Sunday, 25 April 2021

life

[25/04, 8:57 PM] Jagadeesh KrishnanChandra: அதிகாலை வேளையில் ஆற்றின் கரைப் பக்கம் உலாவுவதற்காக ஒரு மனிதன் சென்றபோது கால் தடுக்கி ஒரு மூட்டையின் மீது விழுந்தான் ..

அந்த மூட்டையை அவிழ்த்து பார்த்தபோது அதில் நிறைய கற்கள் நிறைந்திருந்தன ஆற்றங் கரையில் அமர்ந்து கொண்டு ஒவ்வொன்றாக அக்கற்களை ஆற்றில் விளையாட்டாக வீசி எறிந்து கொண்டிருந்தான் ...

அக்கற்கள் நீரில் விழும் போது வாரி இறைக்கப்படும் நீரை மகிழ்ச்சியோடு ரசித்து அனுபவித்துக் கொண்டிருந்தான் .

மெல்ல இருள் விலகி ஒளி தோன்ற சூரியன் மேலே எழத் தொடங்கினான் இறுதியில் ஒரு கல் மிச்சம் இருந்தது வெளிச்சத்தில் அந்த கல்லைக் கண்ட அவன் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுது புலம்பத் தொடங்கினான்

அப்போது அங்கு வந்த சிலர் கூடி நின்று என்ன விஷயம் என்று அவனை வினவினர். அவன் இது ஒரு வைரக்கல் இது என என்று தெரியாமல் வெறும் கற்கள் எனக் கருதி ஆயிரக்கணக்கான கற்களை ஆற்றில் வீசி எறிந்து விட்டேன் கடைசியாக மிஞ்சி இருப்பது இந்த ஒரு கல் தான் என்றான்.

இறுதியில் இருந்த அந்த ஒன்றையாவது அவன் உணர்ந்து கொண்டான் லட்சக்கணக்கான மக்கள் அந்த இறுதிக் கல்லைக்கூட அறிந்து கொள்ளாமல் சும்மா வாழ்க்கையை வீணே கழித்து மடிகிறார்கள்.

அன்றாட உணவைப் பற்றியே 
நாள்தோறும் நினைக்கும் அவர்கள் தன்னில் இருக்கும் வைரத்தைப்பற்றி ஒருபோதும் அறிவதில்லை.
By
Jagadeesh Krishnan
Psychologist and International Author
[25/04, 8:57 PM] Jagadeesh KrishnanChandra: Early in the morning, when a man went for a walk on the bank of the river, his foot stopped and he fell on a bundle.

 When he unwrapped the bundle, it was full of stones. He was sitting on the bank of the river and throwing the stones one by one as a game in the river ...

 He was happily enjoying the water that would be pumped out when the worries fell into the water.

 Slowly the sun began to rise above the darkness and finally a stone was left.

 Then some of the people who were there stood up and asked him what was the matter.  He threw thousands of stones into the river without realizing it was a diamond and said it was the last stone left.

 He realized that something was at the end and millions of people wereted their lives in vain without even knowing the final stone.

 About everyday food
 They think everyday and never know the diamond in them.
 By
 Jagadeesh Krishnan
 Psychologist and International Author

No comments:

Post a Comment