[15/04, 5:27 PM] Jagadeesh KrishnanChandra: ஆழ் மனம் அதிசயம்:...
வாருங்கள் தெரிந்துக்கொள்வோம்.
பல கோடிக்கணக்கான கோள்கள் கோடிக் கணக்கான விண்மீன்களின் தொகுப்பு அண்டம், பல கோடிக் கணக்காக அண்டங்களின் தொகுப்பே, பிரபஞ்சம் எனப்படுகிறது. பிரபஞ்ச சக்தியால் தான் சூரியன் ஒன்பது கோள்களையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது. இந்த ஒன்பது கோள்களில் பூமி மட்டுமே ஜீவராசிகள் வாழத் தகுதி வாய்ந்தது. பூமியானது தன்னைத் தானே சுற்றிக் கொண்டும், சூரியனையும் சுற்றி வருகிறது. நாம் பூமி சுற்றுவதை உணர முடியது. இந்த பூமியை இயக்கிக் கொண்டிருப்பதும் பிரபஞ்ச சக்தி ஆகும்.
நம்மை இயக்கும் பிரபஞ்சம்
பூமியில் வசிப்பதற்கு பெரிய முயற்சியோ, நம்பிக்கையோ துணிச்சலோ தேவையில்லை. பூமி எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் வாழ இடம் கொடுக்கும். ஆனால் இந்த பூமியில் வாழ ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் ஆனந்தமாய் வாழ முடிவெடுக்கும் சக்தி நம் ஒவ்வொருவரிடமும் உண்டு. நம் ஒவ்வொருவரிடமும் இருக்கும் சக்தியை நமக்கு கொடுத்துக் கொண்டிருப்பது பிரபஞ்சம்.
இரண்டு மனம்
நமது மனம் இருவிதமாக வேலை செய்கிறது அவை அறிவுமனம் மற்றும் ஆழ் மனம், அறிவு மனம் நம் மூளையின் கட்டளைப்படி இயங்குகிறது, ஆழ் மனம் பிரபஞ்ச சக்தியால் இயங்குகிறது, அறிய முடியாத ஆழ் மனம் நம் வாழ்க்கையில் பல அற்புதத்தை நிகழ்த்துகிறது. இன்று நாம் வாழும் வாழ்க்கை நாம் தெரிந்தோ, தெரியாமலோ நம் மனம் விரும்பியது. எதை நாம் விரும்பி நினைக்கிறோமோ அதை அனைத்தையும் நடத்திக் கொடுக்கும் சக்தி நம் ஆழ் மனத்திற்கு உண்டு.
எண்ணம் நிறைவேற
சிலருக்கு தொட்டதெல்லாம் துலங்குகிறது சிலருக்கு தொட்டதெல்லாம் தொலைந்தே போகிறது எல்லாவற்றிற்கும் காரணம் நம் எண்ணங்களே. நாம் விரும்பியதை அடைய ஒரே வழி, நம் எண்ணங்களை சீர் செய்து அதற்கு உருவம் கொடுப்பதுதான். ஏனெனில் நம் ஆழ் மனத்திற்கு வார்த்தைகள் தெரியாது. நல்லது கெட்டது பிரித்துப் பார்க்கத் தெரியாது. ஓர் எண்ணத்தை மனதில் விதைத்து, அதை அனுதினமும் நினைத்து, அந்த எண்ணத்தை நம் ஐம்புலன்களாலும் உணர்ந்து வாழ்ந்தால் அந்த எண்ணம் நிறைவேறும்.
ஆழ் மனதை வசியப்படுத்த தியானம்
நமது நாட்டில் பலர் ஏழைகளாக இருப்பதற்கும், சிலர் சுகமாக எல்லா வசதிகளுடன் வாழ்வதற்கும் காரணம், அவர்கள் மனதில் கொண்டிருக்கும் எண்ணங்கள், ஆசைகள்தான் என்று மனவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆசைகளை சீர்படுத்தி செயல்படுத்த நம் மனதை ஒருமுகப்படுத்த வேண்டும். அது தான் தியானம்.
தியானம் என்றால் என்ன? பூதக் கண்ணாடிக்கு கீழே ஒரு தாளை வைத்து, சூரியக்கதிரை பூதக் கண்ணாடி வழியாக தாள் மேல்படும்படி வைத்தல், என்ன நடக்கும் தாள் பற்றி எரியும், அதற்கு காரணம் பூதக் கண்ணாடி சூரிய சக்தியை ஒருமுகப்படுத்துவதால் அதற்கு எரிக்கும் சக்தி கிடைகிறது. அதுபோல் நம் மனதை ஒருமுகப்படுத்தும் போது மனதிற்கு ஒரு வலிமை ஏற்படுகிறது.
ஆழ் மனதை எப்படி செயல்படுத்த வைக்கலாம்
நம் மனசக்தியை ஒருமுகப்படுத்தும் மார்க்கங்களைத்தான் ‘ஜெபம்’ என்றும் ‘தியானம்’ என்றும் சொல்கிறோம். உதடுகள் அசைந்து ஒலியுடன் சொல்வதை ‘ஜெபம்’ என்றும், மனதிற்குள் எண்ணங்களை அடக்குவதை ‘தியானம்’ என்றும் சொல்கிறோம். எந்த எண்ணமும் மனதிற்குள் வைக்க வைக்க, அதற்கு வலிமை அதிகமாகிறது. நம் எண்ணத்தை ஜெபம் போல் திரும்பச் சொல்வதன் மூலம் ஆழ் மனதிற்கு விஷயங்கள் போகின்றன அந்த விஷயங்களை ஆழ் மனம் நிறைவேற்றி வைக்கிறது. இதுதான் உண்மை. முன்னூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பிரான்சு நாட்டு மருத்துவர், “நான் ஒவ்வொரு நாளும் முன்னைவிட ஆரோக்கியமானவனாக இருக்கிறேன்” என்று நோயாளிகள் திரும்பத் திரும்பச் சொல்லச் செய்ததன் மூலம் அவர்களது நோயைக் குணப்படுத்தினார். இன்று நாம் மருத்துவர்களிடம் செல்லும் போது மருத்துவர் உங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொல்லும் போது நம் நோய் குணமாவதைப் போல் உணர்வோம்.
மனதை ஒருமுகப்படுத்துங்கள்
மனதை ஒருமுகப்படுத்தும் பழக்கந்தான், நாம் ஒரு வேலையைச் செய்யும் போது மனதை அந்த வேலையில் ஒருமுகப்படுத்தச் செய்யும், வேலையும் வெற்றியடையும். ஜெபம், தியானம் மூலம் மனதை ஒருமுகப்படுத்தும் திறனையும், நம் ஆசைகளை, இலட்சியங்களை, ஆழ் மனதிற்கு அனுப்பி வைக்கும் முறையை கடைபிடித்தல் ஆச்சரியமான நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் நேர்வதைப் பார்ப்பீர்கள்; வெற்றி உங்கள் கைக்குள் வந்து சேரும். இதுவே இத்தனை நாள் அதிகம் பேருக்கு தெரியாத இரகசியமாக இருந்தது.
ஆழ் மனம் திறந்தால் ஏற்படும் பயன்கள்
ஆழ் மனம் என்பது நம்மில் உள்ள மிகப் பெரிய சக்தியாகும். ஆழ் மனம் துக்கமும் விழிப்பும் இல்லாத நேரத்தில் திறக்கும், அதாவது தியானத்தில் ஈடுபடும் போது திறக்கும், பிரபஞ்ச சக்தி நமக்கு கிடைக்கும், ஆழ்மனம் நம் கட்டுப்பாட்டிற்குள் வரும். இதன் மூலம் நம் ஆசைகளை, லட்சியங்களை நிறைவேற்றலாம் மற்றும் நம் உடல் நோய்களையும் குணப்படுத்தமுடியும், மற்றவர்களின் ஆழ் மனதுடனும் உரையாடமுடியும்..
By
Jagadeesh Krishnan
Psychologist and International Author
[15/04, 5:28 PM] Jagadeesh KrishnanChandra: The subconscious mind miracle: ...
Let's find out.
The universe is a collection of billions of galaxies, a universe of billions of galaxies. The sun holds the nine planets under its control by the force of the universe. Of these nine planets, only Earth is capable of living. The earth revolves around itself and the sun. We could feel the earth spinning. The force of the universe is also driving this earth.
The universe that drives us
It does not take much effort, hope or courage to live on earth. Earth will give everyone a place to live without any discrimination. But each of us has the power to decide to live happily on this earth every day, every hour, every minute, every second. The universe is giving us the power that each of us has.
Two minds
Our mind works in two ways: the subconscious mind and the subconscious mind. The life we live today is what our minds wanted, whether we knew it or not. Our subconscious mind has the power to control all that we desire.
Fulfill the intention
For some, everything that is touched is lost. For some, everything that is touched is lost. The reason for everything is our thoughts. The only way to achieve what we want is to adjust our thoughts and shape it. Because our subconscious mind does not know words. Good and bad do not know how to distinguish. If we sow an idea in the mind, think of it daily and realize that thought by our senses, that thought will come true.
Meditation to enchant the subconscious mind
Psychologists say that the reason why many people in our country are poor and some live comfortably with all the comforts is because of the thoughts and desires they have in mind. We need to focus our minds on regulating and executing desires. That is meditation.
What is meditation? Put a sheet under the magnifying glass and place the sunscreen over the sheet through the magnifying glass, about what happens to the burning paper, because the magnifying glass concentrates the solar energy so that it gets burning energy. Similarly when our mind is focused there is a strength to the mind.
How to activate the subconscious mind
We call the ways in which our minds are focused ‘prayer’ and ‘meditation’. We call the movement of the lips with the sound ‘prayer’ and the suppression of thoughts in the mind is called ‘meditation’. To keep any thought in mind, the strength for it increases. Things go to the subconscious mind by repeating our thoughts like a prayer and the subconscious mind accomplishes those things. this is the truth. A French physician who lived three hundred years ago cured patients of their disease by repeatedly telling them, "I am healthier every day than ever before." Today when we go to the doctors we will feel like our disease is cured when the doctor tells you that you have no problem.
Focus the mind
It is the habit of concentrating the mind, and when we do a job that keeps the mind focused on that work, the work will be successful. The ability to concentrate the mind through prayer and meditation, and the practice of sending our desires, ambitions, and subconscious to the subconscious mind will see amazing events happen in your life; Victory will come into your hands. This was a secret that had not been known to many for so long.
The benefits of opening the subconscious mind
The subconscious mind is the greatest force within us. The subconscious mind opens when there is no sadness and awakening, that is, it opens when we engage in meditation, the universal power is available to us, and the subconscious comes under our control. Through this we can fulfill our desires and ambitions and heal our physical ailments and communicate with the subconscious mind of others.
By
Jagadeesh Krishnan
Psychologist and International Author
No comments:
Post a Comment