Monday 15 February 2021

mind

[15/02, 6:30 PM] Jagadeesh KrishnanChandra: கேள்வி: "மாற்றம்" என்று நீங்கள் எதை சொல்கிறீர்கள்? 

 ஒரு அடிப்படை புரட்சி இருக்க வேண்டும். உலக நெருக்கடி அதைக் கோருகிறது.நமது வாழ்க்கை அதைக் கோருகிறது.நமது அன்றாட சம்பவங்கள், நாட்டங்கள், கவலைகள், அதைக் கோருகின்றன. நம் பிரச்சினைகள் அதைக் கோருகின்றன. 

ஒரு அடிப்படை, தீவிர புரட்சி இருக்க வேண்டும். ஏனெனில் மாற்றம் வேண்டி மனிதன் இதுவரை மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் தோற்றுவிட்டன.   அழிவின் அலை தொடர்கிறது. எனவே ஒரு புரட்சி இருக்க வேண்டும். 

ஒரு கோட்பாட்டின் அடிப்படையாக அல்ல. புரட்சி என்பது வெறுமனே சில கோட்பாடுகளின் தொடர்ச்சியாக உள்ளது. அது தீவிரமான மாற்றத்தை கொண்டுவரவில்லை. ஒரு கோட்பாடை, தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட புரட்சி, வன்முறை, இடையூறு, குழப்பம் ஆகியவற்றைக் கொண்டுவருகிறது. நீங்கள் இதை நேரடியாக பார்க்கலாம். அது உங்கள் கண் முன்னால் நடக்கிறது.

 குழப்பத்திலிருந்து நீங்கள் ஒழுங்கை உருவாக்க முடியாது. ஒழுங்கைக் கொண்டுவருவதற்காக மேலும் மேலும் குழப்பங்களை உருவாக்க விரும்பும் மனிதர்களிடம்  இது போன்ற ஒரு தவறான சிந்தனையின் வழிமுறை உள்ளது. அவர்களிடம் அதிகாரம் இருப்பதால், ஒழுங்கை உருவாக்கும் அனைத்து வழிகளும் தங்களுக்குத் தெரியும் என்று அவர்கள் கருதுகிறார்கள். 

போர்களின் தொடர்ச்சியான ஊக்குவிப்பு, சமூகங்களுக்கிடையேயான இடைவிடாத மோதல், நாடுகளுக்கு இடையில் முரண்பாடு, பொருளாதார மற்றும் சமூக சமத்துவமின்மை, அசாதாரணமாக மகிழ்ச்சியாக இருப்பவர்களுக்கும், வெறுப்பு, மோதல் மற்றும் துயரங்களில் சிக்கியவர்களுக்கும் இடையிலான சமத்துவமின்மை - இதையெல்லாம் பார்க்கும் மனதில் ஒரு புரட்சி இருக்க வேண்டும்;  முழுமையான, அடிப்படை மாற்றம் ஏற்படவேண்டும், இல்லையா?
By
Jagadeesh Krishnan
[15/02, 6:30 PM] Jagadeesh KrishnanChandra: Question: What do you call "change"?

  There must be a fundamental revolution.  The global crisis demands it. Our lives demand it. Our daily events, aspirations, worries, demand it.  Our problems demand it.

 There must be a fundamental, radical revolution.  Because all human efforts to change have failed.  The wave of destruction continues.  So there has to be a revolution.

 Not based on a theory.  Revolution is simply a continuation of certain principles.  It did not bring about radical change.  A theory, a philosophy-based revolution, brings about violence, disruption, and chaos.  You can see this directly.  It happens right in front of your eye.

  You can’t create order out of chaos.  Humans who want to create more and more chaos in order to bring order have such a misguided way of thinking.  Because they have the power, they think they know all the ways to create order.

 The continual promotion of wars, the incessant conflict between communities, the conflict between nations, the economic and social inequality, the inequality between those who are extraordinarily happy and those who are caught up in hatred, conflict and misery - there must be a revolution in the mind that sees all this;  There needs to be a complete, fundamental change, right?
 By
 Jagadeesh Krishnan

No comments:

Post a Comment