Thursday 30 March 2023

life

[3/31, 8:37 AM] Jagadeesh Krishnan: Life is unpredictable, but people are predictable! This creates the dichotomous mind. Life takes us in one direction and people in another! To watch this drama is interesting and teaches one about self and others. 

The  article on the power of intention had evoked many comments. I read each comment with interest and even engaged with many by replying to them. As I was doing that action, I was observing what I felt. It was revealing to me that I was neutral with all comments. This state of balance made me feel thankful for all the ( dislike) comments that were put up and I realised that you can be grateful for all things that come to us. 

In life we have two options. Either to move upwards on the ladder of life or downwards in the abyss of depression. When we are faced with a difficult situation, if we pause a little and respond, an appropriate response to the within can be executed. The trick is “ TO PAUSE.” 

It is said, “ The moment you witness a thought, it dies and the more you engage with a thought, it feeds.”  So the trick is not to engage with the thought but witness it.  Who will engage with a  ‘ disturbing thought’ knowing fully that it’s going to cause discomfort ? Obviously an egoistic person, who can’t consider being wrong? 

 Who is an Egoistic person?  In the Bhagwad Gita Chapter 15. It is said that an egoistic person is some one who considers the unimportant things important!  He sees what is NOT THERE AS THERE! 

So when someone shoots an arrow towards you know if it needs a response or can you ignore it. Is the comment evoking anger, then your ego will be brought to play and you will see what is not there. 

I recall when my dearest relative who recently passed away remarked condescendingly on my work. Instead of getting defensive, I paused and weighed what it made me feel! I realised that the relationship meant more to me than seeing this comment as being important. My ego didn’t get a chance to get the better of me! If we weigh the situation well, our ego will slowly die and we will feel liberated of it!
By
Jagadeesh Krishnan psychologist and international author
[3/31, 8:37 AM] Jagadeesh Krishnan: வாழ்க்கை கணிக்க முடியாதது, ஆனால் மக்கள் கணிக்கக்கூடியவர்கள்!  இது இருவேறு மனதை உருவாக்குகிறது.  வாழ்க்கை நம்மை ஒரு திசையிலும், மக்களை இன்னொரு திசையிலும் அழைத்துச் செல்கிறது!  இந்த நாடகத்தைப் பார்ப்பது சுவாரஸ்யமானது மற்றும் ஒருவருக்கு தன்னைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் கற்பிக்கிறது.

 எண்ணத்தின் சக்தி பற்றிய கட்டுரை பல கருத்துக்களைத் தூண்டியது.  நான் ஒவ்வொரு கருத்தையும் ஆர்வத்துடன் படித்தேன், பலருக்குப் பதிலளித்து அவர்களுடன் ஈடுபட்டேன்.  நான் அந்த செயலைச் செய்யும்போது, ​​நான் உணர்ந்ததைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.  எல்லாக் கருத்துக்களிலும் நான் நடுநிலையோடு இருந்தேன் என்பதை வெளிப்படுத்தியது.  இந்த சமநிலை நிலை, போடப்பட்ட அனைத்து (விரும்பவில்லை) கருத்துக்களுக்கும் என்னை நன்றியுடன் உணர வைத்தது, மேலும் எங்களிடம் வரும் அனைத்து விஷயங்களுக்கும் நீங்கள் நன்றியுடன் இருக்க முடியும் என்பதை உணர்ந்தேன்.

 வாழ்க்கையில் நமக்கு இரண்டு வழிகள் உள்ளன.  ஒன்று வாழ்க்கையின் ஏணியில் மேல்நோக்கி நகர்வது அல்லது மனச்சோர்வின் படுகுழியில் கீழ்நோக்கிச் செல்வது.  நாம் ஒரு கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது, ​​​​கொஞ்சம் இடைநிறுத்தப்பட்டு பதிலளித்தால், உள்ளுக்கு பொருத்தமான பதிலைச் செயல்படுத்த முடியும்.  தந்திரம் "இடைநிறுத்தம்".

 "நீங்கள் ஒரு எண்ணத்தைக் காணும் தருணத்தில், அது இறந்துவிடும், மேலும் நீங்கள் ஒரு எண்ணத்தில் ஈடுபடும்போது, ​​​​அது உணவளிக்கிறது" என்று கூறப்படுகிறது.  எனவே தந்திரம் என்பது சிந்தனையுடன் ஈடுபடாமல் அதற்கு சாட்சியாக இருப்பது.  அசௌகரியத்தை உண்டாக்கப் போகிறது என்பதை முழுமையாக அறிந்திருந்தும், ‘கவலையூட்டும் எண்ணத்துடன்’ யார் ஈடுபடுவார்கள்?  வெளிப்படையாக ஒரு அகங்கார நபர், யார் தவறாக கருத முடியாது?

  ஒரு அகங்கார நபர் யார்?  பகவத் கீதை 15வது அத்தியாயத்தில், முக்கியமில்லாத விஷயங்களை முக்கியமானதாகக் கருதுபவர் தான் அகங்காரவாதி என்று கூறப்படுகிறது!  இல்லாததை அங்கேயே பார்க்கிறான்!

 எனவே யாராவது உங்களை நோக்கி அம்பு எய்யும் போது அதற்கு பதில் தேவையா அல்லது நீங்கள் அதை புறக்கணிக்க முடியுமா என்பதை அறிந்து கொள்ளுங்கள்.  கருத்து கோபத்தை வரவழைக்கிறதா, உங்கள் ஈகோ விளையாட கொண்டு வரப்படும், இல்லாததை நீங்கள் காண்பீர்கள்.

 சமீபத்தில் காலமான எனது நெருங்கிய உறவினர் எனது வேலையைப் பற்றி இரங்கல் தெரிவித்தது எனக்கு நினைவிருக்கிறது.  தற்காப்புக்கு பதிலாக, நான் இடைநிறுத்தப்பட்டு, அது என்னை உணர்ந்ததை எடைபோட்டேன்!  இந்தக் கருத்தை முக்கியமானதாகப் பார்ப்பதை விட, அந்த உறவு எனக்கு அதிகம் என்பதை உணர்ந்தேன்.  என் ஈகோ என்னை நன்றாகப் பெற வாய்ப்பு கிடைக்கவில்லை!  நாம் நிலைமையை நன்றாக எடைபோட்டால், நமது ஈகோ மெல்ல மெல்ல அழிந்து, அதிலிருந்து விடுதலை பெறுவோம்!
 மூலம்
 ஜெகதீஸ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்

Monday 20 March 2023

jagadeesh Krishnan psychologist

[3/19, 12:12 PM] Jagadeesh Krishnan: ஒரு மிருகக் காட்சி சாலையில் புதிதாக ஒரு சிங்கத்தை கொண்டு வந்தனர். 

அந்த சிங்கம் இளமையாக துடிப்பாக இருந்தது. 

அதே மிருகக் காட்சி சாலையில் இன்னொரு கிழட்டு சிங்கமும் இருந்தது. 

அந்த கிழட்டு சிங்கம் எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கும். 

அதனால் பார்வையாளர்கள் ஏமாற்றம் அடைந்து போய் விடுவார்கள். 

இதைக் கண்ட இளைய சிங்கம் தனது வித்தையை காட்டியது. 

ஓவென வாயைப் பிளந்து ஆக்ரோஷமாக கர்ஜித்தது. 

இதனைக் கண்டு பார்வையாளர்கள் உற்சாகம் அடைந்தனர் .

கைதட்டி ரசித்தனர். 

நாளுக்கு நாள் பூங்காவுக்கு பார்வையாளர்கள் வருகை அதிகரித்தது. 

இளம் சிங்கத்தைப் பார்க்க பலர் குழந்தைகளுடன் திரண்டு வந்தனர். 

இந்த சிங்கமும் அவர்களுக்கு நல்லதொரு பொழுதுபோக்காக கர்ஜனை செய்து மகிழ்வூட்டியது. 

ஆனால் அந்த பூங்காவின் ஊழியர்கள் உணவு கொண்டு வரும் போது கிழட்டுச் சிங்கத்திற்கு குதிரை இறைச்சியை கொண்டு வந்தனர். 

அந்த கிழட்டுச் சிங்கமும் அதை சாப்பிட்டு தூங்கிவிடும். 

ஆனால் இந்த இளம் சிங்கத்துக்கு ஆரஞ்சுப் பழங்களும் வாழைப்பழங்களும் வேர்க்கடலையும் கொண்டு வந்தனர். 

தினமும் இது தொடரவே பொறுமை இழந்த இளம் சிங்கம் ஒரு ஊழியரை அழைத்தது.

 "நான் இத்தனை பார்வையாளர்களை வரவைத்திருக்கிறேன். 

ஆனால் எனக்கு இரைச்சியைத் தராமல் ஆரஞ்சு வாழைப்பழம் தருகிறீர்கள், அந்த கிழட்டுச் சிங்கம் எதவும் செய்யாமல் சதா படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கு மட்டும் நல்ல நல்ல இறைச்சியைக் கொண்டு வருகிறீர்களே இது நியாயமா "என்று புலம்பியது. 

அப்போது அந்த ஊழியர் சொன்னார் .

எங்கள் பட்ஜெட்டில் ஒரு சிங்கம் தான் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. 

அதற்குத்தான் இரைச்சி வாங்கிப் போடுகிறோம்.

 உன்னை இன்னும் சிங்க கணக்கில் சேர்க்கவில்லை. 

ஒரு குரங்கு கணக்கில் சேர்த்து வைத்துள்ளோம். 

அதனால்தான் குரங்குக்கு தரும் உணவைத் தருகிறோம்

அறிவு என்பது ஆள் ஆளுக்கு வேறுபடுகிறது

 நீ உன்னை எப்படி வேண்டுமானாலும் நினைத்து கொள்ளலாம்

   ஆனால் பிறர் உன்னைப்பற்றி, உனது செயலைப்பற்றி உன்னைப்போலவே நினைப்பதில்லை
ஜெகதீஸ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[3/19, 12:13 PM] Jagadeesh Krishnan: A new lion was brought to a zoo.

 The lion was young and vibrant.

 There was another baby lion in the same zoo.

 That giant lion is always sleeping.

 So the audience will leave disappointed.

 Seeing this, the young lion showed his trick.

 Owena let out an aggressive roar.

 The audience was excited to see this.

 Applauded.

 The number of visitors to the park increased day by day.

 Many people flocked with children to see the young lion.

 This lion also roared and entertained them as a good pastime.

 But when the park staff brought food, they brought horse meat to the lion.

 That baby lion also eats it and falls asleep.

 But they brought oranges, bananas and peanuts to this young lion.

 The young lion, impatient to continue this day after day, called a servant.

  “I've had so many visitors.

 But you don't give me meat and give me orange banana, that baby lion is lying down and sleeping without doing anything.  But is it fair that you bring good meat just for that,” he lamented.

 Then the employee said.

 A lion's share of our budget has been credited.

 That is why we buy meat.

  You haven't been added to the lion count yet.

 Added to a monkey account.

 That's why we give monkey food

 Knowledge varies from person to person

  You can think of yourself however you want

    But others don't think the same way about you and your actions
 Jagadeesh Krishnan is a psychologist and international author

Monday 13 March 2023

goddleness

உண்மையான பரிசு!

ஐந்து வயது சிறுமி அமுதா,
 தன் அம்மாவுடன் சூப்பர் மார்க்கெட் சென்றிருந்தாள். 
அங்கே ஒரு முத்துமாலையை பார்த்தாள். அது வேண்டுமென அம்மாவிடம் அடம்பிடித்தாள்.

“அம்மு... இது அழகா இருக்கு, ஆனால் விலை அதிகமா இருக்கே.. தவிர இது தரமில்லாத ப்ளாஸ்டிக் மாலை... 

நான் உன்னோட பிறந்தநாளைக்கு அப்பாகிட்ட சொல்லி 'ரியலான ஒரிஜினல் பியர்ள்ஸ்' மாலை வாங்கி தரசொல்றேன்... இது வேண்டாம்மா" என்றாள் அம்மா.

ஆனால் அமுதா, அழுது பிடிவாதம் செய்து அந்த ப்ளாஸ்டிக் முத்துமாலையை வாங்கிக் கொண்டாள்...

அமுதாவுக்கு அந்த முத்துமாலை மிகவும் ஃபேவரெட் ஆன பொருளாகிப்போனது. 

அதை எங்கு சென்றாலும் அணிந்திருந்தாள்/ உடன் வைத்திருந்தாள். 

பள்ளிக்கு செல்லும்போதும், நண்பர்களுடன் விளையாடும்போதும், ஏன் படுக்கும்போது கூட உடன் கழுத்தில் போட்டிருந்தாள்.

பிளாஸ்டிக் மாலையை கழுத்திலேயே போட்டிருந்தாள். அலர்ஜியால் கழுத்து நிறம் மாறி விடும் என என்னென்னவோ அம்மா சொல்லியும் கூட கேட்கவில்லை.  எப்போதும் அதைப் பிரிய மனமில்லை அவளுக்கு.

அமுதாவின் அப்பா மிகவும் அன்பானவர். தினமும் அவர் அமுதாவுக்கு படுக்கும் முன் கதை சொல்வார். ஒரு நாள் கதை சொல்லி முடித்ததும் கேட்டார், “அம்மு... என்னை உனக்கு பிடிக்குமா?”

”ஆமாம்பா ரொம்ப பிடிக்கும்.”

“அப்போ, உன்னோட முத்துமாலையை எனக்கு தரீயா?”

“ஓ.. முடியாதுப்பா... நீங்க வேற எதுனாச்சும் எடுத்துக்கோங்க.. என்னோட பிங்கி பொம்மையை வேணா எடுத்துக்கோங்க.. ஆனா முத்துமாலை மட்டும் தர மட்டேன்ம்பா...” என்றாள்.

"பரவால்லை குட்டிம்மா..."  என்று புன்னகையுடன் பதில் சொன்னார் அப்பா.

இன்னொரு நாள் மீண்டும் கேட்டார், “அம்மு... என்னை உனக்கு பிடிக்குமா?”

”ஆமாம்பா ரொம்ப பிடிக்கும்” -அமுதா

“அப்போ, உன்னோட முத்துமாலையை எனக்கு தரீயா?” மீண்டும் கேட்டார்.

“ஓ.. முடியாதுப்பா... நீங்க வேற எதுனாச்சும் எடுத்துக்கோங்க.. வேணும்னா என்னோட குதிரை பொம்மையை எடுத்துக்கோங்க... முத்துமாலைய மட்டும் கேக்காதீங்கப்பா ப்ளீஸ்... அதமட்டும் நான் தர மட்டேன்.” என இம்முறையும் அழுத்தமாக மறுத்தாள் அமுதா.

இப்போதும் அதே புன்னகையுடன் “பரவாயில்லை குட்டி..” என்றார் அப்பா.

சில நாட்களுக்கு பிறகு ஒருநாள், அப்பா இரவு கதை சொல்ல வந்தபோது.... அமுதா ஒரு தயக்கத்துடன், “இந்தாங்கப்பா...” என சொல்லிக் கொண்டே ஒரு சிறிய பெட்டியை திறந்து அதிலிருந்த அவளின் விருப்பமான முத்துமாலையை எடுத்து அப்பாவின் கைகளில் தந்தாள். அது பழசாகியும்... சில முத்துக்கள் உடைந்தும் போயிருந்தன.

அதை ஒரு கையில் வாங்கிக் கொண்ட அப்பா, மறுகையால் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு நீல வெல்வெட் பெட்டியை எடுத்தார். அதில் உண்மையான முத்துக்களால் ஆனா ஒரு அழகிய முத்துமாலை இருந்தது.

அவர் அதை தன்னுடன் எப்போதும் வைத்திருந்தார். அமுதா தன் மலிவான மாலையை தருவதற்காக காத்திருந்தார் அவர்... அதை தந்தவுடன் அந்த உண்மையான மாலை தந்தார்.

"இதை உனக்கு தருவதற்காகத்தான்டா அம்மு... நான் தினமும்  அந்த ப்ளாஸ்டிக் மாலையை கேட்டேன்..." என்றார் அப்பா.

இந்த தகப்பன் யாருமல்ல... நம் எல்லோருக்கும் தந்தையான இறைவன்...
அந்த குழந்தை தான் நாம்.

ஆம். இதுபோலத்தான் நாமும் நம் வாழ்க்கையில் சில மலிவான விஷயங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு கைவிடுவதற்கு தயாராக இல்லை.

*அத்தகையான போலியான விசயங்களை கைவிட்டால் இறைவன் உண்மையான ஒன்றை நமக்கு பரிசளிப்பான்.*

நமது மோசமான  பழக்கங்கள், செயல்கள், தீய நட்புகள்/ உறவுகள்... போன்ற எது வேண்டுமானாலும்  நம்முடன் மிகவும் பின்னிப் பிணைந்திருக்கலாம்.. அவைகளால் நமக்கு பாதிப்பு என தெரிந்தும் கூட கைவிட கடினமானவைகளாக இருக்கலாம்...

ஆனால் அவைகளை எல்லாம்விட சிறந்தவைகள் நமக்காக காத்திருக்கின்றன.... அத்தகைய சிறப்பான ஒன்றை பெறவேண்டுமானால்... போலியான மலிவான விசயங்களை நாம் கைவிட வேண்டும்.

அன்பே வடிவான இறைவன் சிறந்த ஒன்றை தராமல் நம்மிடமிருந்து எதையும் எடுத்துக் கொள்வதில்லை...
ஜெகதீஸ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்

Saturday 11 March 2023

communism

[3/11, 9:26 PM] Jagadeesh Krishnan: *கம்யூனிசவாதிகளின் கம்யூனிசம்*

ஒரு கம்யூனிசவாதியிடம் ஒருவன் கேட்டான்

உங்களிடம் ஒரு கோடி ரூபாய் இருந்தால்
சக தோழர்களுக்கு பகிர்ந்தளிப்பீர்களா என

அந்த கம்யூனிசவாதி உடனே
பகிர்ந்தளித்துவிடுவேன் என்றான்.

இவன் மீண்டும் கேட்டான்

சரி உங்களிடம் பத்து கோழி இருந்தால் பகிர்ந்தளிப்பீர்களா?

உடனே அவன் (கம்யூனிசவாதி)
முடியவே முடியாது என்றான்.

இவன் கேட்டான் ஒரு கோடியை பகிர்ந்தளிக்க தயாராக இருக்கும் நீங்கள்

பத்து கோழியை ஏன் பகிர்ந்தளிக்க தயாராயில்லை என

அவன் (கம்யூனிசவாதி) சொன்னான்

உண்மையிலேயே பத்து கோழிகள் என்னிடம் உள்ளது என்றான்.

இதுதான் கம்யூனிசம்.ஜெகதீஸ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[3/11, 9:27 PM] Jagadeesh Krishnan: *Communism by Communists*

 one asked a communist

 If you have one crore rupees
 Would you like to share it with your colleagues?

 That communist immediately
 He said he will distribute it.

 Ivan asked again

 Well, if you have ten chickens, would you share?

 Immediately he (communist)
 He said that it cannot be done.

 Ivan asked, are you ready to share one crore

 Why are you not ready to share ten chickens?

 He (the communist) said

 He said that I really have ten chickens.

 This is Communism. Jagadeesh Krishnan is a psychologist and international author

Monday 6 March 2023

jagadeesh

எனக்கு ஒரு கடிதம் வந்தது.

 அதில் நீங்கள் ஏன் சில மருத்துவமனைகளை,சில பள்ளிகளை திறந்து நடத்தக் கூடாது 

நீங்கள்  உங்களது சன்யாசிகளுக்கு
 ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதை ஏன் போதிக்ககூடாது என்று கேட்டிருந்தது. 

ஏழைகள் உதவி பெற்றுக் கொண்டேதான் இருக்கிறார்கள்,ஆனாலும் அவர்கள் ஏழைகளாகவே இருக்கிறார்கள்.

ஏழைகளுக்கு உதவி செய்வதன் மூலம் ஏழ்மையை ஒழித்து விட முடியாது. 

அது மட்டும் நிச்சியம். 

வாழ்க்கையை பற்றிய ஒரு புதிய பார்வையை அவர்களுக்கு அளிப்பதன் மூலம் மட்டுமே ஏழ்மையை ஓழிக்க முடியும். 

அவர்களது கருத்துகள் அவர்களை ஏழையாக்குவதால் அவர்கள் ஏழையாக இருக்கின்றனர், வாழ்க்கையை பற்றிய அவர்களது கண்ணோட்டம் அவர்களை ஏழையாக்குவதால் அவர்கள் ஏழையாக இருக்கின்றனர்.

 அவர்கள் ஏழையாக இருப்பது அவர்களால்தான். 

அவர்களுக்கு கருணை தேவையில்லை, அவர்களுக்கு தேவை கல்விதான்.

 அவர்களுக்கு சேவை தேவையில்லை, அவர்கள் விழிக்க வைக்கப்பட வேண்டும்.

 ஆனால் யாரும் தங்களது கனவிலிருந்தும் தூக்கத்திலிருந்தும் வெளி வர விரும்புவதில்லை.

 எனவேதான் அவர்களுக்கு என்மேல் ஆத்திரம் வருகிறது.

மருத்துவமனைகள் இருக்கின்றன, மேலும் சிலது வரலாம், பள்ளிகள் இருக்கின்றன, மேலும் சிலது திறக்கலாம், ஆனால் அது அவர்களுக்கு உதவப் போவதில்லை. 

இது கடலில் சில கரண்டி வண்ணங்களை கரைப்பது போன்றது,

 இதனால் கடலின் நிறம் மாறப்போவதில்லை.

நாம் முழு அடிப்படையையே மாற்ற வேண்டும். 

ஏன் இந்தியா பல நூற்றாண்டுகளாக ஏழ்மையிலேயே இருக்கிறது

 காரணம் மிகவும் ஆழமானதாக இருக்க வேண்டும். 

காரணம் இந்திய மனம் பணத்திற்கு/வாழ்விற்கு எதிரானது. 

இது பிளவுபட்டிருக்கிறது, இந்த உலகம் அந்த உலகம் என்று பிரிந்திருக்கிறது.

 பொருளுலகத்திறக்கு எதிரானது இந்திய மனம் இதுதான் காரணம்.

 நீ பொருளுலகத்திற்கு எதிராக இருந்தால் இயல்பாகவே நீ ஏழையாகத்தான் இருப்பாய். 

அது உனது முடிவு. 

உனது விதியை நீயேதான் முடிவு செய்கிறாய்.

உண்மையான ஆன்மீகம் விஞ்ஞான ரீதியான பொருளுலகத்தை சார்ந்தது.

 பொருளும் சுயஅறிவும் இரண்டு விஷயங்கள் அல்ல, உடலும் சுயஅறிவும் வேறுபட்டது அல்ல, அவை ஒன்றேதான்.

 இந்த உலகம் விரும்பப்பட வேண்டும், பின்பு இந்த உலகம் தன்னை வெளிபடுத்தும், தன் ரகசியங்களை உனக்கு தெரியப்படுத்தும்.

மேலை நாடுகள் ஒரு தவறு செய்தன, அதனால் அங்கே ஆன்மீகம் இல்லை, பொருளுலகம் மட்டுமே இருக்கிறது,

 அதனால் அவர்களது அடிப்படை தேவைகள் பூர்த்தியாகி விட்டன, ஆனால் அவர்களது உயரிய தேவைகள் அவர்களை தொந்தரவு செய்கின்றன,

 அது அவர்களை தற்கொலை வரை செலுத்துகிறது அல்லது பைத்தியம் பிடிக்கிறது. 

கீழை நாடுகள் வேறொரு தவறு செய்கின்றன. 

இங்கே பொருளுலகம் இல்லாமல் ஆன்மீகம் மட்டுமே இருக்கிறது.

 அதனால் இது ஒரு ஆவி போலாகி விட்டது, உடல் இன்றி அலையும் ஒரு ஆவி போலாகி விட்டது. 

மேற்கு உயிரின்றி உடல் மட்டுமே உள்ள ஒரு எலும்புக்கூடு போல, கிழக்கு உடல் இன்றி அலையும் ஆவி போல இருக்கின்றன.

என்னுடைய முயற்சி என்னவென்றால் கிழக்கையும் மேற்கையும் அருகருகே கொண்டு வந்து இணைத்தால் அப்போது எல்லோரிடமும் உடலும் உயிரும் இருக்கும்.

 ஆன்மீகமும் பொருளுலகமும் ஒரே வாழ்வின் இரண்டு பார்வைகள்.

 அப்போது ஏழ்மை மறைந்து விடும். 

இந்த உலகம் தேவையான அளவு வளமாகவே உள்ளது,

 மனிதனின் புத்திசாலித்தனம் உள்ளது – நாம் இதை இன்னும் அதிக அளவு வளப்படுத்தலாம்.

ஆனால் நீங்கள் இங்கே கம்யூனில் அதிக அளவு இந்தியர்களை பார்க்க முடியாது. 

சிலரே இருப்பர். 

அடிப்படை தேவைகள் பூர்த்தியானாலும்கூட திருப்தியாக இருக்க முடியாது என்பதை பார்க்கும் அளவு புத்திசாலிகளாக இருக்கும் சிலரே இங்கு இருப்பர். 

இவர்கள் கிழக்கத்தியநாடுகளில் பிறந்திருந்தாலும்கூட முன்னேற்றமடைந்தவர்கள், நிகழ்கால மனம் படைத்தவர்கள். 

இவர்கள் மேற்கத்திய நாடுகளில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்பவர்கள்.

 இந்தியா செல்வ செழிப்படைந்தாலும்கூட இதுதான் நடக்கப் போகிறது. 

மேற்கத்திய நாடுகளில் மகிழ்ச்சி இல்லை, இந்தியா வளமடைந்தாலும்கூட இங்கும் மகிழ்ச்சி இருக்காது. 

அதனால் மகிழ்ச்சி வேறு பரிமாணங்களில் தேடப்பட வேண்டும்.

Jagadeesh Krishnan psychologist and international author 

jagadeesh

இப்பொழுது நான்  ஜீசஸைப் பற்றிச் சொல்லப்போகிறேன் . 

இதைக் கிறிஸ்துவர்கள் ஒருக்காலும் நம்பமாட்டர்கள் . 

அதுபற்றி எனக்குக் கவலை இல்லை .

 இதை நம்புவதும் , நம்பாததும் அவர்களது இஷ்டம் .

 ' ஆனந்தமாக - மகிழ்ச்சியாக - சிரிப்பாக இருங்கள் ' என்று சொல்லுவதற்கு ஒரேவிதமான வார்த்தையை உபயோகித்த ஒரு வித்தியாசமான ஆள் ஜீசஸ்தான் . 

அந்த வார்த்தை REJOICE . 

ஆனால் நீங்கள் சர்ச்சுக்குள் நுழைந்ததும் , யாரைச் சந்திக்கிறீர்கள் ?

 தொங்கிய - நீண்ட - இறுக்கமான முகத்தையுடையவர்களைத்தான் .

 நீங்கள் ஜீசஸுக்காக அங்கு துக்கம் அனுசரிக்கிறீர்கள் !

 இவர்கள்தான் ஜீசஸை நம்புபவர்கள் , ஆதரிப்பவர்கள் . 

இவர்களது வழியில் வந்தவர்கள்தான் அந்த அற்புதமான மனிதனைச் சிலுவையில் அறைந்தார்கள் .

 இப்பொழுது உள்ளவர்கள் அவரது சவப்பெட்டியில் புதிய ஆணியை அடிக்க வந்திருக்கிறார்கள் !

அவர் காப்பாற்றப்பட்டு , காஷ்மீருக்கு வந்து வாழ்ந்து அடக்கமானது குறித்து ஏற்கெனவே நான் சொல்லியிருக்கிறேன் .

 இவர் இறந்தது காஷ்மீரில் உள்ள பகல்ஹாமில் . 

இது எனக்கு நிச்சயமாகத் தெரியும் .

 யூதர்களின் மூதாதையர்கள் காஷ்மீரில்தான் இருந்தார்கள் .

காஷ்மீர்தான் யூதர்களின் தாயகம் ; இஸ்ரேல் அல்ல !

 இங்கிருந்துதான் யூதர்கள் நாடோடிபோல இஸ்ரேலுக்குச் சென்றார்கள் . 

மோசஸும் இங்கு வந்துதான் சமாதியானார் ! 

இப்பொழுது இவர்கள் இருவரது சமாதியும் பஹல்காமில் இருக்கிறது !

 இதை யூதர்களின் சந்ததியினர் பாதுகாத்து வந்தார்கள் .

 இந்த இரண்டு சமாதிகளுக்கும் பக்கத்திலேயே பஹல்பாபாவின் சமாதியும் இருக்கிறது ! 

பழங்கால காஷ்மீரிகள் யூதர்கள்தான் , ஹிந்துவோ , முஸ்லீமோ அல்ல !

 ஆனால் , பிறகு இவர்களில் பெரும்பாலோர் ஹிந்துக்களாக மாறினார்கள் -

 ஆரியர்களின் வருகைக்குப் பிறகு ! பிறகு இவர்களில் பெரும்பாலோர் முஸ்லீம்களானார்கள் !

 இந்திராகாந்தியின் மூக்கைப் பாருங்கள் ! அசல் யூத மூக்கு !

 மோதிலால் நேருவின் மூக்கும் அப்படித்தான் ! 



நான் ஜீசஸின் சமாதியை காஷ்மீரில் பார்த்திருக்கிறேன் .

 இந்தப் பெருமை எல்லாம் ரோமானியன் பிலோத்துக்குத்தான் போய் சேரவேண்டும் ! 

எனக்கு எப்பொழுதுமே கல்லரைகளை ஆராய்ச்சி செய்வது மிகவும் பிடிக்கும் .

 ஆரம்பத்தில் காஷ்மீரிலிருந்து கிளம்பிய ஒரு யூதக் கூட்டம் எங்கே சென்றது என்று தெரியவில்லை . 

ஏன் வளமிக்க காஷ்மீரில் இருந்து இவர்கள் கிளம்பினார்கள் என்ற காரணம் சரியாகத் தெரியவில்லை .

 அவர்கள் சென்று 40 வருடத்திற்குப் பிறகு அவர்களைத் தேடி மோசஸ் ஒரு கூட்டத்தோடு புறப்பட்டார் .

 பாலைவனத்தில் கால்நடையாகச் சென்று , இஸ்ரேலை அவர் அடைந்து சில ஆன்மீக புத்திமதிகளைச் சொன்னார் .

 அதுதான் அந்த பத்துக் கட்டளை !

 ஆனால் , அவர்கள் யாரும் இதற்கு மதிப்பு கொடுக்கவில்லை .

 பிறகு அவர் மிகவும் வருத்தமுற்று , எப்படியோ போகட்டும் என்று காஷ்மீருக்குத் திரும்பி வந்து அடக்கம் ஆகிவிட்டார் . 

இதைப் போலத்தான் ஜீசஸும் திரும்ப காஷ்மீருக்கு வந்திருக்கிறார் . இது என்னுடைய அபிப்பிராயம் .

அந்த இரண்டு கல்லரைகளும் யூத முறைப்படி அமைக்கப்பட்டிருக்கின்றன .

 ஒரு முகமதியனின் கல்லறையின் தலைப்பாகம் மெக்காவை நோக்கி இருக்கும் . 

ஆனால் இந்த இரண்டு கல்லறைகளும் வேறு கோணத்தில் இருந்தன .

 மோசஸின் சமாதியில் ' மோசா ' ( MOSHA ) என்று பொறிக்கப்பட்டுள்ளது . 

இது அராமிக் ( ARAMIC ) மொழி .

 அதைப்போல் ஜீசஸின் பெயரை ' யேசு ' ( YESU ) என்று பொறிக்கப்பட்டிருந்தது .

 இது ஹீப்ரூ (HEBREW) மொழியாகிய ஜேசுவா ( JESUVA ) வின் மரூவு .

 வார்த்தைகளில் என்ன இருக்கிறது ?
By
Jagadeesh Krishnan psychologist and international author