Sunday 30 May 2021

subconscious Mind

[30/05, 9:53 PM] Jagadeesh KrishnanChandra: கேட்டதை கொடுக்கும் ஆழ்மனதின் அற்புத சக்தி.....
 
கேட்டதை கொடுக்கும் மனதின் சக்தி 
நமது பாரம்பரியத்தில் மனதுக்கு மிகவும் முக்கியமான இடத்தை கொடுத்திருக்கிறார்கள். அனைத்து சுபகாரியங்களையும் மனதையே பிரதானமாக கொண்டே நடத்தினார்கள். ஒரு ஆணையும், பெண்ணையும் தாம்பத்திய பந்தத்தில் இணைக்கும் நிகழ்வுக்குக் கூட, திரு “மனம்” (திருமணம்) என்றுதான் பெயர் வைத்தார்கள். இன்றும் நாம் துன்பத்தில், துயரத்தில், கவலையில் இருப்பவர்களை சந்திக்கும் போது கூறும் வார்த்தை “மனதை தைரியமாக வைத்துக் கொள்ளுங்கள்”. “மனதை தளரவிடாதீர்கள்” என்பதாகத்தான் இருக்கிறது.

நோயாளிகளை சந்திக்கும் போது கூட உடலை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஆறுதல்கள் கூறும் போது, மனதை தைரியமாக வைத்துக் கொள்ளுங்கள் என்றும் சேர்த்துதான் ஆறுதல் கூறுகிறோம். அந்த அளவுக்கு மனதின் திறனும் முக்கியத்துவமும் நம்மவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

மனம் மட்டும் நம்பிக்கை கொண்டால் அனைத்தும் நலமாகும் 
ஒருவருக்கு என்ன நோய் இருந்தாலும், அது எவ்வளவு கொடுமையானதாக இருந்தாலும், அவரின் மனம் மட்டும் என் நோய்கள் நிச்சயமாக குணமாகும் என்ற தைரியத்துடன் இருந்தால். நிச்சயமாக அனைத்து நோய்களும் குணமாகும். ஒருவர் எந்த வகையான துன்பத்தில், துயரத்தில், சிக்கி இருந்தாலும் இந்த நிலை நிச்சயமாக மாறும், என் வாழ்க்கை சீர் பெறும் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும். அவரின் வாழ்க்கை நிச்சயமாக மாறும்.

ஆனால் மனதை நம்ப வைப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை
நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன், நான் தைரியமாக இருக்கிறேன், எனக்கு நம்பிக்கை உள்ளது என்று கூறும் பலரும் உண்மையில் மனதளவில் பலவீனமாகவே இருக்கிறார்கள். அவர்கள் கூறும் நம்பிக்கை, தைரியம் அனைத்தும் புத்தியின் அளவில் மட்டுமே பதிந்திருக்கிறது. அவர்களின் மனமோ அதனை நம்ப மறுக்கிறது. மனதுடன் மனிதர்களுக்கு தொடர்பு இல்லாததால் மனதின் பதிவுகளைப் பற்றி மனிதர்களுக்கு புரிவதில்லை.

இவர்களின் சிந்தனையிலும், புத்தியிலும், இருக்கும் விஷயங்களை வைத்து, மனதிலும் அப்படித்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு விஷயத்தை ஒரு தடவை கூறும்போது அல்லது ஒரு தடவை படிக்கும் போது அதனை மனம் நம்பாது. ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் பலமுறை சிந்திக்கும் போதும், வாசிக்கும் போதும் மட்டுமே மனம் அதனை நம்பத் தொடங்கும்.

மனதை நம்ப வைக்கும் வழிமுறைகள்
மனம் ஒரு விஷயத்தை நம்ப வேண்டுமென்றால், அந்த விஷயத்தை மீண்டும் மீண்டும் சிந்திக்க வேண்டும். அந்த விஷயத்தை கற்பனையில் நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த விஷயம் உங்களுக்கு கிடைத்துவிட்டது போலவும், அதை நீங்கள் அடைந்து விட்டது போலவும் ஒரு உணர்வு உங்களுக்குள் தோன்ற வேண்டும்.

ஒரு உதாரணம் சொல்கிறேன், நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்களை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களின் நடை, உடை, பாவனை, ஸ்டைல், அனைத்துமே நடிகர் ரஜினிகாந்தைப் போலவே அமைந்திருக்கும். காரணம் அவர்கள் ரஜினிகாந்தின் படங்களைத் திரும்பத் திரும்ப பார்த்தார்கள், அவரைப் பற்றியே சிந்தித்தார்கள், அந்த படத்தில் வரும் கதாபாத்திரங்களாகவே மாறுகிறார்கள். மனம் இவ்வாறுதான் செயல்படுகிறது.

எவரொருவர் ஒரு விசயத்தை மீண்டும் மீண்டும் நினைக்கிறாரோ, மீண்டும் மீண்டும் சிந்திக்கிறாரோ, மீண்டும் மீண்டும் படிக்கிறாரோ, அவர் அந்த விசயமாகவே மாறுகிறார். அந்த விசயத்துக்கும் அவருக்கும் சூட்சம நிலையில் ஒரு உறவும் பந்தமும் உருவாகிறது. அந்த விசயம் இருக்கும் இடத்தை நோக்கி இவர் பயணிக்கிறார் அல்லது ஏதாவது ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையை பயன்படுத்தி அந்த விசயம் இவரை வந்தடையும்.....

வழங்கியவர்
  ஜெகதீஷ் கிருஷ்ணன்
  உளவியலாளர் மற்றும் சர்வதேச ஆசிரியர்
[30/05, 9:56 PM] Jagadeesh KrishnanChandra: The amazing power of the subconscious mind that gives what is asked .....
 
 The power of the mind to give what is asked
 They have given the mind a very important place in our tradition.  They did all the good things with the mind in the main.  Even the event that unites a man and a woman into a marital relationship is called Mr. "Mind" (Marriage).  Even today, when we meet those who are suffering, distressed, and anxious, the word we say is "keep your mind strong."  It's just "Don't be discouraged."

 When comforts tell us to take care of the body safely even when we meet patients, we say comfort along with keeping the mind brave.  To that extent we know the potential and importance of the mind.

 All is well if the mind alone believes
 No matter what disease a person has, no matter how cruel it is, only if his mind has the courage to say that my diseases will definitely be cured.  Of course all diseases are cured.  No matter what kind of suffering, misery, tragedy this person is in, this situation will definitely change, if only I have the hope that my life will get better.  His life will definitely change.

 But convincing the mind is not an easy task
 I am optimistic, I am courageous, and many who say I have faith are actually mentally weak.  All the hope and courage they claim is imprinted only on the level of the intellect.  Their minds refuse to believe it.  Humans do not understand the records of the mind because they have no contact with the mind.

 They keep things in their thinking and intellect and think that they will be like that in their minds.  The mind does not believe a thing when it is said or read once.  The mind will only begin to believe it when it thinks and reads the same thing over and over again.

 Ways to convince the mind
 If the mind is to believe a thing, it must think of that thing again and again.  You have to imagine that thing.  A feeling should appear within you as if you have got that thing and you have achieved it.

 Let me give you an example, take the example of the ardent fans of actor Rajinikanth.  Their style, dress, mannerisms, style, everything is similar to that of actor Rajinikanth.  Because they saw Rajinikanth's films over and over again, thought of him and became the characters in the film.  This is how the mind works.

 If someone thinks, re-thinks, or reads a subject over and over again, he becomes that subject.  A relationship and bond develops between him and the subject in a subtle way.  He travels to the place where the thing is or the thing will come to him using some circumstance .....

  by
   Jagadeesh Krishnan
   Psychologist and International Author

No comments:

Post a Comment