Monday 16 August 2021

human life

[16/08, 10:00 PM] Jagadeesh KrishnanChandra: இந்த 4 பேரை நல்ல வழிக்கு கொண்டு வருவது என்பது முடியவே முடியாத காரியமாம்! ....... 

யார் அவர்கள்?...

இந்த உலகத்தில் தவறே செய்யாத மனிதன் இல்லை. மனிதனாக பிறந்தால் ஏதாவது ஒரு தவறை செய்துதான் தீர வேண்டும். ஆனால் அப்படி செய்யும் தவறுகளை கூட எளிதாக திருத்திக் கொள்ளும் வாய்ப்புகளை அவன் பெறுகிறான். ஆனால் இந்த நான்கு பேரை என்ன செய்தாலும் நல்ல வழிக்கு கொண்டு வரவே முடியாதாம்!, 

அப்படியானவர்கள் யாரெல்லாம்? என்பதைத் தெரிந்து கொள்வோம்...

1. மனிதனிடம் நல்ல விஷயமும், கெட்ட விஷயமும் இரண்டும் கலந்து தான் இருக்கும். எல்லோருமே சுத்த நல்லவர்களும் இல்லை. அதே போல் எல்லோருமே கெட்டவர்களும் இல்லை. ஒவ்வொரு மனிதனிடமும் தனித் தனியாக நல்ல விஷயங்களும், கெட்ட விஷயங்களும் சேர்ந்து தான் அடங்கி இருக்கும். அப்படி இருக்கும் பொழுது ஒரு சிலருக்கு மட்டும் கெட்ட விஷயங்கள் என்பது அதீதமானதாக இருக்கும். இவர்களை இந்து சமயத்தில் துஷ்டர்கள் என்று கூறுவார்கள். இந்த துஷ்டர்களுக்கு நாம் என்ன தான் நல்லது செய்தாலும், அவர்கள் நமக்கு விஷத்தை கக்கும் பாம்பை போலவும், கொட்டும் தேளை போலவும் கெட்டது தான் பதிலுக்கு செய்வார்கள். என்ன செய்தாலும் நம்மால் அவர்களை நல்ல வழிக்கு கொண்டு வரவே முடியாது.

2. அடுத்ததாக சந்தேகப் பிராணிகள். எப்போதும் சந்தேகத்திலேயே இருப்பவர்களை ஒரு பொழுதும் நல்ல வழிக்கு கொண்டு வர முடியாது. சந்தேகப்படும் படியாக ஏதாவது ஒரு விஷயம் நடந்து அதற்காக அவர்களை சந்தேகப்பட்டால் பரவாயில்லை ஆனால் எதற்கெடுத்தாலும் சந்தேகம் என்றால் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது. செவிடன் காதில் சங்கு ஊதுவது போல தான் இவர்களும்! கத்தி கத்தி நம் நியாயத்தை கூறினாலும் அவர்களுக்கு உறைக்காது. இப்படியானவர்களை நல்ல வழிக்கு கொண்டு வருவது என்பது முடியாத காரியம் ஆகும்.

3. எப்பொழுதும் சோகத்தில் இருப்பவர்கள் திருந்தாத ஜென்மங்கள். இன்பமும், துன்பமும் கலந்தது தான் வாழ்க்கை என்பதை உணராத இவர்கள் தங்களையும் கெடுத்து கொண்டு அடுத்தவர்களையும் கெடுப்பார்கள். இவர்களிடம் பழகுவதை நிறுத்தினாலே உத்தமம். 

சதா சோகம் என்று புலம்பிக் கொண்டிருப்பவர்கள், அழுது கொண்டிருப்பவர்களை எந்த காலத்திலும் என்ன சொன்னாலும் நல்ல வழிக்கு கொண்டு வர முடியாது. அந்த நேரத்திற்கு சரி சரி என்று தலையை ஆட்டுவார்களே தவிர மறுபடியும் அதே தவறை தான் செய்வார்கள். இவர்களிடம் எதிர்மறை எண்ணங்கள் அதிகரித்து காணப்படும். எனவே இவர்கள் நல்ல வழிக்கு வருபவர்கள் அல்ல. எப்படியும் போ என்று விட்டு விட்டு நம் வேலையை பார்ப்பது நல்லது.

4. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை, செய்ந்நன்றி கொன்ற மகற்கு’ என்ற திருக்குறளை அனைவரும் பின்பற்றுவது இல்லை. இன்று பலரும் நம்முடன் இருந்து கொண்டு நம்முடைய உதவிகளை பெற்றுக் கொண்டு கடைசியில் நீ என்ன அப்படி செய்து விட்டாய்? என்று நன்றிகெட்டு போய் கூறுவார்கள். இப்படி நன்றியை மறந்து நன்றி கெட்டவர்களாக இருக்கும் நபர்களுக்கு கடவுளே வந்து உபதேசம் கூறினாலும் கூட, இவர்களை நல்ல வழிக்கு கொண்டு வருவது என்பது முடியவே முடியாத காரியமாகும்.

என் நன்றியையும் மறக்கலாம் ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்து அவர்களுக்கு துரோகம் செய்வது என்பது மன்னிக்க முடியாத பாவமாக கருதப்படுகிறது. இந்த பாவத்தை செய்பவர்கள் நல்ல வழிக்கு வரவேமாட்டார்கள். மேற்கூறிய இந்த 4 பேரும் நல்வழிக்கு கொண்டு வர முடியாதவர்கள். எனவே இவர்களை சற்று தள்ளியே வைத்திருங்கள்.

வழங்கியவர்
    ஜெகதீஷ் கிருஷ்ணன்
    உளவியலாளர் மற்றும் சர்வதேச ஆசிரியர்
[16/08, 10:00 PM] Jagadeesh KrishnanChandra: Bringing these 4 people to the right path is an impossible task!  .......

 Who are they? ...

 There is no man in this world who does no wrong.  If you are born a human being, you must have done something wrong.  But he also gets the chance to easily correct the mistakes he makes.  But no matter what these four do, they can never get better!

 Who are such people?  Let's find out ...

 1. Man has a mixture of good and bad.  Not everyone is pure good.  As well as not everyone is bad.  Each person has his own set of good and bad things.  When that is the case bad things will only get worse for a few.  They are said to be evil in Hindu times.  No matter what good we do to these wicked people, they will retaliate against us just as badly as a poisonous snake and a scorpion.  No matter what we do, we can never get them right.

 2. Next up are the suspects.  Those who are always skeptical can never be brought to the right path.  It's okay if something suspicious happens and you suspect them for it but there is nothing you can do about them if you suspect anything.  These are like blowing a trumpet in a deaf ear!  Screaming screams will not freeze them even if they say our justice.  Bringing such people to the right path is an impossible task.

 3. Those who are always in sorrow are unrepentant geniuses.  They do not realize that life is a mixture of pleasure and pain and spoil themselves and others.  It is better to stop associating with them.

 Those who lament that Sada is sad, those who are crying cannot be brought to the right path no matter what they say at any time.  They will make the same mistake again and again except shaking their head that it is OK for that time.  They are more likely to have negative thoughts.  So these are not good people.  It’s good to see our work left to go anyway.

 4. There is no life without a thankless killer, not everyone follows the motto of ‘thank you for killing a daughter’.  Many people are with us today and with our help, what did you do in the end?  They will say thank you.  Even if God comes and preaches to people who are so ungrateful and forgetful of gratitude, it is impossible to bring them to the right path.

 I can forget my gratitude too but forgetting the help one has done and betraying them is considered an unforgivable sin.  Those who commit this sin will not come to the right path.  These 4 people mentioned above are the ones who cannot be brought to the right path.  So keep them a little apart.

  by
     Jagadeesh Krishnan
     Psychologist and International Author

No comments:

Post a Comment