[05/02, 10:53 PM] Jagadeesh KrishnanChandra: கேள்வி:
நான், என்னை மற்றவர்களைவிட உயர்ந்தவராக கருதுபவராக,இறுமாப்பு கொள்பவராக இருக்கிறேன். அப்படிப்பட்ட உணர்வு எனக்கு பிடித்துள்ளது, இன்பம் அளிக்கிறது. ஆனால் அது தவறான அனுகுமுறை என எனக்கு புரிகிறது. நான் எவ்வாறு இந்த பகட்டாக உணருவதிலிருந்து, இருமாப்புகொள்வதிலிருந்து விடுபடுவது?
நாம் எல்லோருமே உயர்ந்தவராக இருக்க விரும்புகிறோம் அல்லது உயர்ந்தவர் என்ற ஒரு உணர்வுடன் இருக்க விரும்புகிறோம். இல்லையா?
நாம் சமூகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நபர்களை,
எல்லாவற்றிற்கும் மையமாக இருக்கும் நபர்களை நண்பர்களாகக்கொள்ள ஆசைப்படுகிறோம், புகழடைந்தவர்களை அறிய விரும்புகிறோம்.
நாம் எல்லோருமே, பரம்பரையாக இருக்கும் வழக்கம் மூலமாகவோ அல்லது நம் சுய முயற்சி மூலமாகவோ பிரபலமானவர்களுடன் அடையாளப்படுத்திக்கொள்ள அல்லது அவர்களுடன் சேர்ந்து இருப்பதாக காட்டிக்கொள்ள அல்லது நாமே பிரபலமானவர்களாக ஆக விரும்புகிறோம்.
அலுவலக உதவியாளரில் இருந்து மண்ணின் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர் வரை, நாம் எல்லோருமே ஏதோ ஒருவராக இருக்க ஆசைப்படுகிறோம், ஆகவே இருமாப்புகொள்ளும் தன்மை, உயர்வானவராக இருக்கும் ஆசை, முக்கியத்துவம் பெறவேண்டுமென்ற உணர்வு நம்மிடம் உண்டாகிறது.
நாம் யாரோ ஒருவராக உயர்ந்து இருக்கிறோம் என்ற உணர்வு இன்பம் தரும் ஒன்றாக இருந்தாலும், அதிலிருந்து விடுபடுவது எப்படி என இந்த கேள்வியாளர் கேட்கிறார்.
நிச்சயமாக, அந்த உயர்வானவராக காட்டிக்கொள்ளும் ஆசையிலிருந்து விடுபடுவது மிகவும் எளிது, இல்லையா? யாராகவுமே இருக்காதீர்கள். அப்படி இல்லை அண்பர்களே, சிரித்து இந்த விஷயத்தை அப்படியே தள்ளிவிடாதீர்கள். யாராகவுமே, எதுவாகவுமே இல்லாமல் இருப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஏனெனில், நம் கல்விமுறை, சமூகச்சூழல், நம் மதங்களின் போதனைகள் என எல்லாமே நம்மை யாரோ ஒருவராக, உயர்ந்தவராக இருக்கும்படி வலியுறுத்துகின்றன. நீங்களும், உங்களுக்குள் யாரோ ஒருவராக ஆகவேண்டும் என்ற ஆசையில்லாமல் இருக்கிறீர்களா? நீங்கள் ஒரு சிறந்த எழுத்தாளராக ஆக விரும்பவில்லையா அல்லது ஒரு அசாதாரணமாக எழுதும், பிரபலமாக, புகழ்பெற்றவராக இருக்கும் ஒருவரை அறிய விரும்பவில்லையா?
நீங்கள் முதன்மையான ஓவியராக, தலைசிறந்த இசைமேதையாக, மிகுந்த அழகான மனிதராக அல்லது சிறப்பான அம்சங்கள் கொண்ட ஞானியாக என ஆவதற்கு ஆசைப்படவில்லையா?
அறிந்து கொள்ள, அடைய, பிடித்துக்கொள்ள - இவற்றிற்காகத்தானே நாம் போராடுகிறோம்,இல்லையா?
நாம் நமக்குள் நேர்மையாக இருப்போமெனில், இதை ஏற்போம்.
நம் எல்லாவிதமான போராட்டங்கள், அழிவில்லா மோதல்கள் எல்லாமே இதை நிகழ்த்துவதற்காகவே- யாரோ ஒருவராக, உயர்ந்தவராக இருப்பதற்கே. அது ஒரு பெரும் உத்வேகத்தை, பெரும் சக்தியை தருகிறது, இல்லையா?
பேராவல், லட்சியம் என்பது ஒரு பெரிய தூண்டுகோலாக உள்ளது.
நாம் அந்த எண்ணங்களின் பழக்கத்திற்கு பிடிபட்டு உள்ளோம்.
உங்களால் அவை அனைத்தையும் எளிதாக மறுத்துவிட்டு, யாருமற்றவராக, யாராகவுமே இல்லாமல் இருக்க முடியுமா?
நாம் யாராகவும் இல்லாமல் இருக்கவேண்டும் அதேநேரம் - நம்மை கட்டுப்படுத்துவதன்மூலமாக அல்ல, ஒரு கட்டாயத்தினபேரில் அல்ல.
நாம் அன்புசெலுத்துவது என்றால் என்ன என்பதை உணரும்போது, நாம் யாராகவுமே இல்லை. ஆனால், தன் சுய முக்கியத்துவத்தைப் பற்றியே சிந்திக்கும், அதனபொருட்டே செயல்படும் ஒரு மனிதரால் எப்படி பிறரை நேசிக்க முடியும்?
ஆகவே, நான் ஏதுமற்றவராக இருக்கவேண்டும் என சொல்வது எளிதானது. ஆனால் அதை கொண்டுவருவதற்கு, இயல்பாக ஆக்குவதற்கு ஒரு பெரும் சக்தி, பெரும் உள்ளுயிர்துடிப்பு அவசியம்.
பழக்கவழக்கத்தை, பாரம்பரியத்தை, கல்வியின் தாக்கங்களை, போட்டி மனப்பான்மையை உடைத்தெறிய- அந்த அனைத்து ஆக்கிரமைப்புகளையும் உடைத்தெறிய, ஒரு பெருமளவிலான கவனம், விழிப்புணர்வு தேவை, மேலோட்டமான அளவில் மட்டுமேஇல்லாமல், ஆனால் தீவிரமாக, ஆழமாக இருக்கவேண்டும்.
ஆனால் நீங்கள் எதுவுமாக இல்லை என உணர்வதே ,அறிவதே நீங்கள் ஏதோ ஒன்றாக இருப்பதாகும்.
யாராகவும் இல்லாத நிலை, இருமாப்பு கொண்டவராக இல்லாத நிலை, நாம் முயன்று அடையும், நாம் வரவழைக்கும் ஒன்றல்ல, மாறாக, தானாகவே வரும் ஒன்று.
ஒருவர் மனதில் அன்புகொண்டு இருக்கும்போதுதான் அந்த நிலையை உணரமுடியும்.
ஆனால் அன்பு என்பது நாம் தேடக்கூடிய ஒன்றல்ல. அங்கே மனதுக்குள் ஓரு புரட்சி ஏற்படும்போது, அங்கு சுயம், தான், சுயவிருப்பம் முக்கியமில்லாமல் இருக்கும்போது, சுயம், தான் என்ற உணர்வு ஒருவரின் இருப்பின் மையமாக இல்லாதபோது, அங்கே அன்பு பொங்குகிறது.
By
Jagadeesh Krishnan
[05/02, 10:54 PM] Jagadeesh KrishnanChandra: Question:
I, who consider myself superior to others, am arrogant. I like that feeling, it gives pleasure. But I understand it to be the wrong approach. How do I get rid of this arrogance and hypocrisy?
We all want to be superior or have a sense of superiority. Isn't it
We are important people in the community,
We want to make friends with people who are at the center of everything and want to get to know celebrities.
We all want to identify with celebrities, either by inherited custom or by our own initiative, or to show that we are with them, or to become famous ourselves.
From the office assistant to the highest ranking person on the ground, we all aspire to be something, so we have a sense of ambiguity, a desire to be superior, a sense of importance.
Although the feeling that we are rising as someone is a pleasurable one, this questioner asks how to get rid of it.
Sure, it’s so easy to get rid of the urge to pose as superior, isn’t it? Don’t be anyone. No, guys, don't just laugh and push this thing away. Being without anyone or anything is a very difficult thing to do. Because, our education system, social environment, the teachings of our religions all force us to be someone, superior. Do you, too, have no desire to become someone within yourself? Do you not want to become a great writer or someone who is an extraordinary writer, famous and famous?
Do you not aspire to be a master painter, a master musician, a beautiful man, or a sage with special features?
To know, to reach, to catch - these are what we fight for, aren't we?
If we are honest with ourselves, we will accept this.
All our struggles, all our indestructible conflicts are all about doing this - being someone, being superior. It gives a lot of inspiration, a lot of power, doesn't it?
Ambition is a great motivator.
We are caught up in the habit of those thoughts.
Can you easily deny them all and be without anyone, no one?
At the same time we must be without anyone - not by controlling ourselves, not by a compulsion.
When we realize what it means to love, we are nobody. But how can a man who thinks of his own importance and acts accordingly love others?
So, it's easy to say I should be nothing. But to bring it about, it takes a great deal of energy, a great intuition to make it natural.
To break the habit, the tradition, the implications of education, the competitive mindset- to break all those aggressions, requires a tremendous amount of attention, awareness, not only superficially, but seriously, deeply.
But to feel and know that you are nothing is to be something you are.
The state of not being anyone, the state of not being ambivalent, is something we seek and achieve, not something we summon, but something that comes automatically.
That state can only be felt when one has love in mind.
But love is not something we seek. When there is a revolution in the mind, when the self, the self, the will is not important, the self, the self is not the center of one's existence, love overflows there.
By
Jagadeesh Krishnan
No comments:
Post a Comment