Thursday 16 June 2022

Human nature

[6/16, 11:29 PM] Jagadeesh ChandraKrishnan: நீங்கள் செயல்புரியும் போது, எப்போதும் உங்களது கடந்த காலத்தின் மூலமாகவே செயல்புரிகிறீர்கள். நீங்கள் இதுவரை சேர்த்து வைத்துள்ள அனுபவத்தின் மூலமே செயல்புரிகிறீர்கள்; கடந்த காலங்களில் நீங்கள் எடுத்த முடிவுகளின்படி தான் செயலாற்றுகிறீர்கள் - அப்படியிருக்கும் போது, உங்களால் எப்படி இயல்பாகச் செயலாற்ற

முடியும்?

கடந்த காலம் தான் ஆதிக்கம் செலுத்தும்; மேலும், கடந்த காலத்தினால், உங்களால் இந்த நிகழ்காலத்தையும் கூட பார்க்க முடியாது. உங்களது கண்கள் கடந்த காலத்தால் நிறைந்திருக்கும். கடந்த காலத்தின் புகைமண்டலம் மிகவும் பெரியது. அதனால், உங்களால் பார்ப்பது சாத்தியப்படாது. உங்களால் பார்க்க முடியாது! நீங்கள் கிட்டத்தட்ட
செயலில் குருடன் போன்று ஆகிவிடுவீர்கள். புகையினால் குருடாகிவிடுவீர்கள். கடந்த காலத்தில் எடுத்த முடிவுகளால் குருடாகிவிடுவீர்கள். உங்களது அறிவினால் குருடர் ஆகிவிடுவீர்கள்.

உலகிலேயே மிகவும்

கல்வி அறிவுள்ள மனிதன் தான் இந்த உலகிலேயே மிகவும் குருடானவன். அவன் தனது கல்வி அறிவின் மூலம் செயல்புரிவதால், அவனால் அப்போது உள்ள நிலை என்ன என்பதை காண முடியாது. அவன் வெறுமனே ஒரு இயந்திரம் போன்று செயலாற்றுவான். அவன் ஏதோ ஒன்றைக் கற்றிருக்கிறான். அப்படி அவன் கற்றது. அவனுக்குள் ஏற்கனவே தயாராக உள்ள ஒரு இயந்தி நுட்பம் போல் ஆகிவிடும். எனவே, அவன் அதன் மூலம் தான் செயலாற்றுவான்.

ஒரு புகழ் பெற்ற கதை.

ஜப்பானில் இரண்டு கோவில்கள் இருந்தன. காலம் காலமாக, கோவில்கள் ஒன்றுக்கு ஒன்று எதிரி போன்று இருப்பதால், அந்த இரண்டு கோவில்களும் ஒன்றுக்கொன்று எதிரியாக இருந்தன. அதில் உள்ள பூசாரிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதுகூட கிடையாது. அவர்கள், சாலையில் ஒருவருக்கொருவர் எதிரில் வந்தாலும் கூட, அவர்கள் பேசுவது கிடையாது; பல நூற்றாண்டுகளாக அந்த இரண்டு கோவிலின் பூசாரிகளும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது கிடையாது.

ஒவ்வொரு பூசாரியும், அவருக்கு உதவியாக ஒரு சிறு பையனை சிறு சிறு வேலைகள் செய்வதற்காக வைத்திருந்தனர். மேலும், அந்தச்சிறுவர்கள் ஒருவருக்கொருவர் நண்பர்கள் ஆகி விடுவார்களோ என்றும் பயப்பட ஆரம்பித்தனர்.

அதில் ஒரு பூசாரி தனது சிறுவனிடம் நன்றாக ஞாபகம் வைத்துக் கொள் அடுத்த கோவில் நமது எதிரி ஒருபோதும் அடுத்த கோவிலின்.

சிறுவனோடு நீ பேசாதே. அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். ஒருவன் நோயைத் தவிர்ப்பது போல் அவர்களைத் தவிர்த்துவிடு. பிளேக் நோயை தவிர்த்துவிடுவது போல் தவிர்த்துவிடு!” என்று கூறினார்.

ஆனால், அந்தச் சிறுவனோ ஆர்வமுடன் இருந்தான். ஏனெனில், அந்தக் கோவிலில் மிகப்பெரிய பிரசங்கங்களைக் கேட்டு அவன் களைப்படைந்திருந்தான். அவனால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை; விநோதமான புனித நூல்கள் படிக்கப்பட்டன. அந்த பாஷையை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அங்கே முக்கியமான வாழ்க்கையின் பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன. ஆனால், அங்கே விளையாடுவதற்கு யாரும் இல்லை, பேசுவதற்கு யாரும் இல்லை. மேலும், அடுத்த கோவிலில் உள்ள பையனோடு பேசாதே என்று கூறியது, அவனுக்கு ஆசையைத் தூண்டியது. இப்படித்தான் ஆசை தூண்டப்படுகிறது. அன்றைய தினம் அடுத்த கோவிலின் பையனிடம் அவனால் பேசாமல் இருக்க முடியவில்லை. அவன் அந்தப் பையனை சாலையில் போய்க் கொண்டிருக்கும் போது பார்த்த போது, அவனிடம், "நீ எங்கே போகிறாய்?" என்று கேட்டான்.

அந்த அடுத்த பையனோ கொஞ்சம் தத்துவவாதியாக இருந்தான்; மிகப்பெரிய தத்துவங்களைக் கேட்டு அவனும் தத்துவவாதி ஆகியிருந்தான். உடனே அவன், "போவதா? யாரும் போவதும் இல்லை, வருவதும் இல்லை! அது, தானே நடக்கிறது. காற்று என்னை எங்கே கொண்டு செல்கிறதோ, அங்கே செல்கிறேன்," என்றான். புத்தர் இப்படித்தான் வாழ்ந்தார். ஒரு காய்ந்துபோன சருகு போல, காற்ற எந்தப்பக்கம் அடிக்கிறதோ, அந்தப் பக்கம் அது போகும் என்று அநேக முறை அவனது குரு கூறுவதைக் கேட்டிருக்கிறான். எனவே தான் அந்தப் பையன், “நான் என்பவன் இல்லை! செய்பவன் இங்கே கிடையாது. எனவே, என்னால் எப்படி போக முடியும்? நீ என்ன முட்டாள்தனமாக பேசுகிறாய்? நான் ஒரு காய்ந்த சருகு. காற்று என்னை எங்கு எடுத்துச் செல்கிறதோ ... ...," என்று கூறினான்.

இதைக் கேட்ட அந்த முதல் பையன், வாயடைத்து ஊமையாக நின்றான். அவனால் எந்தப் பதிலும் கூட சொல்ல முடியவில்லை. அவனால் சொல்வதற்கு எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் உண்மையிலேயே வெட்கப்பட்டான். சங்கடப்பட்டான். உடனே, 'இந்த மனிதர்களிடம் பேச வேண்டாம் என்று எனது குரு சொன்னது சரிதான். இவர்கள் ஆபத்தான மனிதர்கள் தான். என்ன பேச்சு இது? நான் கேட்டது மிகவும் எளிய கேள்வி. நீ எங்கே போகிறாய்? என்னும் எளிய கேள்வி. உண்மையில், அவன் எங்கு போய்க் கொண்டிருக்கிறான் என்பதும்கூட எனக்குத் தெரியும். ஏனெனில், நாங்கள் இருவரும் சந்தைக்குப் போய் காய்கறி வாங்கவதற்காகத் தான் போய்க் கொண்டிருந்தோம். அதற்கு எளிதாக பதில் அளித்திருக்க முடியும்,' என்றான்.

அந்தப் பையன் திரும்பிப் போய் தனது குருவிடம், "என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும். நீங்கள் என்னைத் தடுத்தீர்கள். ஆனால், நீங்கள் சொன்னதை நான் கேட்கவில்லை. உண்மையில், நீங்கள் போகக் கூடாது என்று தடை செய்ததால் தான், எனக்கு அங்கு போக வேண்டும் என்று ஆசை தூண்டியது. அந்த ஆபத்தான மக்களிடம் நான் பேசியது இதுதான் முதல்முறை. நான் அவனிடம், 'நீ எங்கே போகிறாய்?' என்று ஒரு எளிய கேள்வியைத் தான் கேட்டேன். ஆனால் அவனோ, அதற்கு விநோதமான பதில்களை அளித்தான். 'போவது, வருவது என்று ஒன்றும் கிடையாது. போவது யார்? வருவது யார்? நான் வெறும் வெறுமையானவன். நான், காற்றில் பறந்து செல்லும் ஒரு காய்ந்த சருகு. அந்த காற்று என்னை எங்கு எடுத்துச் செல்கிறதோ, அங்கு நான் செல்வேன்,' என்கிறான்," என்று கூறினான்.

அதைக் கேட்ட அவனது குரு, "நான் ஏற்கனவே கூறினேன். இப்போது, நாளை நீ அதே இடத்தில் நின்று கொண்டு, அவன் வரும் போது, 'நீ எங்கே போகிறாய்?' என்று கேள். அப்போது, அவன் அந்த விஷயங்களை மீண்டும் கூறும்போது, நீ அவனிடம், "ஆம், அது உண்மை தான். ஆம், நீ ஒரு காய்ந்து போன சருகு தான். நானும் அதே போன்று தான். ஆனால், காற்று அடிக்காத போது நீ எங்கே போவாய்? அதன்பின்னர், உன்னால் எங்கு போக முடியும்?' என்று வெறுமனே அவனிடம் கூறு. அதனால், அவன் தர்மசங்கடத்தில் மாட்டிக் கொள்வான். மேலும், அவன் மாட்ட வேண்டும்; அவன் தோற்கடிக்கப்பட வேண்டும். நாங்கள் தொடர்ந்து இதே போன்று விவாதம் செய்து கொண்டு வருகிறோம். அந்த கோவிலைச் சேர்ந்தவர்கள், விவாதத்தில் எங்களை ஒருபோதும் தோற்கடிக்க முடியவில்லை. எனவே, நாளைக்கு இதை நீ செய்தாக வேண்டும்." என்றார்.

அந்தப் பையன் காலையில் எழுந்தான். தான் சொல்ல வேண்டிய பதிலை, தான் போவதற்கு முன்பு மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்துக் கொண்டான். அதன்பின்னர், எதிர் கோவிலின் பையன் கடந்து போகும் சாலையின் சந்திப்பில் நின்று கொண்டு, தான் சொல்ல வேண்டியதை திரும்பத் திரும்ப சொல்லிப் பார்த்தான். அதன்பின்னர், அந்தப் பையன் வருவதைப் பார்த்தான். உடனே அவன், 'சரி, இப்போது பார்ப்போம்!' என்று தயாரானான்.

அந்தப் பையனும் வந்தான். இவன் உடனே அவனிடம், "நீ எங்கே போகிறாய்?” என்று கேட்டான். மேலும், அவனுக்கு பதிலடி
கொடுப்பதற்கு தனக்கு ஒரு சந்தர்ப்பம் வரும் என்று நம்பிக் கொண்டிருந்தான்,

ஆனால், அந்தப் பையனோ, "எனது கால்கள் போகும் திசையில் போவேன்," என்றான். இந்த முறை காற்றைப் பற்றிக் கூறவில்லை. வெறுமை என்பதைப் பற்றி கூறவில்லை, செய்பவன் என்பவன் இல்லை என்கிற கேள்விக்கே இடமில்லை. எனவே, இப்போது என்ன செய்வது? அவன் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த பதில்கள் முட்டாள்தனமானதாகத் தெரிந்தது. இப்போது காற்றைப் பற்றி பேசுவது சம்பந்தமில்லாததாக இருக்கும். மீண்டும் அவன் கீழே விழுந்துவிட்டது போன்று, இப்போது உண்மையிலேயே அவமானம் அடைந்தான். அவன் தன்னை முட்டாள் என்று நினைத்துக் கொண்டு, 'இந்தப் பையனுக்கு நிச்சயமாக ஏதோ வித்தியாசமான விஷயங்கள் தெரிந்திருக்கிறது. இப்போது இவன், 'எனது கால்கள் போகும் போக்கில் போகிறேன்,' என்கிறானே!' என்று நினைத்தான்.

அந்தப் பையன் மீண்டும் தனது குருவிடம் சென்றான். அந்த குரு அவனிடம், "நான் அந்த மக்களிடம் பேசாதே என்று உன்னிடம் கூறினேன். அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்; இது எங்களுக்கு நூற்றாண்டு கால அனுபவம். ஆனால், இப்போது இதை சும்மா விடக்கூடாது. ஏதாவது செய்தாக வேண்டும். எனவே, நாளை நீ அவனிடம், 'நீ எங்கே போகிறாய்?' என்று கேள். அதற்கு அவன், 'எனது கால்கள் போகும் போக்கில்,' என்று கூறுவான். உடனே நீ, அவனிடம், ‘உனக்கு கால்கள் இல்லையெனில், அதன் பிறகு ... ...?' என்று கேள். அவன் அதற்கு எப்படியாவது வாயடைத்து நின்றாக வேண்டும்," என்று கூறினார்.

ஆகவே, அடுத்த நாள் இந்தப் பையன் அவனிடம், "நீ எங்கே போகிறாய்?" என்று கேட்டுவிட்டு, அவனது பதிலுக்காகக் காத்திருந்தான்.

அதற்கு அந்தப் பையன், “நான் சந்தைக்கு காய்கறி வாங்கப் போகிறேன்," என்று பதில் கூறினான்.

மனிதன், சாதாரணமாக தனது கடந்த காலத்தில் இருந்து தான் செயல்புரிகிறான். ஆனால், வாழ்க்கையோ மாறிக் கொண்டே இருக்கிறது. வாழ்க்கைக்கு உங்களது முடிவுகளோடு பொருந்திப் போக வேண்டும் என்று எந்த கடமையும் கிடையாது. அதனால் தான், வாழ்க்கை குழப்பம் நிறைந்ததாக உள்ளது. அறிவாளிக்கும் குழப்பம் நிறைய உள்ளது. அவரிடம் எற்கனவே தயாராக உள்ள பதில்கள் உள்ளன. பகவத் கீதை, புனித குர்ஆன், பைபிள், வேதங்கள் என்று எல்லாம் உள்ளன. அவர் எல்லாவற்றையும் மனப்பாடம் செய்துஎல்லாவிதமான பதில்களையும் அறிந்து வைத்திருக்கிறார். ஆனால்வாழ்க்கை ஒருபோதும் அதே கேள்வியை மீண்டும் எழுப்பாது. எனவே கற்றறிந்தவர்கள் எப்போதும் குறையுள்ளவர்களாகவே உள்ளனர்.
ஜெகதீஸ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[6/16, 11:31 PM] Jagadeesh ChandraKrishnan: When you act, you always act through your past.  You act on the experience you have put together so far;  You act on the decisions you have made in the past - so how do you act naturally?

 Can?

 The past dominates;  Also, because of the past, you can not even see the present.  Your eyes are filled with the past.  The smog of the past is huge.  Therefore, it is not possible for you to see.  You can not see!  You almost
 You will become like the active blind.  You will be blinded by smoke.  You will be blinded by decisions made in the past.  You will become blind by your knowledge.

 Most in the world

 The educated man is the most blind man in the world.  Because he acts with his academic knowledge he cannot see what the status quo was then.  He simply acts like a machine.  He has learned something.  That's how he learned.  It becomes like a machine technique already ready within him.  Therefore, he will act through it.

 A famous story.

 There were two temples in Japan.  From time immemorial, the temples were like enemies to each other, so those two temples were enemies to each other.  The two priests in it do not even look at each other.  They, even if they come face to face with each other on the road, never speak;  The priests of those two temples have not spoken to each other for centuries.

 Each priest had a little boy to help him with the chores.  Also, the boys began to fear that they would become friends with each other.

 In it a priest reminds his boy well that the next temple is our enemy never the next temple.

 Do not talk to the boy.  They are very dangerous.  Avoid them as one avoids disease.  Avoid plague as it is! ”  He said that.

 But the boy was curious.  Because he was tired of hearing the great sermons in that temple.  He could not understand it;  Strange scriptures were read.  He could not understand that language.  Important life problems were discussed there.  But, there is no one to play with, no one to talk to.  Also, told not to talk to the boy in the next temple, which aroused his desire.  This is how desire is triggered.  He could not help but speak to the boy of the next temple that day.  When he saw the boy walking down the road, he asked, "Where are you going?"  He asked.

 That next guy was a little philosophical;  He was also a philosopher who listened to great philosophies.  Immediately he said, "Going? No one is going, no coming! It just happens. I go where the wind takes me."  This is how the Buddha lived.  He has often heard his guru say that whichever side the wind blows, it will go to that side, like a dried-up cargo.  That's why the guy said, "I'm not!  The doer is not here.  So, how can I go about it?  What nonsense are you talking about?  I am a dry commodity.  Where the wind takes me ... ..., "he said.

 The first boy to hear this, shut his mouth and stood dumb.  He could not even say any answer.  He could not find anything to say.  He was really ashamed.  Embarrassed.  Immediately, 'My guru was right not to talk to these men.  These are dangerous people.  What talk is this?  Very simple question I asked.  Where are you going?  The simple question of.  In fact, I even know where he is going.  Because we were both going to the market to buy vegetables.  That could have been easily answered, 'he said.

 The boy went back to his guru and said, "You must forgive me. You stopped me. But I did not listen to what you said.  I said to him, 'Where are you going?'  I asked him a simple question, but he gave strange answers. 'There is no such thing as going and coming. Who's going? Who's coming? I'm just a blank slate.  I will go, 'he says. "

 On hearing this his guru said, "I have already said. Now, tomorrow you will stand in the same place and when he comes, 'Where are you going?'  Then, when he repeats those things, you say to him, "Yes, it is true.  Yes, you are a dried up commodity.  I'm the same way.  But where do you go when the wind does not blow?  After that, where can you go? '  Simply tell him that.  So, he will get into trouble.  Also, he has to bend;  He must be defeated.  We continue to have similar discussions.  The people of that temple could never defeat us in the debate.  So you have to do this tomorrow. "

 The boy woke up in the morning.  The answer he had to say, he kept repeating before he left.  After that, the boy from the opposite temple stood at the intersection of the passing road and repeated what he had to say.  After that, he saw the boy coming.  Immediately he said, 'Well, let's see now!'  That was ready.

 The boy came too.  Ivan immediately asked him, "Where are you going?"  And retaliated against him
 He hoped that he would have an opportunity to give,

 But the boy said, "I'm going in the direction my legs are going."  This method is not about air.  There is no question of emptiness, no question of a doer.  So, what to do now?  The answers he had already prepared seemed foolish.  Now it would be irrelevant to talk about wind.  Again as if he had fallen down, now he was truly ashamed.  He thought he was stupid and said, 'This guy definitely knows something different.  Now Ivan says, 'I'm going to get on my feet!'  Thought.

 The boy went back to his guru.  The Guru said to him, "I told you not to talk to those people. They are very dangerous; this is a century-old experience for us. But now this should not be left to chance. Something has to be done.  He will say, 'As my legs go,' and you will say to him, 'If you have no legs, then ...?'  He has to shut up about it somehow, "said Tariq al-Hashimi, the party's secretary general.

 So, the next day the guy asked him, "Where are you going?"  And waited for his answer.

 To which the boy replied, "I am going to the market to buy vegetables."

 Man, normally acts only from his past.  But life is changing.  There is no obligation to adapt your life to your decisions.  That’s why, life is full of chaos.  There is a lot of intellectual confusion.  He already has the answers ready.  The Bhagavad Gita, the Holy Quran, the Bible, the Vedas are all there.  He memorizes everything and knows all the answers.  But life never raises the same question again.  So the learned are always the ones who are deficient.
 Jagadeesh Krishnan is a psychologist and international writer

No comments:

Post a Comment