அய்யன் திருவள்ளுவர் இந்துவா?
இல்லை. அவர் பொதுவானவர். அவர் எந்த கடவுளைப் பற்றியும் குறிப்பிடவில்லை. இப்படித்தானே திராவிட கூட்டத்தினர் கூறிய பொய்யை கேட்டு நம்பிவந்தோம்.
ஆனால் உண்மை என்ன என்பதை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்களேன்.
அய்யன் வள்ளுவரும், இந்துக்கடவுள்களும்.
ஒரு சிறு அலசல்.. !
திருக்குறள்:
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.
பொருள் :தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ?
திருக்குறள் :
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேருந்
திறனறிந் தாங்கே திரு.
பொருள் : பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருப்பதே அறம் என்னும் அறிவுடையோரின் பெருமையை அறிந்து, திருமகள் தானே அவரிடம் போய் இருப்பாள்.
திருக்குறள் :
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி
பொருள் :
அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்.
திருக்குறள் :
கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.
பொருள் :
தவத்தால் வரும் வலிமையைப் பெற்றவரால் எமனையும் வெல்ல முடியும்.
இது போன்று நிறைய குறள்களை இயற்றியுள்ளார் நம் தெய்வப் புலவர்.
நிறைய தவளைகள் மற்றும் பன்றிகள், அய்யன் திருவள்ளுவர் இந்து மதத்தவர் இல்லை என்றும், அவர் இந்துக்கடவுள்களைப் பற்றி குறளில் குறிப்பிடவே இல்லையென்றும் கத்திக்கொண்டிருக்கின்றன.
ஆனால் அதன் உண்மைத்தன்மை என்னவென்று ஆராய்ந்த போது, வள்ளுவன் இந்துக்களின் தர்ம அடிப்படையிலேயே திருக்குறளை இயற்றியது தெளிவாகிறது.
சாதாரணமான என்னைப்போன்ற ஒருவனால், வள்ளுவன் இந்துக்கடவுள்களைப் பற்றி எழுதியிருப்பதை அடையாளம் காணமுடிகிறது எனில் பெரிய பெரிய அறிஞர்களுக்கு இது தெரியாமலா இருந்திருக்கும். நிச்சயம் தெரிந்திருக்கும்.
என்ன ஏமாற்று வேலை இந்த திராவிடக் கட்சிகளிடம்?
ஆக மொத்தம் தமிழர்களை இந்துக்கள் அல்ல என்று குழப்பி அதில் லாபம் காணலாம் (மதமாற்றம் ) என்பதே இவர்கள் நோக்கம்.
இவர்கள் தமிழினத்தின் விரோதிகளே. இவர்கள் கிருத்துவ மிஷனரிகளின் கைக்கூலிகளே.
இந்து கலாச்சாரத்தையும், தமிழனையும் பிரித்து விட்டால் இந்தியா என்றொரு நாட்டை எளிதில் பிரித்து விடலாம். பிறகு எளிதில் மதமாற்றம் நடத்தலாம். இதை நன்றாக அறிந்து கொண்டு தான் தாக்குகின்றனர். எனவே மக்கள் சிந்தித்து நடந்து கொள்வது நலம். நமது கலாச்சாரத்தை நம் சந்ததியினருக்கு ஏனோ தானோவென்று கற்றுக்கொடுக்காமல் சற்று சிரத்தையுடன் விளக்குங்கள்.
மேலும் மதமாற்ற வியாபாரிகளிடம் சிறிது விலகி இருங்கள்.
குறிப்பாக அய்யன் வள்ளுவர் இந்து இல்லை என்று எவராவது உரைத்தால் இந்தக் குறள்களைக் காண்பியுங்கள்.
இந்து மதத்திலல்லாது வேறெந்த மதத்தில் திருமால், திருமகள், இந்திரன், எமன் இவர்களெல்லாம் இருக்கிறார்கள் என்று கேளுங்கள்.
விழிப்புடன் இருப்போம். இந்து தர்மம் காப்போம். !
ஜெய் ஹிந்த்... !
By
k. Jagadeesh
No comments:
Post a Comment