Monday, 6 March 2023

jagadeesh

எனக்கு ஒரு கடிதம் வந்தது.

 அதில் நீங்கள் ஏன் சில மருத்துவமனைகளை,சில பள்ளிகளை திறந்து நடத்தக் கூடாது 

நீங்கள்  உங்களது சன்யாசிகளுக்கு
 ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதை ஏன் போதிக்ககூடாது என்று கேட்டிருந்தது. 

ஏழைகள் உதவி பெற்றுக் கொண்டேதான் இருக்கிறார்கள்,ஆனாலும் அவர்கள் ஏழைகளாகவே இருக்கிறார்கள்.

ஏழைகளுக்கு உதவி செய்வதன் மூலம் ஏழ்மையை ஒழித்து விட முடியாது. 

அது மட்டும் நிச்சியம். 

வாழ்க்கையை பற்றிய ஒரு புதிய பார்வையை அவர்களுக்கு அளிப்பதன் மூலம் மட்டுமே ஏழ்மையை ஓழிக்க முடியும். 

அவர்களது கருத்துகள் அவர்களை ஏழையாக்குவதால் அவர்கள் ஏழையாக இருக்கின்றனர், வாழ்க்கையை பற்றிய அவர்களது கண்ணோட்டம் அவர்களை ஏழையாக்குவதால் அவர்கள் ஏழையாக இருக்கின்றனர்.

 அவர்கள் ஏழையாக இருப்பது அவர்களால்தான். 

அவர்களுக்கு கருணை தேவையில்லை, அவர்களுக்கு தேவை கல்விதான்.

 அவர்களுக்கு சேவை தேவையில்லை, அவர்கள் விழிக்க வைக்கப்பட வேண்டும்.

 ஆனால் யாரும் தங்களது கனவிலிருந்தும் தூக்கத்திலிருந்தும் வெளி வர விரும்புவதில்லை.

 எனவேதான் அவர்களுக்கு என்மேல் ஆத்திரம் வருகிறது.

மருத்துவமனைகள் இருக்கின்றன, மேலும் சிலது வரலாம், பள்ளிகள் இருக்கின்றன, மேலும் சிலது திறக்கலாம், ஆனால் அது அவர்களுக்கு உதவப் போவதில்லை. 

இது கடலில் சில கரண்டி வண்ணங்களை கரைப்பது போன்றது,

 இதனால் கடலின் நிறம் மாறப்போவதில்லை.

நாம் முழு அடிப்படையையே மாற்ற வேண்டும். 

ஏன் இந்தியா பல நூற்றாண்டுகளாக ஏழ்மையிலேயே இருக்கிறது

 காரணம் மிகவும் ஆழமானதாக இருக்க வேண்டும். 

காரணம் இந்திய மனம் பணத்திற்கு/வாழ்விற்கு எதிரானது. 

இது பிளவுபட்டிருக்கிறது, இந்த உலகம் அந்த உலகம் என்று பிரிந்திருக்கிறது.

 பொருளுலகத்திறக்கு எதிரானது இந்திய மனம் இதுதான் காரணம்.

 நீ பொருளுலகத்திற்கு எதிராக இருந்தால் இயல்பாகவே நீ ஏழையாகத்தான் இருப்பாய். 

அது உனது முடிவு. 

உனது விதியை நீயேதான் முடிவு செய்கிறாய்.

உண்மையான ஆன்மீகம் விஞ்ஞான ரீதியான பொருளுலகத்தை சார்ந்தது.

 பொருளும் சுயஅறிவும் இரண்டு விஷயங்கள் அல்ல, உடலும் சுயஅறிவும் வேறுபட்டது அல்ல, அவை ஒன்றேதான்.

 இந்த உலகம் விரும்பப்பட வேண்டும், பின்பு இந்த உலகம் தன்னை வெளிபடுத்தும், தன் ரகசியங்களை உனக்கு தெரியப்படுத்தும்.

மேலை நாடுகள் ஒரு தவறு செய்தன, அதனால் அங்கே ஆன்மீகம் இல்லை, பொருளுலகம் மட்டுமே இருக்கிறது,

 அதனால் அவர்களது அடிப்படை தேவைகள் பூர்த்தியாகி விட்டன, ஆனால் அவர்களது உயரிய தேவைகள் அவர்களை தொந்தரவு செய்கின்றன,

 அது அவர்களை தற்கொலை வரை செலுத்துகிறது அல்லது பைத்தியம் பிடிக்கிறது. 

கீழை நாடுகள் வேறொரு தவறு செய்கின்றன. 

இங்கே பொருளுலகம் இல்லாமல் ஆன்மீகம் மட்டுமே இருக்கிறது.

 அதனால் இது ஒரு ஆவி போலாகி விட்டது, உடல் இன்றி அலையும் ஒரு ஆவி போலாகி விட்டது. 

மேற்கு உயிரின்றி உடல் மட்டுமே உள்ள ஒரு எலும்புக்கூடு போல, கிழக்கு உடல் இன்றி அலையும் ஆவி போல இருக்கின்றன.

என்னுடைய முயற்சி என்னவென்றால் கிழக்கையும் மேற்கையும் அருகருகே கொண்டு வந்து இணைத்தால் அப்போது எல்லோரிடமும் உடலும் உயிரும் இருக்கும்.

 ஆன்மீகமும் பொருளுலகமும் ஒரே வாழ்வின் இரண்டு பார்வைகள்.

 அப்போது ஏழ்மை மறைந்து விடும். 

இந்த உலகம் தேவையான அளவு வளமாகவே உள்ளது,

 மனிதனின் புத்திசாலித்தனம் உள்ளது – நாம் இதை இன்னும் அதிக அளவு வளப்படுத்தலாம்.

ஆனால் நீங்கள் இங்கே கம்யூனில் அதிக அளவு இந்தியர்களை பார்க்க முடியாது. 

சிலரே இருப்பர். 

அடிப்படை தேவைகள் பூர்த்தியானாலும்கூட திருப்தியாக இருக்க முடியாது என்பதை பார்க்கும் அளவு புத்திசாலிகளாக இருக்கும் சிலரே இங்கு இருப்பர். 

இவர்கள் கிழக்கத்தியநாடுகளில் பிறந்திருந்தாலும்கூட முன்னேற்றமடைந்தவர்கள், நிகழ்கால மனம் படைத்தவர்கள். 

இவர்கள் மேற்கத்திய நாடுகளில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்பவர்கள்.

 இந்தியா செல்வ செழிப்படைந்தாலும்கூட இதுதான் நடக்கப் போகிறது. 

மேற்கத்திய நாடுகளில் மகிழ்ச்சி இல்லை, இந்தியா வளமடைந்தாலும்கூட இங்கும் மகிழ்ச்சி இருக்காது. 

அதனால் மகிழ்ச்சி வேறு பரிமாணங்களில் தேடப்பட வேண்டும்.

Jagadeesh Krishnan psychologist and international author 

No comments:

Post a Comment