Thursday 3 June 2021

My book

[03/06, 9:22 AM] Jagadeesh KrishnanChandra: தந்த்ரா உலகினின் அனைத்து உளவியல் நோய்களுக்கும் இறுதியான மாற்று மருந்து : பண்டைய தந்திர நுட்பங்கள் மூலம் தொகுதி 1: 1 -13. (Tamil Edition) Kindle Edition
Tamil Edition  by Dr. JAGADEESH KRISHNAN (Author)  Format: Kindle Edition
இந்த புத்தகமானது மனித உடலில் உள்ள மர்ம முடுச்சுகளான சக்கரங்கள் என்று சொல்ல கூடிய ஒன்றை எப்படி விழிப்படைய செய்வது என்பதனை கூறுகின்றது. மனித உடலில் யோகிகளின் கூற்றின்படி பலவகையான சக்கரங்கள் இருக்கின்றன. அதனை விழிப்படைய செய்வதன் மூலமாக மனிதனுடைய உள்ளுணர்வானது எப்படி எல்லாம் செயல்படும் என்பனத்தையும் அறிந்துள்ளார்கள். 
மேலும் மனிதர்கள் அனைவருமே சாதாரணமாக இந்த சக்கரங்களில் ஏதாவது ஒன்று அவர்கள் பிறக்கின்ற பொழுதே விழிப்படைந்தே இருக்கும், அந்த சக்கரங்களின் விழிபினிற்கு ஏற்றவாறுதான், அந்த மைந்தன் ஆனவன் செயல்பாடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன. அவன் உலகினில் எப்படி வாழவேண்டும் என்பதனை இந்த சக்கரங்கள் தான் நிர்மாணிக்கின்றன. காரணம் இவர்களின் விழிப்புணர்ச்சி தான் அவனுடைய குணங்களாக பரிணமிக்கின்றன. அந்த குணங்களுக்கு ஏற்றாற்போன்றுதான், அவனுடைய வாழ்க்கையானது இருக்கின்றது. இதனை தெளிவாக தெரிந்து கொண்ட சித்தர்களும், ஞானிகளும், மற்றும், தந்த்ரிகர்களும்,இவைகளை சரியான வழியில் விழிப்படைய செய்து, அதைக்கொண்டு தான், உலகினில் அளப்பரிய செயல்களை செய்தார்கள். 
அதாவது பெரும்பாலும், இந்த சக்கரங்களின் தன்மைகளை பற்றியும் அதனால் ஏற்பட கூடிய விளைவுகளை பற்றியும் தெரிந்துகொண்ட அவர்கள், இந்த சக்கரங்கள் அனைத்தையும் விழிப்படைய செய்வதன் மூலமாகவே, பலவிதமான அற்புதங்களை செய்தார்கள். 
பெரும்பாலும் அவர்கள் இதற்கான வழிமுறைகளை பெரும்பாலும், தகுதியற்றவர்கள் தெரிந்துகொள்ள கூடாது என்பதில் மிக மிக கவனமாக இருந்தார்கள். காரணம், இதனை தவறான எண்ணங்கள் கொண்டவர்கள், தெரிந்துகொண்டால், அவர்களால் இந்த உலாத்தில் உள்ள மற்றைய மனிதர்களுக்கும், உயிரினங்களுக்கும், ஏதாவது, தீங்கு வந்துவிடுமோ என்கின்ற ஒரு எண்ணத்தினால் தான், அவர்கள் இதனை பற்றிய விசயங்களை தகுதியானவர்களை தவிர வேறு யாருக்குமே தெரியாத படி ரகசியமாக மறைத்தே வைத்து இருந்தார்கள். 
அப்படி தெரிந்து இருந்தாலும் அதனால் மற்றவர்களுக்கு, அதனால் எந்தவிதமான தீமையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக சில குறிப்பிட்ட சக்கரங்களை மட்டுமே சுட்டி காட்டி இருந்தார்கள். ஆனால் அவர்கள் சுட்டிக்காட்டிய சக்கரங்கள் மிக மிக குறைவான ஒன்று தான். அதாவது, அவர்கள் கட்டிய சக்கரங்கள் 7 மட்டுமே. ஆனால் தந்த்ரா பயிற்சியாளர்கள் இவர்களை விட அதிகமான சக்கரங்களின் பயன்பாடுகளை உணர்ந்து இருந்தார்கள். அவர்கள் நிறைய சக்கரங்களை பற்றி தெளிவாக குறிப்பிட்டுள்ளார், ஆனால் அதில் நான் இங்கே விவரிப்பது ஒரு சில குறிப்பிட்ட சக்கரங்களை மட்டுமே, நான் இங்கே குறிப்பிட கூடிய சக்கரங்கள் 22. அதுவும், உடலின் உள்ளே உள்ள சக்கரங்கள் 11 மட்டும் அல்லாமல் நம்முடைய உடலுக்கு வெளியே உள்ள சக்கரங்கள் 11 ஐயும் குறிப்பிட்டுள்ளேன், இந்த புத்தகத்தில் உள்டளுக்குள்ளே உள்ள சக்கரங்களை மட்டுமே நான் விவரித்துள்ளேன், அதனை எப்படி பயிற்சிகளின் மூலமாக ஒவ்வொன்றாக விழிப்படைய செய்வது என்பதனையும், அதற்குண்டான பயிற்சிமுறைகளையும் இங்கே உங்களுக்கு எளிதாக புரிந்துகொள்ளும் படியாக விவரித்து உள்ளேன். 
இந்த பயிற்சிகள் மிக மிக எளிமையானவை, மற்றும் யார் வேண்டும் என்றாலும் இந்த பயிற்சிகளின் மூலமாக அதனை விழிப்படைய செய்யமுடியும், ஆனால் நீங்கள் இந்த ஒவ்வொரு பயிற்சிகளையும் தனித்தனியாக தான் செய்ய வேண்டும், எப்பொழுது உங்களுடைய ஒரு சக்கரம் ஆனது முழுமையாக விழிப்படைகிண்டதோ, அதற்கு பின்பு தான், அடுத்த சக்ரத்திற்கான பயிற்சியை தொடங்க வேண்டும், இவைகள் அனைத்தையுமே படிப்படியாக ஒன்று விழிப்படைந்துவிட்டது, என்பதனை நீங்கள் உணர்ந்த பிறகு தான், அடுத்த பயிற்சியை செய்ய துவங்க வேண்டும், நீங்கள் மாற்றி மாற்றி செய்தாலும், உங்களால் இந்த சக்கரங்களை விழிப்படைய செய்ய முடியாது. அதனால் நான் எங்கே விவரித்துள்ள வரிசையின்படி சரியாக படித்து தெரிந்துகொண்டு தான், பயிற்சிகளை செய்ய துவங்கவேண்டும். நீங்கள் சரியாக செய்தாலே, அதுவே உங்களுக்கு தெளிவாக உணர்த்திவிடும், உங்களுடைய சக்கரம் ஆனது விழிப்படைந்துவிட்டதா, இல்லையா என்று. அதனால் நீங்கள் கவலை பட வேண்டாம், நீங்கள் இந்த பயிற்சிகள் தொடர்ந்து செய்துகொண்டே வந்தால் உங்களுக்குள்ளே பலவைதாமான மாற்றங்கள் சிறிது சிறிதாக ஏற்பட ஆரம்பிக்கும், நீங்கள் உலகினில் இருந்து கொண்டே இந்த பயிற்சிகள் அனைத்தையும் செய்ய முடியும், நீங்கள் இதற்காக துறவறமோ எதுவோ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கின்ற எந்த ஒரு நிபந்தனையும் இல்லை. எப்பொழுது உங்களுக்கே தோன்றுகிறதோ அப்பொழுது வேண்டும் என்றால், நீங்கள் மேலும் இந்த பயிற்சிகளில் ஆழமாக சென்று உங்களுடைய ஞானத்தை அடைவதற்கான முயற்சியில் ஈடுபடலாம். அப்படி இல்லை என்றால், நீங்கள் இந்த பயிற்சிகளை சிறிதளவு செய்து உங்களுடைய சக்கரங்கள் மட்டும் விழிப்படைய செய்தாலே போதுமானதாகும்.
[03/06, 9:38 AM] Ji: Tantra is the ultimate alternative medicine for all the psychological ailments of the world: Ancient Tantric Techniques Volume 1: 1-13.  (Tamil Edition) Kindle Edition
 Tamil Edition by Dr.  JAGADEESH KRISHNAN (Author) Format: Kindle Edition
 This book tells you how to awaken to what can be called the wheels, the mysterious knots in the human body.  According to yogis there are various chakras in the human body.  By making it aware they also know how human intuition works for everything.
 And all human beings normally wake up to one of these chakras when they are born, and according to the awakening of those chakras, the activities of that man are constructed.  It is these wheels that shape how he lives in the world.  Because it is their awareness that evolves into his qualities.  His life is in line with those qualities.  The Siddhars, the sages, and the Tantrics, who knew this clearly, made them aware of this in the right way, and with it, did great deeds in the world.
 That is to say, most of the time, knowing the nature of these chakras and their possible consequences, they performed various miracles by making all these chakras vigilant.
 Often they were very, very careful not to let the unqualified know the instructions for this.  The reason is that those who have misconceptions, if they find out, they have kept the matter a secret from anyone other than those who deserve it, out of a sense that it could cause harm to other humans and creatures on the prowl.
 Even so, they were only pointing to certain wheels so as not to cause any harm to others.  But the wheels they point to are very, very low.  That is, only 7 of the wheels they built.  But Tantra practitioners were more aware of the uses of the wheels than these.  They have clearly mentioned a lot of chakras, but in it I will describe only a few specific chakras, the chakras I can mention here are 22. That too, I have mentioned not only the 11 chakras inside the body but also the 11 chakras outside our body, in this book I am only referring to the inner chakras.  Here I have explained how to make it vigilant one by one through the tutorials and the tutorials for it so that you can easily understand.
 These tutorials are very, very simple, and anyone can do it through these tutorials, but you should do each of these exercises individually, and only when your chakra is fully awake should you begin training for the next chakra, all of which have gradually awakened one by one.  Only after you realize that, do you have to start doing the next exercise, even if you change, you can not make these wheels alert.  So I have to start doing the exercises just by reading and knowing exactly where in the order I have described.  If you do it right, it will make it clear to you whether your wheel is awake or not.  So do not worry, if you continue to do these exercises you will start to experience a lot of changes within yourself little by little, you can do all these exercises from within the world, there is no condition that you have to accept atheism or anything for this.  Whenever you feel like it, you can go deeper into these exercises and engage in the pursuit of your wisdom.  If not, it is enough that you do these exercises lightly and only keep your wheels alert.

No comments:

Post a Comment