Monday 17 May 2021

sub conscious mind

[18/05, 10:17 AM] 98 41 121780: வெற்றி பெற முழுக்காரணம் ஆழ்மனம் தான் (Sub Conscious Mind).

ஆழ் மனதைப் பற்றி ஓர் ஆய்வு. நமது ஆழ் மனம் நாம் விரும்பும் எதையும் நமக்கு கொடுக்கவல்லது! மனத்தில் இரண்டு நிலைகள் உண்டு.

1.மேல் மனம் (conscious Mind) அல்லது வெளிமனம்

2. ஆழ் மனம் ( Sub Conscious Mind).

மனமென்பது ஆர்டிக் கடலில் மிதக்கும்பனிப் பாறைகளைப் போன்றது. கடலுக்கு மேல் கண்ணுக்குத் தெரிகின்ற 20% பனிப்பாறையைப் போன்றது மேல் மனம். கடலில் மூழ்கியிருக்கின்ற கண்ணுக்குத்த தெரியாத 80% பனிப்பாறையைப் போன்றது ஆழ்மனம்.

மேல்மனத்தை விடப் பல மடங்கு பெரியதும், ஆற்றல் மிக்கதும் ஆழ் மனம் ஆகும்.

மேல்மனம் என்பது விழிப்பு, உணர்வு நிலை எனப்படும். நினைவு நிலைக்கு இதுவே காரணமாகிறது. ஆனால் ஆழ் மனம் துயில் நிலைக்கும், துயிலுக்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட மெய்மறதி நிலைக்கும் காரணமானது!

நாம் படிப்பதும், பேசுதலும், செயல்படுவதும் மேல் மனத்தின் மூலமாகத்தான், ஆனால் என்ன படிக்கிறோம், ஏன் – எப்படிச் செயல்படுகிறோம் என்பதற்கெல்லாம், ஏன் – எப்படிச் செயல்படுகிறோம் என்பதற்கெல்லாம் காரணம் அடி மனம் தான் (ஆழ் மனம்)

எனவே நமது குறிக்கோள்களை நமது அடிமனம் ஏற்றுக்கொள்ளுமாறு எண்ணங்களைச் செலுத்த வேண்டும். நாம் செய்ய வேண்டியது இதுதான்.

1. நமது ஆழ் மனத்தோடு தொடர்பு கொள்ள வேண்டும்.

2. உங்கள் வாழ்க்கையின் குறிக்கோள்கள் என்ன என்பதை ஆழ் மனதிற்கு தெரிவிக்க வேண்டும்.

உங்கள் குறிக்கோள்களைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட ஆழ் மனம், அந்த குறிக்கோள்களை விரைவில் அடைய வழிமுறைகளைக் கண்டுபிடித்து, உடனே உங்களைச் செயல்படுத்த தூண்டும்.

நமது குறிக்கோள்களை ஆழ் மனத்திற்கு எப்படி கொண்டு செல்வது:

1. நமது எண்ணங்கள் எல்லாம் நமது குறிக்கோள்களைப் பற்றியதாகவே இருக்க வேண்டும்.

2. ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட வேளையில் (காலையில் 15 நிமிடங்கள்) குறிக்கோளை அடைவதற்கான மனப்பயிற்சியை செய்துவர வேண்டும்.

3. நமக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், கண்ட குப்பை எண்ணங்களை எண்ணாமல், நமது குறிக்கோளைப் பற்றிய எண்ணங்களாகவே நினைக்க வேண்டும்.

உதாரணமாக வீடு வேண்டும் என்றால் அந்த வீட்டில் (கற்பனை வீட்டில்) எத்தனை அறைகள் இருக்க வேண்டும். அதனுடைய அளவுகள் எப்படி இருக்க வேண்டும், எந்த அளவில் கதவுகள், வர்ணங்கள் என்ன என்பதை பற்றிய கற்பனைகளையே உங்களது எண்ணம் முழுவதும் நிரம்பியிருக்க வேண்டும்.

நமது முன்னால் குடியரசுத் தலைவர் திரு ஆ.பெ.ஜெ. அப்துல்கலாம் கூட இதன் அடிப்படையில் தான் ‘கனவு காணுங்கள்’ என்று சொன்னார்.

4. உங்கள் மனதில் குறிக்கோள் விதையை வலுவாக ஊன்றுங்கள்… அதை உங்களது தீவிர எண்ணங்களால் உரமேற்றுங்கள்.. நிச்சயம் உங்களது குறிக்கோளை அடைந்துவிடுவீர்கள். விதைத்ததையே அறுவடை செய்து விடுவீர்கள் என்பது நிச்சயம்.

5. உங்களது கற்பனையில் உங்களது குறிக்கோளை ஒரு படமாக மாற்றி அதை உங்கள் மனத்திரையில் ஓட்டிப் பார்க்க வேண்டும். என்ன நினைக்கிறீர்களோ அதை அப்படியே செய்து முடிப்பதாக நினக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு புதிய வீடு கட்ட வேண்டும் எனில், கற்பனையில் வீடுகட்டி அதற்கு கிரகப்பிரவேசமும் செய்து முடித்ததாக எண்ண வேண்டும்.. உங்கள் கற்பனை எண்ணங்கள் மேலோங்கி , எண்ணங்கள் வலுப்பெற்று அது உண்மையாகவே நடக்க ஆரம்பித்துவிடும்.

6. குறிக்கோள்களை அடைவதற்கு, தற்காலத்தில் அனுபவிக்கக் கூடிய சிறுசிறு சுகங்களை தியாகம் செய்யவும் தயங்கக் கூடாது.

7. உங்கள் ஆழ் மனத்தை, பிடிவாதத்துடன் நம்ப வைத்துவிடுங்கள். ஆழ் மனம் வெகு சீக்கிரம் உங்கள் குறிக்கோளில் கொண்டு சேர்த்துவிடும்…

8. உங்களது குறிக்கோளை தெளிவாக ஒரு அட்டையில் எழுதி / உங்கள் கண்களில் அடிக்கடி படும்படியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதைப் பார்க்கும் போதெல்லாம், எண்ணங்கள் உங்கள் குறிக்கோளின் மீது குவியட்டும்.

எனவே நாம் நமது குறிக்கோளைத் தெளிவாக ஒரு காலவரையில் முடித்தே தீருவேன் என்று முதலில் தீர்மானித்துக் கொள்ளுங்கள். பின்பு ஆழ் மனத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம்...
வழங்கியவர்
 ஜெகதீஷ் கிருஷ்ணன்
 உளவியலாளர் மற்றும் சர்வதேச ஆசிரியர்
[18/05, 10:17 AM] 98 41 121780: The whole reason for success is depth (Sub Conscious Mind).

 A study of the subconscious mind.  Our subconscious mind can give us anything we want!  There are two levels of mind.

 1. The upper mind (conscious Mind) or external mind

 2. Sub Conscious Mind.

 The mind is like icebergs floating in the Arctic Ocean.  The upper mind is like a 20% glacier visible over the ocean.  It is as deep as 80% of the invisible iceberg that sinks in the ocean.

 The subconscious mind is many times larger and more powerful than the upper mind.

 Superiority is the state of consciousness.  This is what causes memory.  But the subconscious mind is the cause of the state of drowsiness, the state of delusion between drowsiness and awakening!

 We read, speak, and act through the upper mind, but what we study, why - how we act, why - how we act is all due to the subconscious mind (subconscious mind)

 So we have to pay attention to our goals so that our slave can accept them.  This is what we need to do.

 1. We need to communicate with our subconscious mind.

 2. Let the subconscious know what your life goals are.

 The subconscious mind, which clearly knows your goals, will find ways to achieve those goals quickly and motivate you to act immediately.

 How to take our goals to the subconscious:

 1. All our thoughts should be about our goals.

 2. Do mental training to achieve the goal at a specific time of day (15 minutes in the morning).

 3. Whenever we have time, we should think of our goals as thoughts, not as junk thoughts.

 For example if you want a house how many rooms should there be in that house (imaginary house).  Your mind should be full of fantasies about what its dimensions should be, to what extent the doors and paints should be.

 Before us is the President of the Republic, Mr. A.P.J.  Even Abdulkalam said it was based on this ‘dream’.

 4. Plant the goal seed firmly in your mind உர Fertilize it with your intense thoughts .. You will surely achieve your goal.  You are sure to reap what you sow.

 5. Turn your goal into an image in your imagination and see it run through your mind.  You just have to be more discriminating with the help you render toward other people.  For example, if you want to build a new house, you have to build a house in your imagination and think that you have completed the planetarium for it.

 6. In order to achieve goals, do not hesitate to sacrifice the small pleasures that can be enjoyed in the present.

 7. Trust your subconscious mind with stubbornness.  The subconscious mind will soon add to your goal

 8. Keep your goal clearly written on a card / in plain sight.  Whenever you see it, let the thoughts focus on your goal.

 So first decide that we will achieve our goal clearly in a timely manner.  Then communicate with the subconscious mind.  success guaranteed...
 Issued by
  Jagadeesh Krishnan
  Psychologist and International Author

No comments:

Post a Comment