[3/19, 12:12 PM] Jagadeesh Krishnan: ஒரு மிருகக் காட்சி சாலையில் புதிதாக ஒரு சிங்கத்தை கொண்டு வந்தனர்.
அந்த சிங்கம் இளமையாக துடிப்பாக இருந்தது.
அதே மிருகக் காட்சி சாலையில் இன்னொரு கிழட்டு சிங்கமும் இருந்தது.
அந்த கிழட்டு சிங்கம் எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கும்.
அதனால் பார்வையாளர்கள் ஏமாற்றம் அடைந்து போய் விடுவார்கள்.
இதைக் கண்ட இளைய சிங்கம் தனது வித்தையை காட்டியது.
ஓவென வாயைப் பிளந்து ஆக்ரோஷமாக கர்ஜித்தது.
இதனைக் கண்டு பார்வையாளர்கள் உற்சாகம் அடைந்தனர் .
கைதட்டி ரசித்தனர்.
நாளுக்கு நாள் பூங்காவுக்கு பார்வையாளர்கள் வருகை அதிகரித்தது.
இளம் சிங்கத்தைப் பார்க்க பலர் குழந்தைகளுடன் திரண்டு வந்தனர்.
இந்த சிங்கமும் அவர்களுக்கு நல்லதொரு பொழுதுபோக்காக கர்ஜனை செய்து மகிழ்வூட்டியது.
ஆனால் அந்த பூங்காவின் ஊழியர்கள் உணவு கொண்டு வரும் போது கிழட்டுச் சிங்கத்திற்கு குதிரை இறைச்சியை கொண்டு வந்தனர்.
அந்த கிழட்டுச் சிங்கமும் அதை சாப்பிட்டு தூங்கிவிடும்.
ஆனால் இந்த இளம் சிங்கத்துக்கு ஆரஞ்சுப் பழங்களும் வாழைப்பழங்களும் வேர்க்கடலையும் கொண்டு வந்தனர்.
தினமும் இது தொடரவே பொறுமை இழந்த இளம் சிங்கம் ஒரு ஊழியரை அழைத்தது.
"நான் இத்தனை பார்வையாளர்களை வரவைத்திருக்கிறேன்.
ஆனால் எனக்கு இரைச்சியைத் தராமல் ஆரஞ்சு வாழைப்பழம் தருகிறீர்கள், அந்த கிழட்டுச் சிங்கம் எதவும் செய்யாமல் சதா படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கு மட்டும் நல்ல நல்ல இறைச்சியைக் கொண்டு வருகிறீர்களே இது நியாயமா "என்று புலம்பியது.
அப்போது அந்த ஊழியர் சொன்னார் .
எங்கள் பட்ஜெட்டில் ஒரு சிங்கம் தான் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
அதற்குத்தான் இரைச்சி வாங்கிப் போடுகிறோம்.
உன்னை இன்னும் சிங்க கணக்கில் சேர்க்கவில்லை.
ஒரு குரங்கு கணக்கில் சேர்த்து வைத்துள்ளோம்.
அதனால்தான் குரங்குக்கு தரும் உணவைத் தருகிறோம்
அறிவு என்பது ஆள் ஆளுக்கு வேறுபடுகிறது
நீ உன்னை எப்படி வேண்டுமானாலும் நினைத்து கொள்ளலாம்
ஆனால் பிறர் உன்னைப்பற்றி, உனது செயலைப்பற்றி உன்னைப்போலவே நினைப்பதில்லை
ஜெகதீஸ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[3/19, 12:13 PM] Jagadeesh Krishnan: A new lion was brought to a zoo.
The lion was young and vibrant.
There was another baby lion in the same zoo.
That giant lion is always sleeping.
So the audience will leave disappointed.
Seeing this, the young lion showed his trick.
Owena let out an aggressive roar.
The audience was excited to see this.
Applauded.
The number of visitors to the park increased day by day.
Many people flocked with children to see the young lion.
This lion also roared and entertained them as a good pastime.
But when the park staff brought food, they brought horse meat to the lion.
That baby lion also eats it and falls asleep.
But they brought oranges, bananas and peanuts to this young lion.
The young lion, impatient to continue this day after day, called a servant.
“I've had so many visitors.
But you don't give me meat and give me orange banana, that baby lion is lying down and sleeping without doing anything. But is it fair that you bring good meat just for that,” he lamented.
Then the employee said.
A lion's share of our budget has been credited.
That is why we buy meat.
You haven't been added to the lion count yet.
Added to a monkey account.
That's why we give monkey food
Knowledge varies from person to person
You can think of yourself however you want
But others don't think the same way about you and your actions
Jagadeesh Krishnan is a psychologist and international author
No comments:
Post a Comment