[04/06, 1:57 PM] Jagadeesh KrishnanChandra: சுய பேச்சு அல்லது சுயபிரகடனம்
Self Affirmation..... பற்றி
நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டியது, சுயப்பிரகடனங்கள் நிகழ்காலத்தில் இருக்க வேண்டும்.
“நான் ஆரோக்கியமான,சத்துள்ள உணவு உண்பேன்” என்று சொல்வதற்கும் ” நான் தினம்தோறும் ஆரோக்கியமான,சத்துள்ள உணவு உண்கிறேன்” என்று சொல்வதற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ள முடிகிறதா?
இதில் இரண்டாவது சுயப்பிரகடனம், இன்றைய உங்கள் அனுபவத்தின் ஒரு பகுதியாக மாறிவிடுகிறது.
முதல் சுயப்பிரகடனம், நிச்சயமற்ற ஒரு எதிர்காலத்தில் அதை வைத்து பார்க்கிறது.
உங்கள் ஆரோக்கியம் குறித்து நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்றால், “நான் பலவீனமான, எந்த தகுதியற்ற, அழகில்லாதவன்“ என்ற நம்பிக்கையை உறுதியாக பற்றிக்கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். இந்த சொற்களை மாற்றி,
“நான் அழகாக, ஆரோக்கியமாக, நல்ல உடல் பலத்துடன் அடுத்தவரை கவரும் விதமாக இருக்கிறேன்“ என்று நேர்மறை சொற்களை அமைத்து பயன்படுத்திப்பாருங்கள் !
தொடக்கத்தில் உங்களுக்கு நீங்களே பொய் சொல்வது போலத்தோன்றும். ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்று சொல்வதை வழக்கமாகிக்கொண்டால், நாளடைவில் இது உங்கள் ஆழ்மனதில் சென்று ஒரு உணர்வாக பதிந்துவிடும். பிரபஞ்சம் எப்போதும் நம் ஆழ்மன உணர்வுகளுக்குத்தானே பதில் சொல்கிறது !
SELF AFFIRMATIONS
முக்கியமான 2 சூழ்நிலைகளில் சுயப்பிரகடனங்கள் பயன்படுத்த வேண்டும்.
முரண்பட்ட, எதிர்மறையான நம்பிக்கை தோன்றும்போது.
துணிக்கடையில் உள்ள ஒரு கண்ணாடியில் உங்களைப்பார்க்கும்பொழுது, “என்ன இது? நான் இவ்வளவு குண்டாக, அசிங்கமாக இருக்கிறேன். இந்த கடையில் உள்ளவர்கள் எல்லோருமே என்னையே ஏளனத்துடன் பார்க்கிறார்கள். எனக்கு ஏற்ற உடை இந்த கடையில் கிடைக்காது. இந்த உடைகளை அணிய எனக்கு தகுதி இல்லை” போன்ற எண்ணங்கள் ஏற்படலாம். அந்த நொடியில், ஒரு ஓரமாக சென்று, அமைதியாக நில்லுங்கள். கண்களை மூடிக்கொண்டு உங்களை ஒரு அழகான, ஆரோக்கியமான, வலிமையான, மனிதராக காட்சிப்படுத்திக்கொள்ளுங்கள். மேலே கூறிய சுயப்பிரகடனத்தை (“நான் அழகாக, ஆரோக்கியமாக, நல்ல உடல் பலத்துடன் அடுத்தவரை கவரும் விதமாக இருக்கிறேன்“) முழு நம்பிக்கையுடன், மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்ளுங்கள்.
எப்பொழுதெல்லாம் முடியுமோ
எதிர்மறை சூழ்நிலைகளுக்காக காத்திருக்க வேண்டாம் ! உங்களுக்கு எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்பொழுது இந்த சுயப்பிரகடனங்களை பயன்படுத்துங்கள் சுயப்பிரகடனங்களை பட்டியலிட்டு, உங்கள் வாகனத்தின் உள்முகப்பில், உங்கள் குளியலறை சுவற்றில், உங்கள் பர்சில், உங்கள் அலுவலக மேசையில், என்று தினம் நீங்கள் அடிக்கடி பார்க்கும் இடங்களில் ஒட்டிவையுங்கள். நீங்கள் எத்தனை முறை உங்களுடன் சுயமாக இந்து போன்று பேசிக்கொள்கிறீர்களோ, அத்தனை சுலபமாக, சீக்கிரமாக உங்கள் பலவீனமான எண்ணங்களை மாற்றி சக்திமிக்க எண்ணங்களால் உங்களை நிரப்பிக்கொள்கிறீர்கள்.
ஆனால், அடிப்படையாக ஒரு உண்மையை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். சுயப்பிரகடனங்கள் உணர்வின் அடிப்படையில் செயல்படுகின்றன. நீங்கள் சொல்லிக்கொள்ளும் சுயப்பிரகடனங்கள் உங்கள் உணர்வுடன் கலந்திருக்க வேண்டும். வெறும் வார்த்தைகளாக, மேலோட்டமாக சொல்லும்பொழுது எதுவும் மாறாது. ஏன் தெரியுமா? எத்தனை சக்திமிக்க சுயபிரகடனம் செய்தாலும், அடிமனதில், “இது நடக்குமா?” என்று பழைய நம்பிக்கையிலேயே வாழ்ந்தால், எப்படி மாற்றம் வரும்?
இரண்டு எதிர் மறையான நம்பிக்கைகள் ஒன்றாக செயல்பட முடியாது. எதாவது ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும். அந்த ஒன்றுதான் நம் அனுபவமாக புறத்தில் உருவாகுகிறது.
ஆகவே, உங்கள் சுயப்பேச்சுக்களை, சுயப்பிரகடனங்களை, உணர்வுடன், நம்பிக்கையுடன், உறுதியுடன், ஈடுபாட்டுடன் சொல்லுங்கள். அப்பொழுது உங்கள் பழைய நம்பிக்கைகள் சக்தி இழந்து, மறைந்துவிடும்.
இதுவே மாற்றத்திற்கான ஒரே, உண்மையான வழி !....
இதோ எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கான சுய பேச்சு... பார்த்து பயன்பெறுங்கள் நண்பர்களே....
வழங்கியவர்
ஜெகதீஷ் கிருஷ்ணன்
உளவியலாளர் மற்றும் சர்வதேச ஆசிரியர்
[04/06, 1:58 PM] Jagadeesh KrishnanChandra: Self-talk or self-declaration
About Self Affirmation .....
We must first understand that self-declarations must be in the present tense.
Can you understand the difference between saying "I eat healthy, nutritious food" and saying "I eat healthy, nutritious food every day"?
The second self-declaration becomes part of your experience today.
The first self-declaration looks to put it into a future of uncertainty.
If you are not happy about your health, it means that you are firmly attached to the belief that "I am weak, unworthy, unattractive". Change these words,
Use the positive words "I am beautiful, healthy, with good physical strength to attract the next"!
In the beginning it seems like you are lying to yourself. But, if you make a habit of saying this over and over again, over time it will go deep into your heart and become a feeling. The universe always responds to our deepest feelings!
SELF AFFIRMATIONS
Self-declarations should be used in 2 important situations.
When conflicting, negative beliefs appear.
When looking at you in a mirror in a clothing store, “What is this? I'm so plump and ugly. Everyone in this shop looks at me with scorn. I do not have a suitable dress in this store. I don't deserve to wear these clothes. ” At that moment, go to the side and stand still. Close your eyes and visualize yourself as a beautiful, healthy, strong, human being. Repeat the above self-declaration ("I am beautiful, healthy, with good physical strength to attract the next") with full confidence.
Whenever possible
Do not wait for negative situations! Use these self-declarations whenever you have the time. The more times you talk to yourself like a Hindu, the easier and faster it is to change your weak thoughts and fill yourself with powerful thoughts.
But, basically one fact to keep in mind. Self-declarations operate on the basis of emotion. The self-declarations you make should be mixed with your consciousness. In mere words, superficially nothing changes. Do you know why? No matter how powerful the self-declaration, the subconscious will ask, "Will this happen?" If you live by that old belief, how will change come about?
Two opposing beliefs cannot function together. Only one thing can be true. That one thing develops in the yard as our experience.
So, speak your mind, your self-declarations, with feeling, with confidence, with determination, with commitment. Then your old beliefs will lose power and disappear.
This is the only true way to change! ....
Here is a self talk to always be happy ... see and benefit friends ....
by
Jagadeesh Krishnan
Psychologist and International Author