Thursday, 16 February 2023

jagadeesh Krishnan



" ஒருவர் புத்த ' லாமா ' ஆவது
சாதாரண நிகழ்வு அல்ல.

மிகவும் சிரமமானது.

நிறைய கடினமான கட்டுபாடுகள்,
சட்ட திட்டங்கள், 
மீளவே முடியாத கடுமையான விதி முறைகள் உள்ளன.

அதுவரையில் வாழ்ந்து வந்த வாழ்க்கை முறைகளையும்
ஆராய்ந்து பார்ப்பார்கள்.

அவர்களது தகுதி,
பெரும்பாலும்
பிரபஞ்சத் தத்துவங்களை படித்துணர்பவையாகவே
இருக்கும்.

ஒரு லாமாவை
 நாம் மலிவாக எடைபோட்டு விட முடியாது.

ஒரு உண்மையான ' லாமா '
வெளிப்புற தோற்றத்திற்கு ஒரு சாதுவாக நம்மிடம் பேசினாலும்,
வெளிக்காட்டிக் கொள்ளாத
அவர்களது தனிப்பட்ட
தகுதி, திறமை 
வியப்புக்குரியது.

இப்போது நான் சொல்லப்போகிற நிகழ்வு
முற்றிலுமே உங்களால் 
நம்ப முடியாதது.

ஏனென்றால்,
அதை நம்பும் அளவிற்கு யாருடைய மனமும் 
ஆன்மீகத்தில்
பக்குவம் அடையவில்லை.

இங்கு,
உங்களுக்கு அனைத்தும் விஞ்ஞானம்.

அனைத்தும் அறிவு சார்ந்த எண்ணங்கள்.

எனவே,
இதை நம்புவது கடினம்.

இருப்பினும்,
நான் சொல்லவந்த 
உண்மை நிகழ்வை சொல்லிவிடுகிறேன்.

'ஒருமுறை,
 நல்ல முறையில் 
பயிற்சி எடுத்து,
கடுமையான தவம் செய்து
உயர்ந்த எண்ணங்களில்
உறைந்திருக்கும் லாமாக்களில்,
அவர்களுக்குள்ளாகவே
வடிகட்டி,
மிக சிறப்பான
 500 லாமாக்களை
  தேர்ந்தெடுத்தார்கள்.

அந்த 500 லாமாக்களும்
தம் பிரக்ஞையற்ற மனதை உணர்ந்து கொண்டவர்கள்.

நினைத்த மாத்திரத்தில்,
30 சுவாசத்திற்குள்ளாகவே
நிரந்தர சமாதி நிலையை அடைந்துவிடும் தகுதி பெற்றவர்கள்.

அந்த சிறப்பு லாமாக்களின் எண்ணிக்கை
எப்போதுமே ஐநூறு தான்.

500 தாண்டுவதில்லை.

அவர்களுள்,
ஒருவர் சமாதி நிலை அடைந்தால் தான்,
அதேபோன்ற
வேறோரு தகுதி வாய்ந்த லாமா ' அதில் சேர்த்துக் கொள்ளப் படுவார்.

அவர்கள் 500 லாமாக்களும்,
ஒரு குறிப்பிட்ட பெளர்ணமி தினத்திற்கு
முன்னதாக,
இமயமலையை நோக்கி நடக்க ஆரம்பிப்பார்கள்.

சரியாக பெளர்ணமி தினத்தன்று,
இமயமலையில் குறிப்பிட்ட இடத்தை அடைந்து,
தவம் செய்ய ஆரம்பிப்பார்கள்.

அந்த தவத்திற்கு நடுவே,
500 லாமாக்களின் இடையே அந்த அதிசயம் நிகழும்.
ஒளி வடிவில் புத்தர் தனது சூக்கும உடலோடு,
அவர்களுக்கு காட்சித் தருவார்.

எப்படி இது நிகழ்கிறது ?

ஒவ்வொறு வருடமும்,
ஒரு குறிப்பிட்ட பெளர்ணமி தினத்தன்று,
தான் ( புத்தர் ) தோன்றி
 காட்சித் தரப்போவதாக,
தனது சீடர்களிடம் வாக்குறுதி அளித்திருந்தார் புத்தர்.

அதன்படியே,
புத்தரின் ஒளி வடிவ உடல் அவர்கள் முன் தோன்றி,
காட்சியளித்து வருகிறது.

அன்றைய தினம்தான்,
' புத்த பூர்ணிமா '

                    ஜெகதீஸ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்

Thursday, 9 February 2023

jagadeeshkrishnan

இயேசு சொல்கிறார் ''என்னைப் பின்பற்றுங்கள்'' என.  

கிருஷ்ணரும் புத்தரும்  கூட அதையே தான் சொன்னார்கள். 

உலகின் எல்லா பழைய மதங்களும் இந்த சொல்லின் அடிப்படையில் உருவானவை தான். 

இந்த சொற்கள் மனோதத்துவரீதியாக மனிதனை அழிக்கும் சொற்கள்.

 நான் ''என்னை பின் தொடருங்கள்'' என சொல்லமாட்டேன். 

அவர்கள் இந்த சமுதாயத்தை முடக்கவும் உதவாக்கரையாக மாற்றவும் அப்படி சொல்கிறார்கள். 

மக்கள் தங்கள் சொந்த பாதையை தேர்ந்தெடுத்து நடக்க மறுக்கப்படுகிறார்கள். 

முதலில் உங்களை பணிய வைத்து உங்கள் கண்களை பிடுங்கிவிடுகிறார்கள். 

பிறகு நீங்கள் இயேசுவின் கண்களைக் கொண்டும் கிருஷ்ணனின் முகமதுவின் கண்களைக் கொண்டு மட்டுமே உலகை காண இயலும்.

உங்கள் சொந்த பார்வையை பறித்துக் கொண்டு உங்கள் கால்களைப் பறித்துக் கொண்டு அவர்களின் கண்களைக்கொண்டும் கால்களைக் கொண்டும் உன்னை இயங்கச் சொல்கிறார்கள். 

உனக்கென்று எந்த நம்பிக்கையும் இருக்கக் கூடாது. 

அவர்கள் மீதான  நம்பிக்கையே போதுமானது. 

உன்னை அழிக்கும் இது போன்ற செயல்கள் என்னைப் பொருத்த வரை பெருங்குற்றமாகும். 

நீ தனித்தன்மையானவன். 

ஒருவரை நீ பின்தொடரத் தொடங்கியவுடன் அவர் செயல்களை காப்பியடிக்க தொடங்குகிறாய். 

அதனால் உன் அடையாளத்தை இழந்து பத்தாம் பசலித்தனமானவனாக மாறிப்போகிறாய். 

நீ பிறர் வசமானவனாக மாறிப்போகிறாய். 

உனக்கு கிருஸ்தவ முகமூடியோ இந்து முகமதிய பவுத்த முகமூடியோ கிடைக்கும். 

அந்த முகமூடி நீ யாரை பின்தொடர எண்ணுகிறார்களோ அவர்களுடையது.

 உன்னுடைய உண்மை முகம் மறைந்து போகிறது. 

உனக்கு எதிரானவனாக நீயே மாறி ஒருவித நோயாளியாக மாறிப்போகிறாய்.

 அதற்கு பின் நீ பேசுவதெல்லாம் குற்றவாளிகளுடைய குரலாகவே இருக்கும். 

அது இயேசுவின் புத்தரின் கன்பூசியசின் குரலாகவே இருக்கும். 

எல்லா குழந்தைகளும் தன் பெற்றோரின் சுற்றத்தாரின் நண்பர்களின் ஆசிரியர்களின் செயல்களையே காப்பியடிக்கின்றன. 

அவையெல்லாம் குழந்தைகள் மீது திணிக்கப்பட்டவை. 

 நான் சிறுவனாக இருந்தபோது என்னை என் தந்தை கோயிலுக்கு அழைத்து செல்வது வழக்கம். 

நான் ஒரு விபத்தாக ஒரு ஜைன குடும்பத்தில் பிறந்துவிட்டேன்.  

அது உலகின் மிகப்பழமையான மதம்.

 என் தந்தை மிக நல்லவர். 

அவர் ''நான் இந்த கோயிலுக்கு வருகிறேன்..

 தலை தாழ்ந்து வணங்குகிறேன்.. பிரார்த்திக்கிறேன். 

ஆனால் என் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 

அதனால் நான் உன்னை என்னை பின்பற்றி வணங்குமாறு சொல்லமாட்டேன்.

 உன் இஷ்டப்படி செய்' என்றார். 

நான் இதுவரை யாரையும் பின் தொடர்ந்ததில்லை. 

உலகின் மிகப்பெரிய துறவு என்பது யாரையும் பின்பற்றாமல் இருப்பது தான்.

 நான் நானாகவே இருக்கிறேன். 

உனக்கு அறிவு வளரவேண்டுமா?

 உண்மையை அறியவேண்டுமா? 

அதற்கு நீங்கள் இந்த புதுமுயற்சியை செய்து தான் ஆகவேண்டும்.

 இல்லாவிட்டால் உங்களை சுற்றியுள்ள விற்பனையாளர்கள் யாரையாவது பின் தொடரவேண்டியது தான். 

இயேசு ஒரு வியாபாரி.. 

அவர் ''என்னை பின் தொடருங்கள்'' என சொல்கிறார். 

என்னை பின் தொடர்ந்தால் நீங்கள் கடவுளைக் காணலாம்.. 

சொர்கத்தைக் காணலாம். 

அங்கே எல்லா இன்பங்களும் கிடைக்கும். 

என்னை பின் தொடராவிட்டால் இருளில் சிக்கி நரகத்திற்கு செல்வீர்கள். 

கடவுள் உங்களுக்கு உதவமாட்டார்.

 என்னுடன் வந்தால் எல்லாமே உங்களுக்கு தருவேன். 

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் எந்த கேள்வியும் கேட்காமல்  என்னை நம்புவது தான். 

கிருஸ்தவர்கள் கடவுள் யார்? 

பரிசுத்த ஆவி யார்? 

என கேட்க மாட்டார்கள்.

பரிசுத்தமெல்லாம் அங்கே  கிடையாது.

அவர் ஒரு கற்பழிப்பாளர். கன்னி மேரியை கற்பழித்தவர்.

 கடவுள்(பிதா) மகன்(சுதன்) பரிசுத்த ஆவி 
என மும்மூர்த்திகளை விடுத்து அங்கே எந்த பெண்ணுக்கும் இடமில்லை. 

யாரும் நீங்கள் மட்டுமே கடவுளின் ஒரே குழந்தை என்பதற்கு என்ன ஆதாரம் என கேட்பதில்லை. 

இறந்த பின் சொர்கத்திற்கு செல்வாய் என சொல்கிறார்கள்.

 முகமதியர்கள் சொர்கத்தில் ஒயின் ஆறு ஓடுவதாக சொல்கிறார்கள். 

நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம் குளிக்கலாம். 

 மேலும் அங்கே அழகான பெண்கள் இருப்பார்கள். 

அவர்களுக்கு வயது கூடுவதே இல்லை.

 என்றும் அவர்கள் பதினாராகவே இருப்பார்கள். 

அங்கே அழகான இளைஞர்களும் இருப்பார்களாம். 

இது ஒரு முட்டாள்தனமான சிந்தனை.

 இறந்தபின் என்ன நடக்கும் என யாருக்கு தெரியும்

. இறந்த பின் அங்கே என்ன நடந்தது என யார் திரும்பி வந்து சொல்லப்போகிறார்கள்.

 அதனால் சொர்கத்தை வைத்து நல்லதொரு வியாபாரத்தை இவர்கள் செய்து வருகிறார்கள். 

இதற்கு மயங்கி மக்கள் எல்லோரும் முட்டாள்களாக மாறி வருகிறார்கள்.

 அதனால் தான் சொல்கிறேன் ''என்னை யாரும் பின் தொடராதீர்கள். என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்'' என.
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்