[2/10, 2:49 PM] Jagadeesh ChandraKrishnan: வாசியோகம் சூட்சுமம் - விளக்கம்.
வாசியோகத்தின் சூட்சுமம் குறித்து விளக்கம் தருகிறேன். இன்னும் நிறைய விஷயங்கள், மற்றும் செய்முறை ஆகியவற்றை நேரிடையான பயிற்சியில் மட்டுமே உணர முடியும்.
நாம் பிறக்கும்போது நமது மூக்கு வழியாகவும் சுவாசம் நடக்கும். அதே சமயம் உச்சந்தலை ( உச்சிக்குழி ) வழியாகவும் சுவாசம் ( பிரபஞ்ச சக்தியானது ) வந்துகொண்டு இருக்கும். இதனால் தான் பிறந்த குழந்தைகளுக்கு உச்சிக்குழி துடிப்பது தெளிவாக தெரியும். இது இரண்டு வயது முடிந்து முன்றாம் வயது ஆரம்பிக்கும் காலத்தில் இருந்து மெல்ல கடினப்பட ஆரம்பிக்கும். படிப்படியாக இதனால் கிரகிக்கப்படும் ஆற்றலும் தடைபட்டுபோகும்.
இவ்வாறு தடைபட்டு போன அந்த ஆற்றலை நாம் மறுபடியும் கிரகிக்க செய்யும் ஒரு பயிற்சியே வாசியோகம்.
மனிதன் பிறக்கும் போது மூச்சு காற்று இரண்டு நாசி துவாரங்கள் வழி குடி புகுந்தது. அவை இடகலை மற்றும் பிங்கலை என்ற சுவாசமாகும்.
நமது உடல் நோயின்றி இருக்க 96 கலை சக்தி வேண்டும்.
பிராணனை அளக்க ( 1 கலை = 1 energy unit ) கலை அளவில் திருமூலர் சொல்லி உள்ளார் .
32 கலை உயிர் சக்தி பிரபஞ்சத்தில் இருந்து கிடைக்கும். ( பிரபஞ்ச கலை ).
இதைக்கொண்டு 64 கலை சக்தியை ( அக்கினி கலை ) உடல் உற்பத்தி செய்து கொள்ளும்.
அதாவது ஒரு பிரபஞ்சகலை இரண்டு உடல் கலை சக்தி உற்பத்தி செய்யும்.
ஆகமொத்தம் 96 கலை சக்தி கிடைக்கும். உடல் நோயின்றி வாழும் .
ஆனால் பிறப்பில் இடகலை என்ற சந்திரகலை 16 கலை சக்தி கொண்டது .
பிங்கலை என்ற சூரியகலை 12 கலை சக்தி மட்டும் கொண்டது.
இதனால் பிரபஞ்ச சக்தியான 32 கலையில் உடல் 28 கலை மட்டும் கிரகிக்க முடியும்.
மீதம் உள்ள நான்கு பிரபஞ்ச கலையை உடல் பயன்படுத்த முடியாமல் போய்விடும்.
இந்த நான்கு கலை வித்தியாசத்தால் பிரபஞ்ச சக்தியில் நான்கு கலை சக்தி கிரகிக்க முடியாமல் போகிறது.
இதனால் உடல் 8 கலை சக்தி உருவாக்க முடிவதில்லை.
ஆக பிரபஞ்ச சக்தி 4 கலை மற்றும் அதை கொண்டு உடல் உற்பத்தி செய்யும் 8 கலை ஆகிய இரண்டும் ( மொத்தம் 12 கலை சக்தி ) நம் உடலுக்கு கிடைக்காமல் போகிறது.
இப்படி வீணாகும் 12 கலை சக்தியை பயிற்சி செய்து கிரகிக்க வைத்தால் உடல் நோயின்றி வாழும்
இது சித்தர்களின் சக்தி சமன்பாடு.
இந்த 12 கலை வித்தியாசத்தால் நமது உடல் செல்கள் மீண்டும் புதிப்பிக்கப்படுவது ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் தடைபடுகிறது.
குறிப்பிட்ட அளவு செல்கள் புதிப்பிக்கப்படாததால் நமது உடலில் நோய் உருவாகிறது. முதுமை வருகிறது.
இந்த சக்தி குறைபாடு செல்களின் இயக்கத்தை பாதித்து கழிவுகளை அகற்ற முடிவது இல்லை . புதிய செல்களை வேண்டிய அளவு உற்பத்தி செய்ய முடிவது இல்லை.
இதை தடுக்க முறையான வாசி பயிற்சி செய்து 4 கலை சக்தி கொண்ட தார கலை உருவாக்கிட வேண்டும்.
இப்போது இந்த தார கலை முன்பு பற்றாக்குறையாக இருந்த 4 பிரபஞ்ச கலை சக்தியை ஈடு செய்து விடும்.
இதை கொண்டு உடல் தனக்கு தேவையான 8 சக்தி கலை உற்பத்தி செய்து கொள்ளும்.
உடலில் பற்றாக்குறையாக உள்ள 12 கலை சக்தி இப்போது கிடைத்து விடும்.
இப்போது 32 பிரபஞ்ச கலையுடன் உடல் உற்பத்தி செய்யும் 64 கலையும் சேர்த்து குறைவின்றி முழுமயான 96 கலை சக்திகளையும் பெறுகிறான்.
இதனால் செல்களுக்கு தேவையான சக்தி குறைவின்றி கிடைத்து விடுகிறது. எனவே செல்களின் உற்பத்தியும் , கழிவு நீக்கமும் குறையின்றி முழுமையாக நடைபெறுகிறது.
இப்போது ஆற்றல் அழிவின்றி கிடைப்பதால் நோயின்றி வாழலாம்.
இவ்வாறு நமக்கு தேவையான சக்தியை கிரகிக்க செய்யும் பயிற்சி இது.
இந்த வாசியோகத்தை நேரிடையாக கற்கும் போது மேலும் தெளிவாக பல விளக்கங்களை தெரிந்து கொள்ளலாம்.
இது திருமூலர் சொன்ன கணக்கீடு.
அதற்கான பாடல் கீழே.
எட்டெட்டனலின் கலையாகும் ஈராறுட
கட்டப் படுங்கதி ரோனுக்குஞ் சூழ்கலை
காட்டப்படும் மீரெட்ட மதிகலை
ஓட்டப்படாயிவை ஒன்றோடோன் றாகவே
எட்டெட்டும் ஈராறும் ஈரெட்டும தீகதிர்
சுட்டிட்ட சோமனின் தோன்றும் கலை
காட்டப்படும் தார கைகதிர் நாளுல
கட்டிட்ட தொண்நூற் றோடாறும கலாதியே
-திரு மந்திரம் பாடல் 855, 856.
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[2/10, 2:51 PM] Jagadeesh ChandraKrishnan: Vasi yogam Explanation.
Let me explain the intricacies of reading. A lot more things, and the recipe can only be realized in direct practice.
Breathing also happens through our nose when we are born. At the same time, respiration (cosmic energy) is coming through the scalp (apex). This is why it is so obvious for newborns to have an orgasm. It starts to harden from the age of two to the beginning of the third year. Gradually the energy thus absorbed will also be stifled.
Reading is an exercise in making us re-absorb that energy that has thus been blocked.
When a man is born the breath air enters through two nostrils. They are the breath of the medial and the posterior.
Our body needs 96 art power to be disease free.
To measure prana (1 art = 1 energy unit) Tirumular says on the art level.
32 Art life force is available from the universe. (Universal Art).
With this the body produces 64 art power (art of fire).
That is, one universe produces the power of two physical arts.
A total of 96 art powers are available. Living without physical illness.
But the lunar eclipse of the Intermediate at birth has 16 artistic powers.
The solar art of Pingalai has only 12 artistic powers.
Thus out of the 32 arts of universal power the body can absorb only 28 arts.
The body becomes unable to use the remaining four cosmic arts.
Because of these four artistic differences the four artistic forces in the universe are going to be incomprehensible.
Thus the body is unable to create 8 artistic power.
So the universal power of 4 arts and the 8 arts that the body produces with it (total 12 art power) is going to be unavailable to our body.
If you practice and absorb the 12 wasted art power, the body will live without disease
This is the power equation of the Siddharthas.
These 12 artistic differences prevent the regeneration of our body cells beyond a certain age.
Disease develops in our body because a certain amount of cells are not renewed. Aging is coming.
This energy deficiency affects the movement of cells and is unable to remove waste. New cells are not able to produce the required amount.
To prevent this you need to do proper vasi training and create Tara art with 4 art power.
Now this Tara art will make up for the 4 universal art power that was previously lacking.
With this the body will produce the 8 power art it needs.
The 12 art powers that were lacking in the body will now be available.
He now has 32 cosmic arts as well as 64 body-producing arts and a total of 96 full-fledged art powers.
This provides the cells with the energy they need. Thus the production of cells and the removal of waste takes place completely without fail.
Now that energy is available indestructibly we can live without disease.
Thus it is the training that makes us absorb the energy we need.
Many explanations can be learned more clearly when learning this reading directly.
This is the calculation made by Tirumular.
The corresponding song is below.
The art of etiquette is two-dimensional
Constructions for the construction of Ronu
Excellent wall art displayed
ஒட்டபோடாயிவை ஒன்றோடோன் ராகவே
Eight and two and two fires
The art of appearing in the pointed Soman
Tara handrail diary displayed
The built ninety-something roadmap
-Mr Mantra Song 855, 856.
By
Jagadeesh Krishnan is a psychologist and international Author
No comments:
Post a Comment