Tuesday, 4 October 2022

Breath

 Your breathing varies according to your emotions. When you are angry, you breathe rhythmically and in sync. When you are lustful, your breath becomes frenzied. When you are calm, quiet, and happy, your breathing becomes musical. Your breath becomes the song. When you feel empty in existence, when you have no desire, when you are satisfied, the breath suddenly almost stops. When you are in a state of awe, in wonder, the breath almost stops. Those are the best moments of life, because at that moment, your breath almost stops. You are completely in tune with existence. You are in God, God is in you.

Your experience with the breath should be energetically exploring, observing, watching and analyzing. Notice how the breath changes with your emotions, and your emotions change with the breath. Notice how your emotions change your breathing. For example, when you are afraid, notice the change in your breathing. Then one day, try changing your breathing to the pattern you breathe in when you're scared. When you change your breathing to the position you fear, you will be surprised. A fear will rise up in you - immediately. When you are deeply in love with someone, notice your breathing, hold their hand and embrace your loved one. Then one day, while sitting quietly under a tree, breathe in the same pattern and notice it. Make sure your style falls into the same category. Breathe as if you are embracing someone. You will be surprised. The whole of existence becomes your darling. Again a great love will arise in you. They go together. Similarly, in Yoga, Tantra, and Tao in these three great systems, in the science of human consciousness and in the expansion of human senses - the breath is the main phenomenon. They all worked on breathing.

The Buddha's entire system of meditation is based on the quality of breathing. He would say, "Just notice your breathing. Just notice it without changing it, without changing it in any way." But you will be surprised, the moment you start noticing, it will change, because there is a rhythm even in noticing. That's why the Buddha said, "You don't change it. Just watch." Mindfulness brings its own breath. It will come. Slowly, slowly you will be amazed. The more you pay attention, the less you breathe. That breath will be long and deep.

For example, you breathe sixteen times a minute. Now you will only breathe six, or four, or three times. As you become an observer, the breath deepens. It will stretch. You will breathe less and less during the same period. Then you can even come from that side. Breathe slowly, softly, and deeply. You may suddenly see a caring nature arise in you. You will find that each emotion has a correspondence with your respiratory system. It can be stimulated only through breathing.

from medicine

state of mindlessness

By

Immortal Jagadeesh Krishnan

உங்கள் உணர்ச்சிகளுக்கேற்ப உங்கள் சுவாசம் மாறுபடுகிறது. நீங்கள் கோபப்படும் போது, நீங்கள் தாள லயத்தோடு, ஒத்திசைவோடு சுவாசிக்கிறீர்கள். உங்களுக்கு காம இச்சை இருக்கும் போது, உங்கள் சுவாசத்திற்கு பித்துப் பிடிக்கிறது. நீங்கள் அமைதியாக, மெளனமாக, சந்தோஷமாக இருக்கும் போது , உங்கள் சுவாசத்திற்கு இசைத் தன்மை வந்து விடுகிறது. உங்கள் சுவாசமே பாடலாகிறது. நீங்கள் இருத்தலில் விட்டில் இருக்கிற உணர்வு ஏற்படும் போது, உங்களுக்கு ஆசை இல்லாத போது, நீங்கள் திருப்திகரமாக இருக்கும் போது , திடீரென்று ஏறக்குறைய சுவாசம் நின்று விடுகிறது. நீங்கள் ஒரு அச்ச நிலையில் இருக்கும் போது, அதிசயத்தில், இருக்கும் போது சுவாசம் ஏறக்குறைய நிற்கிறது. அதுதான் வாழ்க்கையின் மிகச் சிறந்த தருணங்கள், காரணம் அந்த தருணத்தில் தான் , உங்கள் சுவாசம் ஏறக்குறைய நிற்கிறது. நீங்கள் இருத்தலோடு முற்றிலுமாக இசைந்து இருக்கிறீர்கள். நீங்கள் கடவுக்குள், கடவுள் உங்களுக்குள் இருக்கிறார்.

சுவாசத்தோடு உங்கள் அனுபவம் மிகுந்த ஆற்றலோடு, ஆராய்ந்து, கவனித்து, பார்த்து, பகுப்பாய்ந்து இருக்க வேண்டும். உங்கள் உணர்ச்சிகளோடு சுவாசம் மாறுவதையும், சுவாசத்தோடு உங்கள் உணர்ச்சிகள் மாறுவதயும் கவனியுங்கள். எப்படி உங்கள் உணர்ச்சிகள் சுவாசத்தை மாற்றுகிறதுஎன்பதை கவனியுங்கள். உதாரணமாக நீங்கள் பயப்படும் போது, உங்கள் சுவாசத்தில் ஏற்படுகிற மாற்றத்தை கவனியுங்கள். பிறகு ஒரு நாள் , நீங்கள் பயப்படுகிறபோது சுவாசிக்கிற அந்த பாணிக்கு உங்கள் சுவாசத்தை மாற்றி பாருங்கள். நீங்கள் பயப்படுகிற நிலைக்கு உங்கள் சுவாசத்தை மாற்றும் போது , உங்களுக்கே வியப்பாக இருக்கும். ஒரு பயம் உங்களுக்குள் எழும் - உடனடியாக. யாருடனாவது ஆழ்ந்த காதலில் இருக்கும் போது , உங்கள் சுவாசத்தைக் கவனியுங்கள், அவர்களுடைய கையைப் பிடித்து , நீங்கள் காதலிப்பவரை ஆரத் தழுவிக் கொண்டிருக்கும் போது உங்கள் சுவாசத்தை கவனியுங்கள். பிறகு ஒரு நாள், ஒரு மரத்தின் அடியில் மெளனமாக உட்கார்ந்திருக்கும் போது, அதே பாணியில் சுவாசித்து அதைக் கவனியுங்கள். உங்கள் பாணி, அதே தொகுதியில் விழுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் யாரையோ ஆரத் தழுவிக் கொண்டிருப்பதைப் போலவே சுவாசியுங்கள். உங்களுக்கே வியப்பாக இருக்கும். முழு இருத்தலுமே உங்கள் நேசத்துக்குரியதாக ஆகிவிடும். மறுபடியும் ஒரு சிறந்த காதல் உங்களுக்குள் எழும். அவை இணைந்து போகும். அதே மாதிரிதான், யோகாவில், தந்த்ரா, தாவோ இந்த மூன்று சிறந்த அமைப்புகளிலும் மனித உணர்வு விஞ்ஞானத்திலும், மனித உணர்வுகளை விரிவு படுத்துதலிலும் - சுவாசம் தான் பிரதான நிகழ்வு . அவர்கள் எல்லோரும் சுவாசத்தில் தான் வேலை செய்திருக்கிறார்கள்.

புத்தரின் முழு தியான முறையுமே, சுவாசத்தின் தரத்தின் அடிப்படையில்தான். அவர் சொல்வார், "உங்கள் சுவாசத்தை அப்படியே கவனியுங்கள். அதை மாற்றாமல், எந்த வகையிலும் அதை மாற்றாமல் அதை அப்படியே கவனியுங்கள்."ஆனால் உங்களுக்கே வியப்பாக இருக்கும் , நீங்கள் கவனிக்கத் துவங்கிய தருணத்தில், அது மாறும், காரணம் கவனிப்பதில் கூட ஒரு தாள லயம் இருக்கிறது. அதனால் தான் புத்தர் சொன்னார், "நீங்கள் அதை மாற்ற வேண்டாம் . அப்படியே கவனியுங்கள்."கவனிப்பு தன்னுடைய சுவாசத்தைக் கொண்டு வரும். அதுவாகவே வரும். மெள்ள, மெள்ள நீங்களே வியந்து போவீர்கள். நீங்கள் அதிகமாக கவனிக்கும் போது, நீங்கள் குறைவாக சுவாசிப்பீர்கள் . அந்த சுவாசம், நீண்டதாக, ஆழமானதாக இருக்கும். 

உதாரணமாக, ஒரு நிமிடத்திற்கு நீங்கள் பதினாறு முறை சுவாசிக்கிறீர்கள் . இப்போது நீங்கள் ஆறு, அல்லது நான்கு, அல்லது மூன்று முறைதான் சுவாசிப்பீர்கள் . நீங்கள் கவனிப்பவராக ஆகும்போது, சுவாசம் ஆழமாகும். அது நீளும் . அதே காலகட்டத்தில் நீங்கள் குறைவாக குறைவாக சுவாசிப்பீர்கள் . பிறகு நீங்கள் அந்தப் பக்கத்திலிருந்து கூட வரலாம். மெள்ள, மெளனமாக, ஆழமாக நீண்டு சுவாசிக்கலாம். திடீரென்று ஒரு கவனிப்புத் தன்மை உங்களுக்குள் எழுவதைப் பார்க்கலாம். ஒவ்வோர் உணர்ச்சிக்கும் உங்கள் சுவாச அமைப்போடு ஓர் ஒற்று இருப்பதைக் காணலாம். அதை சுவாசத்தின் மூலமாகத் தான் தூண்ட முடியும்.

மருத்துவத்திலிருந்து

மனமற்ற நிலை

By

Immartal Jagadeesh Krishnan

No comments:

Post a Comment