இப்பொழுது நான் ஜீசஸைப் பற்றிச் சொல்லப்போகிறேன் .
இதைக் கிறிஸ்துவர்கள் ஒருக்காலும் நம்பமாட்டர்கள் .
அதுபற்றி எனக்குக் கவலை இல்லை .
இதை நம்புவதும் , நம்பாததும் அவர்களது இஷ்டம் .
' ஆனந்தமாக - மகிழ்ச்சியாக - சிரிப்பாக இருங்கள் ' என்று சொல்லுவதற்கு ஒரேவிதமான வார்த்தையை உபயோகித்த ஒரு வித்தியாசமான ஆள் ஜீசஸ்தான் .
அந்த வார்த்தை REJOICE .
ஆனால் நீங்கள் சர்ச்சுக்குள் நுழைந்ததும் , யாரைச் சந்திக்கிறீர்கள் ?
தொங்கிய - நீண்ட - இறுக்கமான முகத்தையுடையவர்களைத்தான் .
நீங்கள் ஜீசஸுக்காக அங்கு துக்கம் அனுசரிக்கிறீர்கள் !
இவர்கள்தான் ஜீசஸை நம்புபவர்கள் , ஆதரிப்பவர்கள் .
இவர்களது வழியில் வந்தவர்கள்தான் அந்த அற்புதமான மனிதனைச் சிலுவையில் அறைந்தார்கள் .
இப்பொழுது உள்ளவர்கள் அவரது சவப்பெட்டியில் புதிய ஆணியை அடிக்க வந்திருக்கிறார்கள் !
அவர் காப்பாற்றப்பட்டு , காஷ்மீருக்கு வந்து வாழ்ந்து அடக்கமானது குறித்து ஏற்கெனவே நான் சொல்லியிருக்கிறேன் .
இவர் இறந்தது காஷ்மீரில் உள்ள பகல்ஹாமில் .
இது எனக்கு நிச்சயமாகத் தெரியும் .
யூதர்களின் மூதாதையர்கள் காஷ்மீரில்தான் இருந்தார்கள் .
காஷ்மீர்தான் யூதர்களின் தாயகம் ; இஸ்ரேல் அல்ல !
இங்கிருந்துதான் யூதர்கள் நாடோடிபோல இஸ்ரேலுக்குச் சென்றார்கள் .
மோசஸும் இங்கு வந்துதான் சமாதியானார் !
இப்பொழுது இவர்கள் இருவரது சமாதியும் பஹல்காமில் இருக்கிறது !
இதை யூதர்களின் சந்ததியினர் பாதுகாத்து வந்தார்கள் .
இந்த இரண்டு சமாதிகளுக்கும் பக்கத்திலேயே பஹல்பாபாவின் சமாதியும் இருக்கிறது !
பழங்கால காஷ்மீரிகள் யூதர்கள்தான் , ஹிந்துவோ , முஸ்லீமோ அல்ல !
ஆனால் , பிறகு இவர்களில் பெரும்பாலோர் ஹிந்துக்களாக மாறினார்கள் -
ஆரியர்களின் வருகைக்குப் பிறகு ! பிறகு இவர்களில் பெரும்பாலோர் முஸ்லீம்களானார்கள் !
இந்திராகாந்தியின் மூக்கைப் பாருங்கள் ! அசல் யூத மூக்கு !
மோதிலால் நேருவின் மூக்கும் அப்படித்தான் !
நான் ஜீசஸின் சமாதியை காஷ்மீரில் பார்த்திருக்கிறேன் .
இந்தப் பெருமை எல்லாம் ரோமானியன் பிலோத்துக்குத்தான் போய் சேரவேண்டும் !
எனக்கு எப்பொழுதுமே கல்லரைகளை ஆராய்ச்சி செய்வது மிகவும் பிடிக்கும் .
ஆரம்பத்தில் காஷ்மீரிலிருந்து கிளம்பிய ஒரு யூதக் கூட்டம் எங்கே சென்றது என்று தெரியவில்லை .
ஏன் வளமிக்க காஷ்மீரில் இருந்து இவர்கள் கிளம்பினார்கள் என்ற காரணம் சரியாகத் தெரியவில்லை .
அவர்கள் சென்று 40 வருடத்திற்குப் பிறகு அவர்களைத் தேடி மோசஸ் ஒரு கூட்டத்தோடு புறப்பட்டார் .
பாலைவனத்தில் கால்நடையாகச் சென்று , இஸ்ரேலை அவர் அடைந்து சில ஆன்மீக புத்திமதிகளைச் சொன்னார் .
அதுதான் அந்த பத்துக் கட்டளை !
ஆனால் , அவர்கள் யாரும் இதற்கு மதிப்பு கொடுக்கவில்லை .
பிறகு அவர் மிகவும் வருத்தமுற்று , எப்படியோ போகட்டும் என்று காஷ்மீருக்குத் திரும்பி வந்து அடக்கம் ஆகிவிட்டார் .
இதைப் போலத்தான் ஜீசஸும் திரும்ப காஷ்மீருக்கு வந்திருக்கிறார் . இது என்னுடைய அபிப்பிராயம் .
அந்த இரண்டு கல்லரைகளும் யூத முறைப்படி அமைக்கப்பட்டிருக்கின்றன .
ஒரு முகமதியனின் கல்லறையின் தலைப்பாகம் மெக்காவை நோக்கி இருக்கும் .
ஆனால் இந்த இரண்டு கல்லறைகளும் வேறு கோணத்தில் இருந்தன .
மோசஸின் சமாதியில் ' மோசா ' ( MOSHA ) என்று பொறிக்கப்பட்டுள்ளது .
இது அராமிக் ( ARAMIC ) மொழி .
அதைப்போல் ஜீசஸின் பெயரை ' யேசு ' ( YESU ) என்று பொறிக்கப்பட்டிருந்தது .
இது ஹீப்ரூ (HEBREW) மொழியாகிய ஜேசுவா ( JESUVA ) வின் மரூவு .
வார்த்தைகளில் என்ன இருக்கிறது ?
By
Jagadeesh Krishnan psychologist and international author
No comments:
Post a Comment