Thursday 16 February 2023

jagadeesh Krishnan



" ஒருவர் புத்த ' லாமா ' ஆவது
சாதாரண நிகழ்வு அல்ல.

மிகவும் சிரமமானது.

நிறைய கடினமான கட்டுபாடுகள்,
சட்ட திட்டங்கள், 
மீளவே முடியாத கடுமையான விதி முறைகள் உள்ளன.

அதுவரையில் வாழ்ந்து வந்த வாழ்க்கை முறைகளையும்
ஆராய்ந்து பார்ப்பார்கள்.

அவர்களது தகுதி,
பெரும்பாலும்
பிரபஞ்சத் தத்துவங்களை படித்துணர்பவையாகவே
இருக்கும்.

ஒரு லாமாவை
 நாம் மலிவாக எடைபோட்டு விட முடியாது.

ஒரு உண்மையான ' லாமா '
வெளிப்புற தோற்றத்திற்கு ஒரு சாதுவாக நம்மிடம் பேசினாலும்,
வெளிக்காட்டிக் கொள்ளாத
அவர்களது தனிப்பட்ட
தகுதி, திறமை 
வியப்புக்குரியது.

இப்போது நான் சொல்லப்போகிற நிகழ்வு
முற்றிலுமே உங்களால் 
நம்ப முடியாதது.

ஏனென்றால்,
அதை நம்பும் அளவிற்கு யாருடைய மனமும் 
ஆன்மீகத்தில்
பக்குவம் அடையவில்லை.

இங்கு,
உங்களுக்கு அனைத்தும் விஞ்ஞானம்.

அனைத்தும் அறிவு சார்ந்த எண்ணங்கள்.

எனவே,
இதை நம்புவது கடினம்.

இருப்பினும்,
நான் சொல்லவந்த 
உண்மை நிகழ்வை சொல்லிவிடுகிறேன்.

'ஒருமுறை,
 நல்ல முறையில் 
பயிற்சி எடுத்து,
கடுமையான தவம் செய்து
உயர்ந்த எண்ணங்களில்
உறைந்திருக்கும் லாமாக்களில்,
அவர்களுக்குள்ளாகவே
வடிகட்டி,
மிக சிறப்பான
 500 லாமாக்களை
  தேர்ந்தெடுத்தார்கள்.

அந்த 500 லாமாக்களும்
தம் பிரக்ஞையற்ற மனதை உணர்ந்து கொண்டவர்கள்.

நினைத்த மாத்திரத்தில்,
30 சுவாசத்திற்குள்ளாகவே
நிரந்தர சமாதி நிலையை அடைந்துவிடும் தகுதி பெற்றவர்கள்.

அந்த சிறப்பு லாமாக்களின் எண்ணிக்கை
எப்போதுமே ஐநூறு தான்.

500 தாண்டுவதில்லை.

அவர்களுள்,
ஒருவர் சமாதி நிலை அடைந்தால் தான்,
அதேபோன்ற
வேறோரு தகுதி வாய்ந்த லாமா ' அதில் சேர்த்துக் கொள்ளப் படுவார்.

அவர்கள் 500 லாமாக்களும்,
ஒரு குறிப்பிட்ட பெளர்ணமி தினத்திற்கு
முன்னதாக,
இமயமலையை நோக்கி நடக்க ஆரம்பிப்பார்கள்.

சரியாக பெளர்ணமி தினத்தன்று,
இமயமலையில் குறிப்பிட்ட இடத்தை அடைந்து,
தவம் செய்ய ஆரம்பிப்பார்கள்.

அந்த தவத்திற்கு நடுவே,
500 லாமாக்களின் இடையே அந்த அதிசயம் நிகழும்.
ஒளி வடிவில் புத்தர் தனது சூக்கும உடலோடு,
அவர்களுக்கு காட்சித் தருவார்.

எப்படி இது நிகழ்கிறது ?

ஒவ்வொறு வருடமும்,
ஒரு குறிப்பிட்ட பெளர்ணமி தினத்தன்று,
தான் ( புத்தர் ) தோன்றி
 காட்சித் தரப்போவதாக,
தனது சீடர்களிடம் வாக்குறுதி அளித்திருந்தார் புத்தர்.

அதன்படியே,
புத்தரின் ஒளி வடிவ உடல் அவர்கள் முன் தோன்றி,
காட்சியளித்து வருகிறது.

அன்றைய தினம்தான்,
' புத்த பூர்ணிமா '

                    ஜெகதீஸ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்

No comments:

Post a Comment