை

"பித்தசீ தளமாந்தேகம் பின்சுக முடையாள்கி லேசி

சித்தசஞ் சலமுங்கெட்ட செய்கைகள் பலவேயுள்ளாள்

மெத்தநற் பணியேசெய்வாள் மேன்மையு மு றந்தநெஞ்சம்

நித்தமும் சமரில்லூக்கம் நிலைக்குமா திரையின்நாளே"

              திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் பித்த சீதள சம்பந்தமான சரீரம் முன் கஷ்டமமும் பின்னால் சுகம் மனசஞ்சால்ம் சற்றுவிதனம் தகாதநடபடிக்கை காரியங்களை வெகுலேசாக செய்குவாள். அபிமானமுள்ளாள் உரத்த நெஞ்சம் சதாகலகம் செய்வதில் விருப்பம் உடையவள்.

புனர்பூசம்

"களிப்புளாள் பிறர்சொற்கேட்பாள் கற்பிநள் பொறுமைதான

மளித்திடும் பாக்கியம்பக்தி மனுபவித் திடுநன்நனமை

நளிருடன் புண்ணியங்கள் நங்கையுஞ் செய்வாள் நித்தம்

ஒளியுளா ளதிதிநாளி லுதித்தவள் சரிதமிதே"

               புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் அபிமானம் பிறர் சொல்கேட்டல் பதிவிரதை, தானதர்மம் செய்யும் பாக்கியம் நல்ல புத்தி சுகபோகி புண்ணியம் செய்யும் ஆவல் எவருக்கும் பிடித்தமானவளாள்.

பூசம்

"பணிகளில் விருப்பம்தேவ பதிவிசு வாசம்மற்றோர்

அணிகலம் பூண்டதேகம் மழகுளா ளின்பவாக்கு

கணித்நூல் சுரத்ங்கற்றாள் காசினி மகவுமுள்ளாள்

துணிவுள தருமசிந்தை தோகையர்ப் பூசநாளே"

              பூசம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் சோம்பலின்றி எல்லா வேலைகளையும் செய்ய ஆசை தெய்வபக்தி பதிவிசுவாசம் எப்பவும் ஆபரணம் அணிந்த அழகுடைய சரீரம் இன்பமான வார்த்தை கணக்கு விவகாரங்கள் தெரிந்தவள் காமநூள் படித்தவள் சந்தான விருத்தி தைரியத்துடன் தர்மம் செய்யும் புத்தியுடையவள்.

ஆயில்லியம்

"பிரியமுங் கலகம்பொய்யும் பிதற்றிடுங் கடினவாக்கு

அரவினி லுதித்தமங்கைக் கதிகமாம் விதனமெய்யும்

நெறியிலாள் புதல்வான நீண்டதோர் கோபங்கொள்வாள்

பரிசன ருறவுகொள்ளள் பாவமுன் கன்மதோஷம்"

               ஆயில்லியம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் கலகப்பிரியை பொய்யுரைப்பாள் கடூரமான வாக்கு அனேகவிதமான விதனம் குரூரத்தோடு பாபகாரியஞ் செய்பவள் பந்துஜன விரோதம் நீடித்த கோபமுள்ளவள் தேகவிளைப்பு பிணி பீடையும் முன்செய்தவினையால் புத்திரதோஷ முடையவளாம்.

மகம்

"உத்தமி சாத்ரங்கற்றா ளுலகங்கொண் டாடும்மெய்யாள்

பத்தியாங் குருக்கள்தேவர் பதியுடன் போகபாக்கியம்

நித்தமு மனுபவிப்பாள் நிலவுபோல் பொருளாள்புண்ணியம்

மெத்தவுஞ் செய்துதேக மிளைத்தவள் மகத்திநளே"

              மகம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் நன்னடைக்கையுடையவள் சாத்திரகேள்வி உலகம் கொண்டாடும் மெய்யாள் பெரியோரிடத்தும் தேவதைகளிடத்தும் கண்வரிடத்தும் பக்திவிசுவாசம் உள்ளவள் ராஜயோக பாக்கியத்தை அனுபவிப்பாள் சந்திரனை போல சில காலம் குறையவும் விர்த்தியாகவும் உள்ளபொருளாள் புண்ணிய காரியங்கள் செய்வதால் சற்று இளைத்த சரீரம் உள்ளவளாம்.

பூரம்

"சந்திர காந்திதேகஞ் செய்நன்றி மறவாள்காமீ

தந்திர வசனம்புத்தித் தனயரும் மிகவேயுண்டாம்

வந்துதோர் குடும்பவீனம் வளர்ந்திடும் பாக்கியங்கோபி

புந்தியும் மிகவேயுள்ளாள் பூரத்தி லுதித்தாளுக்கே"

               பூரம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் சந்திரனை போல் குளிர்ந்து ஒளியுள்ள சரீரம் உபகாரம் மறவாமை காமத்திலதிக ஆசை பாக்கிய விர்த்தி தந்திரமாக உரைக்கும் புத்தி புத்திர சம்பத்துள்ளாள் பிறந்த குடும்பம் சற்றுநசித்தல் முற்கோபம் பெருத்த வயறு உள்ளவள்

உத்திரம்

"உத்திரந் தனிலுதித்தா ளுயர்குணம் பிரியவாக்கு

சத்திய முரைக்கும்நேர்மை சற்குணந் தருமசசிந்தனை

நித்தமுங் குடும்பம்த்ன்னில் நிரணய நோக்குமெய்யும்

மெத்தென உயர்ந்ததேகி மேன்மையாள் போகியாமே"

             உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் நல்லோர் புகழும்படியாகிய நற்குணங்கள் நயமானவாக்கு சத்தியம் பொறுமை சம்சாரவிசியத்தில் தகுமானபார்வை உயர்ந்ததேகம் சுகீ கெளரவம் தருமபுத்தி பர்த்தாவுக்கு இவளாற் செல்வம் விர்த்தியாகும்.

அஸ்தம்

"பொறுமையும் முகங்கண்காது பொருத்தமா மழகுகற்பு

அருமைசேர் சுகசரீரம் மாசாரம் தன்முமுள்ளாள்

வறுமையுஞ் சிலநாள்கோபி வைராக்கிய திடமாம் புத்தி

இருமையாந் தன்காரியத்தி லிட்டமாமத்தாளே"

           அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் பொறுமை கை கண் காது இவைகள் பொருதமான அழகு பதிவிரதை சுகசரீரம் ஆசாரம் தன்முள்ளவள் சில காலம் தரித்திரம் அனுபவிப்பாள் திடமான வைராக்கிய புத்தி தன் காரியதிலேயே நோக்கமுள்ளவளாம்.

சித்திரை

"சித்திரை தோய்வுநாளில் சுகமில்லாள்வி

சித்திரா பரண்ரூபவம் சிட்டருந் தேவபக்தி

நித்திரை பொருளுமற்பம் நிந்தைசொல் லதிகவாசை

மெத்தநன் வளர்நாளாகில் மேன்மையாய் மகிழவாழ்வாள்"

            சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த பெண் சுகமில்லாதவள் விசித்திராபரணமும் ரூபமுள்ளாள் தேய்பிறையில் சதுர்த்தசி திதியோடு சித்திரை நட்சத்திரமும் சேர்ந்த நாளில் பிறந்தவள் விஷகன்னிகை என்று சொல்லப்படும். மேல்கண்ட நாள் வளர்பிறையானால் தரிதிரம் தேவதாபக்தி சீலம் அற்பநித்திரை பிறரைப் பரிகாசஞ்செய்தல் சனபிரீதி உள்ளவள்.

சுவாதீ

"புத்திரர் நல்லபுத்தி பொருந்திய கீர்த்திசினேகம்

சத்திய வாக்குச்செல்வம் சாதுநல் லுறவுரூபம்

பத்தியாள் பதிக்குயின்பம் பகர்ந்திடும் பணிகள்மெள்ள

உத்தமீசோதிநாளி லுத்தவ னின்னவாறே"

                சுவாதீ நட்சத்திரத்தில் பிறந்த பெண் சந்தானவிர்த்தி யுக்தியாக சொல்லும் புத்தி சத்தியமுறைப்பாள் தனமுளாள் கீர்த்தி பெரியோர்கள் சினேகம் பொறுமை அழகிய பதிபத்தி இன்பமானவள்.

விசாகம்

"ஒளியுள யழகுமேனி உயர்விரதந் தருமசிந்தை

களிப்புடன் தீர்த்தமேகக் கன்னியும் விருப்பமுள்ளாள்

துளிருள மரத்தைப்போல துவளிலா தனதான்னியங்கள்

நளிருடன் பெற்று வாழ்வாள் நங்கைலை யாசிநாளே"

              விசாகம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் அழகு பொருந்திய ஒளிவீசும் சரீரம் விருததிகளிலும் த்ருமத்திலும் புத்தி புண்ணிய தீர்த்த யாத்திரை விருப்பம் அழிவில்லாது அமைந்த செல்வமுள்ளவளாம்.

அனுஷம்

"வேந்தனென் றொக்குஞ்செல்வம் வேழமாம் நடையும்புத்தி

சாந்தமும் வாஞ்சைநல்ல சாத்திர கேள்வி மேன்மை

காந்தையு மழகிகற்பு கணவனின் சுகமில்லாதாள்

போந்தையி லுதித்தநல்லாள் புசிப்பளே இறைச்சியென்றார்"

                அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் அரசனுக்கு சமமான ஐஸ்வரியம் நல்ல புத்தியானையைப் போல் நடை பொறுமை ஜனங்களிடத்து ஆசை தருமநூல் கேள்வி பெருமை அழகிய கற்புள்ளாள் பதிபத்தி கணவன் சுகமல்பம் மது மாமிசங்களை புசிக்கும் குணமுள்ளவளாம்.

கேட்டை

"நன்விநய குரோதசாத்திர நம்பிக்கை சற்றுமில்லாள்

பன்மிசை புத்திரபாக்கியம் பலித்துமுன் பொருளுமுள்ளாள்

கன்னியின் வாக்குநல்லோர் களித்திட புகல்வள்கோபீ

பின்னிடை துக்கமுள்ளாள் பிறந்த்து கேட்டைநாளே"

              கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த பெண் நல்வணக்கம் மனதில் குரோதம் சாத்திரங்களில் நம்பிக்கை சற்றும்மில்லாதவள் புத்திரவதீ முன்சம்பத்துள்ளாள் எவரும் கேட்கத்தகுந்த வார்த்தை யுரைப்பாள் முங்கோபம் பின்னிடை சற்று தரித்திரம்முள்ளவளாம்.

மூலம்

"சாத்திர திறமையற்பச் செளக்கியங் கைம்பெண்ரோகி

பாத்திரம் நீசபுத்தி பைங்கிளி பிறரைச்சேர்வாள்

நேத்திர மழகுமானி நிதியுள்ளாள் தரித்திரயோகம்

கோத்திரத் திவட்குயீனம் கோதிலாள் மூலத்தாளே"

               மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் சாத்திரகேள்வி அற்பசெளக்கியம் வைதவியம் வியாதிக்குப்பாத்திரமானவள் நீசபுத்தி பாஜனபோகிகுலவீனம் அழகிய மானமுள்ளாள் பொருளிருந்தும் சற்றும் தரிதிர யோகமுடையவள்.

பூராடம்

"புண்ணிய கருமத்தாசைப் புரிகுவள் பலகாரியங்கள்

நண்ணிய குலத்தில்கீர்த்தி நவிலுவள் சத்தியவாக்கு

எண்ணிய படியேசெய்வா ளெதிரிலா வலுத்ததேகம்

மண்ணினிலுடையகுலத்தாள் மனதில் தருமவழ்வே"

              பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் புண்ணியமான காரியங்கள் செய்வதில் விருப்பம் வீட்டில் எல்ல வேலைகளையும் செய்வாள் குலத்திற்கு நன்மை சத்தியமுரைப்பாள் தன்னிஷ்டப்படி செய்யத் த்குந்த வலிவுள்ள சரீரம் அழகிய கண் தர்ம புத்தியுள்ளவளாம்.

உத்திராடம்

"உறவின ருள்ளவீடு உயர்குல குடும்பமேன்மை
பறவிய செல்வயோகம் பதிக்குற வதிகவாஞ்சை
அறவர்கள் பத்திமிக்க அன்புளாள் கற்பின்மங்கை
கறவைகள் பாக்கியமுண்டு கடைக்குலத் துதித்தாளுக்கே"

             உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் பந்துமித்திர ஜனங்கள் உள்ளவீடு உயர்ந்தகுலம் சம்சாரத்தில் முதன்மையானவள் தன்பாக்கிய யோகம் பதிக்கிஷ்டப்படி நடப்பாள்  பொரியோர்கள் பக்தி விசுவாசம் கற்பின்நிலை பால்பாக்கியமுள்ளாள்.

திருவோணம்

"வடிவுடை மயிலாம்ராச வம்சம்போல் ரூபமுள்ளாள்

கடிமணம் புத்திரவிருத்தி கலக்கம தில்லாநெஞ்சம்

குடிபுகுந் திடமுந்நன்று கோபமு மில்லாநல்லாள்

படியினில் தர்மநீதி பகருவாள் ஓணநாளே"

           திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் இராசவம்சத்துடைய அழகியரூபம் கலியாணமான சீக்கிரத்திலே புத்திரபாக்கிய முள்ளாள் சுத்தமான நெஞ்சம் புகுந்தவழி நல்லது கோபமில்லாள் தர்ம நீதியை எடுத்துரைப்பாள் எல்லார்க்கும் நல்லவளாம்.

அவிட்டம்

"அருமைசேர் பணிகளடை யணிவளே பறவைநாளில்

தருமமுஞ் சத்தியவாக்கு தனதன்போல் பொறுமையுள்ளாள்

பெருமையும் புராணகேள்வி பிரியமாம் சனங்கள்றன்பால்

பெருமிதத் துடனேவழ்வாள் பெண்மணி யுலகத்துள்ளே"

             அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் நல்ல வஸ்திராப ரணங்களையணிவாள் தர்மம் சத்தியவாக்கு குபேரனைப்போல் கெளரவம் பெருமை புராண புண்ணிய சரித்திரம் கேட்கபிரிய முள்ளவளாம்,

சதயம்

"உதித்தது சதயமாகி லுத்தமீ பெருமைதிமாகி

மதித்துளர் திருமகள்போல் மங்கையின் ரூபம்வாசை

பதித்தநல் தெய்வபக்தி பத்தாவுக் கினியபுத்தி

துதித்திடுங் குணத்தாள்சற்று தோஷமாம் பாவகோபம்"

           சதயம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் பொறுமை த்ர்மகுணம் லட்சுமியைப் போல அழகியரூபம் சனங்களிடத்து விசுவாசம் மரியாதை தேவதாபூசை பொரியோர் வணக்கம் பத்தாவுக்குப்பிரியம் கருணையும் முன்செய்த பாபகர்ம அனுபவம் உள்ளவளாம்.

பூரட்டாதி

"தானிய மாடு மக்கள் தருமமுஞ் செய்வாள் சாது

மேனியும் பெருத்த உந்திமேன்மையாம் சாத்திர கேள்வி

வானில தெய்வ பக்தி வருத்து போக்குற வோரில்லம்

மானினி புரட்டை நாளில் மானிலத் துதித வாறே"

         பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண் தான்னியம் மாடு மக்கள் தருமம் பொறுமை பெருத்த வயறு சாத்திர விசாரக்கேள்வி செல்வம் நிறைந்தும் எப்பொழுதும் பந்து சனங்கள் வரத்து போக்கு உள்ளவீடு தெய்வபக்தி நிறைந்தவள்.

உத்திரட்டாதி

"உத்திரட்டாதி தன்னி னுலகினி லுதிதாட் பாக்கியம்

மெத்தவே தரும முண்டு மேதினி புகழச் செய்வாள்

பத்தாவுக் கினியாள் ஞானி பகருவள் சத்தியவாக்கு

புத்திரவிருத்தியுள்ளாள் பொறுமையாம் நற்குலத்தாள்"

         உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண் பாகியமுள்ளாள் பூமியில் கொண்டாடும் படியான தருமம் செய்வாள் புருஷனுடன் பிரியாதிருக்கும் பிரியம் பொறுமை பெரியோர் புத்தியினாலுண்டான ஞானம் கர்வமில்லாள் சத்தியம் தவறாள் புத்திர விர்த்தியுடையவள் நல்ல குலம்.

ரேவதி

"வாஞ்சையும் விரத முள்ளாள் வளர்பசு பாக்கியங்கள்

காஞ்சனா புரணம் பூண்ட கற்பினாள் பதிக்கு நல்லாள்

வாஞ்சினி யழகி பெற்றோர் வளர்குடி புகுந்தார்க்கின்பம்

தீஞ்சவை யளிப்பாள் தோணி தினமதி லுத்தாள் தானே"

         ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த பெண் சனங்கள் மேலாசை விரதங்கள் செய்ய விருப்பம் பால் பாக்கியம் தங்கா பரணங்கள் தரித்தவள் பதிவிரதை எல்லார்க்கும் நல்லவள் பெற்றோர்க்கும் பெண்கொண்டவருக்கும் ஆசையும் கியாதியும் தரக் கூடியவள் தித்திப்புள்ள பதார்தங்களுடன் அன்னமிடுவாள்.

இத்தகவல் கொலும்பு ஜாதக புத்தகத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட ஓர் பொது பலன்கள் மட்டுமே, அவரவர் பிறந்த கிழமை, நேரம் மற்றும் நட்சத்திரங்களை பொருத்தே சரியான பலன் தெரிந்து கொள்ள முடியும் என்பதை மனதில் நினைவு கொள்க.
பெண்கள் பிறந்த லக்கின பலன்கள்

மேஷம்

"அச்சம தில்லாள் சத்திய மலம்பலுடன் சிலேட்ம தேகி

நிச்சய முறைப்பாள் நல்ல நீதியுஞ் சன விரோத

முச்சமாங் குலத்திற் செல்வ முறைப்பாள் நிஷ்டுர வார்த்தை

மச்சுளச் சினமாம் மேட பதிதனி லுதித்தா ளுக்கே"

மேஷ ராசியானது பிறந்த லக்கினமானால் பயமில்லாதவள் உண்மையை உறைப்பாள் சிலேட்டும பிரகிருதியான தேகம் நன் நீதியுள்ளாள் சற்று சன விரோதம் எப்பொழுதும் குரோதத்தோடு கூடினவள் நிஷ்டுரமான வார்த்தை சொல்லுவாள் என்பதாம்.

ரிஷபம்

"உறவினர்க் கூட்ட முள்ள உண்மையா ளழகி தேவ
மயவர் வாஞ்சை செல்வம் மனதில் சந்தோஷ் போகிக்
கறையிலா குணங்கள் நீதி கற்றனள் பதிக்கு நல்லாள்
வரையதை தாண்டாள் சுபங்கன் வளவெனு மிடப மாமே"

ரிஷபம் ராசியானது பிறந்த லக்கினமானால் பந்துஜன கூட்டமுள்ளாள் நீசமுறைப்பாள் தேவப்பிராம்மண விசுவாசம் மனேல்லாசம் அழகு போகி அனேக நற்குணங்களோடு கூடினவள் நீதியறிந்தவள் புருசனுக்கு பிரியமானவள் நற்புத்தி உடையவள்.

மிதுனம்

"சினமுள குணமும் வாக்கு சிலேட்டு மவாத தேகி

மனமதில் லச்சை யில்லாள் மகவுபெண் வாய்க்கும் போகி

இனமுட னற்ப நேசம் யீனமாஞ் செயல்கள் காந்தன்

தினமெனு மத்திய காலத் தீங்குளாள் மிதுன மென்பார்"

மிதுனம் ராசியானது பிறந்த லக்கினமானால் கோப குற்குறிகுணம் வர்க்குவுள்ளவள் வாதசிலேஷ்மதிரேகம் மனதில் கொஞ்சமேனும் பயமில்லாள் முதலில் பெண்சாந்தி நற் சுகமுள்ளாள் அற்பகாமி விகாரமான செயல்கள் மத்திய காலத்தில் பதிக்குத் தோஷமுள்ளவளாம்.

கடகம்"சாதுநன் வினய முள்ளாள் சகலரும் பிரியஞ் சீலங்
கோதியல புத்திர பாக்கியம் கொழுனனக் கினியாள் யோகம்
தீதிலா கற்பு மேன்மந் திங்கள்ப் போல் முகமும் வாக்கு
நீதியுந் தவறாள் சேக்கை நிரணய ராசி யாளே"

கடகம் ராசியானது பிறந்த லக்கினமானால் பொறுமைக் குணம் நல்ல வாஞ்சையுள்ளாள் பந்துக்களும் மற்றோர்க்கும் பிரியமும் யோகமும் உள்ளவள்  பதிவிரதை சந்திரனைப் போல காந்தியுள்ள முகமும் குளிர்ந்த வார்த்தியும் நியாயமறிந்தவளுமாம்.

சிம்மம்

"சிங்கமா மிலக்கி னத்தாள் சினமுள சொற்கள் ரூபம்

மங்கையும் பெரியோர் பத்தி மனதிட முள்ள புத்தி

எங்கையுங் கலகம் செய்வாள் எதிரிருபகாரி கல்வி

பங்கம தில்ல கற்று பதியுடன் சுகிப்பா ளன்னோ"

சிம்மம் ராசியானது பிறந்த லக்கினமானால் அதிக கோபம் கடினமான சொற்கள் சற்று அழகி பெரியவற்கள் இடத்து பத்தி விசுவாசம் திடமான மனது நற்புத்தி கலகம் செயவதில் அதிகவாசை பரோபகாரி செய்நன்றி மறவாள் வித்தைகற்று புருஷனுடன் சுகமனுபவிப்பாள்

கன்னி

"கன்னியில் தனமுஞ் செல்வம் கணவனும் யோகம் கல்வி

இன்னிலம் புகழ ஞான மெதிலுள தரும புத்தி

அன்னிய ருறவு நல்லோ ரனைவரில் லாசை யுள்ளாள்

தன்னிலை தவறா போகம் தரணிய லடைவாள்தானே"

கன்னி ராசியானது பிறந்த லக்கினமானால் பொருட்செல்வம் கணவனுக்கு யோகம் வித்தையாலறிந்த ஞானி தருமபுத்தி எல்லாரிடமும் நல்லாளென்றவாசையுடன் கற்பின் நிலைதவறாமல் சுகத்தை அனுபவிப்பவளாகும்.

துலாம்

"தானெனும் செருக்குச் சீலம் தன்னிலை காட்டாள் புத்தி

ஊமாங் கோல மில்ல ளுறியோனும் மகற்கும் பீடை

மானியாம் பசியைத் தாங்காள் மங்கையும் சுரதவாஞ்சை

தேனினிச் சொல்லாள் பாரில் தெரிவையார் துலையென் வீடே"

துலாம் ராசியானது பிறந்த லக்கினமானால் செல்வத்தாலுண்டான அகங்காரம் ஆசாரம் இருப்பிடம் தெரியாதவள் அழகில்லாள் சரீரம் மந்தபுத்தி புருஷனுக்கும் புத்திரருக்கும் தோஷம் பசியைத் தாங்காள் மானி நீடித்த சுரத விருப்பமுள்ளவள் இன்பமான சொற்களைப் பேசுவாளாம்.

விருச்சிகம்

"சீலந்நற் குணமுங் கற்புச் சிறந்திடும் கண்கள் தேகம்

ஞாலமேல் கடுஞ்சொல் லாகி ஞாயமே யுரைப்பாள் புண்ணிய

சாலியாம் பதிக் கடங்காள் சாதனை மிகவே செய்வாள்

பாலர்கள் தனக்கு தோடம் பைங்கிளி தேளில் வந்தாள்"

விருச்சிகம் ராசியானது பிறந்த லக்கினமானால்ஆசாரம் நல்ல குணத்தோடு கூடிய பதிவிரதை அழகு பொருந்திய கண்களும் சரீரமுடையவள் ஞாயமாயுரைக்கும் கடுரமான சொல்லுள்ளாள் புண்ணியசாலி புருசனுக்கு அடங்காள் சாதனை அதிகமாய் செய்வாள் நல்லகுணம் புத்திர தோஷமுள்ளவளாம்.

தனுசு

"வஞ்சனை யதிக புத்தி வசீகர முகமாம் பொருள்மேல்

மிஞ்சிய கருத்தும் தேகம் மீறிய பலமுந் நல்லாள்

தஞ்சமென் றோரை காக்கும் தயவுளாள் ராச யோகி

அஞ்சன விழியாள் சிலையி லவனியி லுதித்தாளாமே"

தனுசு ராசியானது பிறந்த லக்கினமானால் வஞ்சனையான புத்தி சன வசீகரமுடைய முகம் பொருளின்மேல் அதிக கருத்து சரியான பலமுள்ள சரீரம் நல்லவள் அண்டியவரைக்காக்கும் தயவுளாள் ராச யோகத்தை அனுபவிப்பாள் மைதீட்டிய அழகிய கண்ணுள்ளவளாம்.

மகரம்

"மனதனில் துன்பமெய்யும் மகரமா மிராசியானால்

தினமுந் நன் னீரிலாடத் தீங்கின்றி பிரியமுள்ளாள்

தனமுளாள் சத்திய வாக்கு தனயாரைப் பெறுவாள் சற்று

தனதிலந் தரித்திர முண்டு தாதையு மவ்வர் றாமே"

மகரம் ராசியானது பிறந்த லக்கினமானால் மனதில் விசாரமும் தீர்த்தயாதிரை செய்யப்பிரியமும் பாக்கியமுள்ளாள் உண்மையையுரைப்பவள் புத்திரருண்டு அற்பமாக தனக்கும் பெற்றோருக்கும் தரித்திரமுண்டென்பதாம்.

கும்பம்

"துன்பமும் வியாதி யுள்ளாள் துணைவனை பிரியாள் சறும்

அன்புளா ளெதி மாறாடு மமைதியாள் செல்வந் நல்லாள்

தன்மையு மனந்தம் மானி தனயரால் விதன முள்ளாள்

கன்னியுங் குடத்தில் தோன்றக் காசினி புண்ணிய மென்பார்"

கும்பம் ராசியானது பிறந்த லக்கினமானால் மாகவரில் மனக்கிலேசம் வியாதி எப்பொழுதும் புருஷனுடன் கூடியிருக்கும் தன்மை எதிர்த்துச் சொல்லும் குணம் தனமுள்ளாள் நல்ல குணமனே கமுடையவள் புத்திரவிசனமுள்ளவள் புண்ணியசாலி என்பதாம்.

மீனம்

"உறவினர் பதியுந் நேசம் முள்ளதாம் புத்திரர் பெளத்திரர்

கறவையுந் தேவ பத்திக் கண்முக மழகாம் வாஞ்சை

நெறியுள நடக்கை யென்றும் நேமமாய் நிகலையாங் கற்ப்புப்

பறியுள மீனராசி பைங்கிளி ஜனனமென்பர்"

கும்பம் ராசியானது பிறந்த லக்கினமானால் பந்துக்களும் புருஷனும் அதிகபிரியம் பிள்ளை பேரனுடன் குடும்பவிருத்தி பசுதனம் தேவதாபத்தி அழகிய கண் முகமும்விசுவாசமுள்ளாள் நீதியான நடக்கை நியமநிலைத்தவராத பதிவிரதை என்றுரைப்பாம்.
By
Jagadeesh Krishnan

No comments:

Post a Comment