[14/03, 11:40 AM] Jagadeesh KrishnanChandra: விழிப்புணர்வும் மையமும்
முதலில் விழிப்புணர்வு என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் நடந்து போய்க் கொண்டிருக்கிறீர்கள். அப்போது நீங்கள் அனேக விஷயங்களை அறிகிறீர்கள். – அதாவது கடைகள், உங்களை கடந்து செல்லும் மக்கள், அங்குள்ள போக்குவரத்து இப்படி எல்லாவற்றையும் உணர்கிறீர்கள். நீங்கள் அனேக விஷயங்களை உணர்கிறீர்கள். ஒரே ஒரு விஷயத்தை மட்டும் உணர்வதில்லை. – அதுதான், உங்களைப் பற்றி. நீங்கள் தெருவில் நடந்து செல்லும்போது அநேக விஷயங்களை உணர்கிறீர்கள். ஆனால் நீங்கள் உங்களை உணர்வதில்லை!. தன்னைப் பற்றிய இந்த விழிப்புணர்வினை ஜார்ஜ் குருட்ஜிப் தன்நினைவு (Self Remembering) என்று அழைக்கிறார். “இடைவிடாமல், நீங்கள் எங்கிருந்தாலும், உங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.” என்று குருட்ஜிப் கூறுகிறார்.
நீங்கள் என்ன செய்தாலும், ஒரு விஷயத்தை மட்டும் இடைவிடாமல் உங்களுக்குள் செய்து கொண்டு வாருங்கள்; நீங்கள்தான் அதைச் செய்கிறீர்கள் என்கின்ற விழிப்புணர்வுடன் இருங்கள். நீங்கள் சாப்பிடுகிறீர்கள் – உங்களைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருங்கள். நீங்கள் நடந்து செல்கிறீர்கள் – அப்போது உங்களைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருங்கள். நீங்கள் மற்றவர்கள் சொல்வதை கவனிக்கலாம். நீங்கள் பேசலாம். – எதுவாக இருந்தாலும், உங்களைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருங்கள். நீங்கள் கோபப்படும்போது நீங்கள்தான் கோபப்படுகிறீர்கள் என்று விழிப்புணர்வு கொள்ளுங்கள். இப்படி இடைவிடாமல் நீங்கள் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பது, ஒரு கண்ணுக்கு தெரியாத சக்தியை உங்களுக்குள் உருவாக்குகிறது. நீங்கள் ஒன்று திரண்ட ஒரு உயிராக இருக்க ஆரம்பிக்கிறீர்கள்.
சாதாரணமாக, நீங்கள் ஒரு தொளதொள என்று இருக்கும் பை போல இருக்கிறீர்கள். உங்களிடம் கெட்டித் தன்மை இல்லை, உங்களிடம் மையம் இல்லை – உண்மையில் வெறுமனே ஒரு திரவத்தன்மை, எந்தவிதமான மையமும் இல்லாமல், அநேகப் தனித்தனியான பொருட்கள் இருப்பது போன்று இருக்கிறீர்கள். ஒரு கூட்டம், உங்களுக்குள் இடைவிடாமல் மாறிக்கொண்டும், இடம் பெயர்ந்துகொண்டும் உள்ளது. உங்களுக்குள் எஜமானன் என்பவர் இல்லை. விழிப்புணர்வுதான் உங்களது எஜமானன். நான் எஜமானன் என்பதை, உருவாக்குபவர் கட்டுப்படுத்துபவர் என்ற அர்த்தத்தில் கூறவில்லை. நான் எஜமானன் என்று கூறுவது, நீங்கள் வெறுமனே உங்களுக்குள் இருங்கள், தொடர்ந்து இடைவிடாது இருங்கள் என்கிற அர்த்தத்தில்தான். நீங்கள் எதைச் செய்தாலும் அல்லது செய்யாமல் சும்மா இருந்தாலும், உங்களது தன்னுணர்வில் நீங்கள் இருக்கிறீர்கள் என்கிற ஒரு விஷயம் மட்டும் இடைவிடாமல் இருக்கவேண்டும்.
ஒருவர் உள்ளே இருக்கிறார் என்கிற எளிய உணர்வு, ஒரு மையத்தை உருவாக்குகிறது. இது அசைவற்ற மையம், அமைதியின் மையம், அகந்தையை வென்ற மையமாக இருக்கும். அது உள்ளுக்குள் உள்ள சக்தி. நான் “உள்ளிருக்கும் சக்தி” என்று கூறும்போது, அதன் பொருளை அப்படியே எடுத்துக் கொள்ளுங்கள். அதனால்தான் புத்தர், “விழிப்புணர்வு என்னும் நெருப்பு” என்று பேசுகிறார். அது ஒரு நெருப்பு. நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க ஆரம்பித்தால், நீங்கள் ஒரு புதிய சக்தியை உங்களுக்குள் உணர்வீர்கள். ஒரு புதிய நெருப்பை, ஒரு புதிய உயிரை உங்களுக்குள் உணர்வீர்கள். மேலும், இந்த புதிய உயிரினால், புதிய சக்தியினால், புதிய ஆளுமையினால், உங்கள்மீது ஆதிக்கம் செலுத்தி வந்த அநேக விஷயங்கள் வெறுமனே கரைந்து போய்விடும். நீங்கள் அவைகளோடு போராட வேண்டியதில்லை.
ஆனால் இப்போது நீங்கள் உங்களது கோபத்தோடு, உங்களது பேராசையோடு, உங்களது பாலுணர்வோடு போராட வேண்டியுள்ளது. ஏனெனில், நீங்கள் பலவீனர்களாக இருக்கிறீர்கள். எனவே, உண்மையில் கோபம், பேராசை, பாலுணர்வு இவைகள் எல்லாம் பிரச்னைகள் அல்ல; உங்களின் பலவீனம்தான் பிரச்னை. நீங்கள் உங்களுக்குள் இருப்பதை – நான் இருக்கிறேன் – என்று உணர ஆரம்பித்துவிட்டால், உங்களது சக்திகள் எல்லாம் ஒரே புள்ளியை நோக்கி ஒருமுகப்படுகின்றன, கெட்டிப்படுகின்றன. மேலும், அப்போது உங்களுக்குள் ஒரு ‘ஆன்மா’ பிறக்கிறது. இது, நான் என்னும் தன்முனைப்பு அல்ல என்றும், இது ஆன்மா என்றும் நினைவில் கொள்ளுங்கள். நான் என்னும் தன்முனைப்பு என்பது ஆன்மாவின் பொய்யான உணர்வாகும். ஆன்மாவைப் பெறாமலேயே, நீங்கள் ஆன்மாவைப் பெற்றிருப்பதாக நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். அதுதான் ஆணவம், நான் என்னும் தன்முனைப்பு. ஆணவம் என்பது பொய்யான ஆன்மா – நீங்கள் ஆன்மாவாக ஆகவில்லை என்றாலும்கூட நீங்கள் ஒரு ஆன்மா என்று நம்பிக் கொண்டிருக்கிறீர்கள்.
சத்யத்தைத் தேடுபவரான மௌலிங்கப்புத்திரர் என்பவர் புத்தரிடம் வந்தார். புத்தர் அவரிடம், “நீங்கள் என்ன தேடிக் கொண்டிருக்கிறீர்கள்?”என்று கேட்டார்.
அதற்கு மௌலிங்கப்புத்திரர், “நான் எனது ஆன்மாவைத் தேடுகிறேன். எனக்கு உதவி செய்யுங்கள்” என்றார்.
தான் சொல்வதையெல்லாம் செய்வேன் என்று ஒரு வாக்குறுதி அளிக்கும்படி மௌலிங்கபுத்திரரிடம் புத்தர் கேட்டார். அதைக் கேட்ட மௌலிங்கபுத்திரர் அழுதார். அவர் புத்தரிடம், “என்னால் எப்படி வாக்கு கொடுக்க முடியும்? நான் என்பவன் இன்னமும் இல்லையே, எப்படி என்னால் வாக்குறுதி கொடுக்கமுடியும்? நாளை நான் என்னவாக இருப்பேன் என்று எனக்கே தெரியாது. வாக்குறுதி அளிக்ககூடிய அந்த ஆன்மாவை நான் இன்னும் பெற்றிருக்கவில்லை. எனவே முடியாத ஒன்றை நீங்கள் என்னிடம் கேட்காதீர்கள். நான் முயற்சி செய்கிறேன். அதிகபட்சம் நான் இதைத்தான் கூறமுடியும். நீங்கள் எதைச் சொன்னாலும், அதை நான் செய்கிறேன் என்று என்னால் கூற முடியாது. ஏனெனில் அதைச் செய்வது யார்? வாக்குறுதி கொடுக்கின்றதையும், வாக்குறுதியை நிறைவேற்றுகின்றதுமாகிய அந்த ஒன்றைத்தான் நான் தேடிக் கொண்டிருக்கிறேன். நான் இன்னும் அதைப் பெறவில்லை.” என்றார்.
அதைக் கேட்ட புத்தர், “மௌலிங்கப்புத்ரா, உன்னிடம் இந்த பதிலைக் கேட்பதற்காகத்தான் நான் இந்த கேள்வியைக் கேட்டேன். நீ என்னிடம் வாக்குறுதி அளித்திருந்தால், நான் உன்னை திருப்பி அனுப்பி இருப்பேன். நீ என்னிடம், “நான், நீங்கள் கூறுவதை செய்கிறேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன்” என்று கூறியிருந்தால், உணமையிலேயே நீ ஆன்மாவைத் தேடுபவன் அல்ல என்பதை நான் அறிந்திருப்பேன். ஏனெனில் சாதகன் ஒருவன், எப்போதும் தான் இன்னும் அதை அடையவில்லை என்று அறிந்திருக்கவேண்டும். இல்லையெனில் தேடுவதன் நோக்கம் என்ன? நீ ஏற்கனவே அதுவாக இருந்தால், அதற்கு அவசியமே இல்லையே! நீ அதுவாக இல்லை! மேலும் ஒருவர் இதை உணர்ந்து கொண்டால், அதன்பிறகு அவரது ஆணவம் ஆவியாகப் போய்விடும்.” என்று பதில் கூறினார்.
நான் என்னும் ஆணவமானது, அங்கே இல்லாத ஏதோ ஒன்றினைப் பற்றிய தப்பான அபிப்பிராயம். ‘ஆன்மா’ என்றால், வாக்குறுதி அளிக்க முடிந்த ஒருமையம் என்று அர்த்தம். இந்த மையமானது, நீங்கள் இடைவிடாது தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருப்பதன் மூலமாகத்தான் உருவாக்கப்படுகிறது. ஏதோ ஒன்றினைச் செய்யும்போது நீங்கள் விழிப்புணர்வுடன் இருங்கள். நீங்கள் உட்கார்ந்துகொண்டிருக்கலாம், இப்போது தூங்கப் போகலாம், அப்போது உங்களுக்கு தூக்கம் வரும். நீங்கள் தூக்கத்தில் விழலாம். இப்படி ஒவ்வொரு நொடிப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருங்கள். அதன்பிறகு, உங்களுக்குள் ஒருமையம் பிறந்துவிட்டதை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள்; அப்போது விஷயங்கள் கெட்டியாக ஆகிவிடும். அங்கே ஒரு மையத்திலிருத்தல் ஏற்பட்டுவிடும். இப்போது, எல்லாமே அந்த மையத்தோடு தொடர்புடையதாக இருக்கும்.
ஆனால் இப்போதோ, நாம் மையங்கள் இல்லாமல் இருக்கிறோம். சில நேரங்களில் நாம் மையத்தில் இருப்பது போன்று உணர்கிறோம். ஆனால், அந்தத் தருணங்கள், ஏதாவது ஒரு சூழ்நிலை உங்களை விழிப்புணர்வு அடையச் செய்வதனால் உருவானதாக இருக்கும். திடீரென்று ஏதாவது சூழ்நிலை, ஒரு ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டால், நீங்கள் உங்களுக்குள் ஒரு மையத்தை உணர்வீர்கள். ஏனெனில், ஆபத்தில் நீங்கள் விழிப்புணர்வு பெறுவீர்கள். யாராவது ஒருவர் உங்களைக் கொலை செய்ய வரும்போது, உங்களால் அந்த நொடிப்பொழுதில் எதையும் சிந்திக்கமுடியாது, உங்களால் சுயநினைவு இல்லாமல் அந்த தருணத்தில் இருக்கமுடியாது. உங்களது சக்தி முழுவதும் மையம் கொண்டுவிடும். மேலும் அந்தத் தருணம் திடமானதாக ஆகிவிடும். உங்களால் கடந்த காலத்திற்கும் நகர முடியாது, எதிர்காலத்திற்கும் செல்லமுடியாது. அந்த நொடிப்பொழுதுதான் எல்லாமுமாக ஆகிவிடும். அதன்பிறகு, நீங்கள் உங்களை கொலை செய்ய வருபவனைப் பற்றி மட்டுமல்ல, உங்களைப் பற்றியும், அதாவது, கொலை செய்யப்படப் போகின்ற உங்களைப் பற்றியும் விழிப்புணர்வு கொள்வீர்கள்.
அதனால்தான், ஆபத்தான விளையாட்டுக்களுக்கு மக்களிடம் அதிக ஆதரவு இருக்கிறது. எவரெஸ்ட் சிகரத்தில் உள்ள கௌரிசங்கரின் உச்சிக்குச் சென்றுவந்த யாரையாவது கேட்டுப் பாருங்கள். முதல்முறையாக ஹிலாரி அதை அடைந்தபோது, அவர் திடீரென்று அந்த மையத்தை உணர்ந்திருக்க வேண்டும். மேலும் முதன்முதலாக யாராவது நிலவில் காலடி எடுத்து வைத்தவுடன், திடீரென்று அந்த மையத்தைப் பற்றிய உணர்வு வந்திருக்க வேண்டும். அதனால்தான் ஆபத்தானவைகளுக்கு கவர்ச்சி உள்ளது. நீங்கள் காரை ஓட்டிக் கொண்டு போகிறீர்கள். அப்போது நீங்கள் வேகத்தை மேலும் மேலும் கூட்டிக் கொண்டு போகும்போது, அந்த வேகம் ஆபத்தானதாகிறது. அப்போது உங்களால் சிந்திக்க முடியாது. எண்ணங்கள் மறைந்து போகும். அப்போது நீங்கள் கனவு காண முடியாது. அப்போது நீங்கள் கற்பனையில் மிதக்க முடியாது. அப்போது நிகழ்காலம் என்பது திடமானதாக ஆகிவிடும். எந்த நேரத்திலும் மரணம் என்பது சாத்தியம் என்கிற அந்த ஆபத்தான நேரத்தில், திடீரென நீங்கள் உஙகளுக்குள் உள்ள அந்த மையத்தை உணர்வீர்கள். இப்படி ஆபத்தான சில வேளைகளில், நீங்கள் உங்களது மையத்தை உணர்வதால்தான், ஆபத்தானவை உங்களுக்கு கவர்ச்சியானதாகத் தெரிகிறது.
போர்கள் தொடர வேண்டும் என்று நீட்சே எங்கோ கூறியுள்ளார். ஏனெனில், போர்களால் மட்டுமே சில சமயம் உங்களது ஆன்மா உணரப் படுகிறது – ஒரு மையம் உணரப்படுகிறது – ஏனெனில் போர் என்பது ஆபத்தானது. மேலும் மரணம் என்பது உண்மை என்றாகிவிட்டால், வாழ்க்கை தீவிரமானதாக ஆகிவிடுகிறது. மரணம் மிகவும் நெருங்கி வரும்போது, வாழ்க்கை தீவிரமாக ஆகிவிடுவதால், நீங்கள் மையத்தில் இருப்பீர்கள். நீங்கள் உங்களைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருக்கின்ற எந்தத் தருணமும், அங்கே மையத்திலிருத்தல் ஏற்படுகிறது. ஆனால், அது ஏதாவது ஒரு சூழ்நிலையால் உருவானதாக இருக்குமென்றால், அதன்பின்னர் அந்தச் சூழ்நிலை முடிந்தவுடன் அது மறைந்து போய்விடும்.
அது, வெறுமனே ஏதோ ஒரு சூழ்நிலையால் உருவானதாக மட்டுமே இருக்கக் கூடாது. அது உங்களுக்குள் உள்ளதாக இருக்க வேண்டும். ஆகவே, ஒவ்வொரு சாதாரண காரியத்திலும் விழிப்புணர்வுடன் இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். உங்களது நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கும்போதுகூட இதை முயற்சி செய்து பாருங்கள் – அப்போது அந்த உட்கார்ந்திருப்பவரைப் பற்றி விழிப்புடன் இருங்கள். நீங்கள் உட்கார்ந்திருக்கும் நாற்காலியைப்பற்றி மட்டுமல்ல, உட்கார்ந்திருக்கும் அறையைப் பற்றி மட்டுமல்ல, சுற்றிலும் உள்ள வெளியைப் பற்றி மட்டுமல்ல, உட்கார்ந்து கொண்டிருக்கும் உங்களைப் பற்றியும் விழிப்புணர்வுடன் இருங்கள். உங்களது கண்களை மூடிக் கொண்டு உங்களை உணருங்கள்; உங்களுக்குள் ஆழமாகத் தோண்டி உங்களை உணர்ந்து பாருங்கள்.
By
Jagadeesh krishnan
Psychologist and International Author
[14/03, 11:41 AM] Jagadeesh KrishnanChandra: Awareness and center
We must first understand what awareness is. You are walking. Then you know many things. - I mean the shops, the people passing by you, the traffic there you feel everything like this. You feel so many things. Not realizing only one thing. - That's it, about you. You feel many things when you walk down the street. But you do not realize yourself !. George Gurdjieff calls this awareness of himself Self-Remembering. "Constantly, remember yourself wherever you are." Says Gurudjip.
No matter what you do, keep doing just one thing; Be aware that you are the one doing it. You eat - be aware of yourself. You walk - then be aware of yourself. You may notice what others are saying. You can talk. - In any case, be aware of yourself. Be aware that when you are angry you are the one who gets angry. The fact that you are constantly thinking about yourself like this creates an invisible force within you. You begin to be a living being who gathers together.
Normally, you look like a sack that encloses with a drawstring. You have no solidity, you have no center - in fact you are simply a liquid, without any center, as if there were many separate objects. A crowd is constantly changing and displacing within you. There is no master among you. Awareness is your master. I am not saying that I am the master, in the sense that the creator is the controller. To say I am the Lord is to simply be within yourself, to be unceasing constantly. No matter what you do or do not do, the only thing that matters is that you are in your self.
The simple feeling that one is inside, creates a center. It will be the immovable center, the center of peace, the center of overcoming pride. It is the power within. When I say 'inner strength', to some it may seem like allot. That is why the Buddha speaks of the "fire of awareness." It was a fire. If you start to be aware, you will feel a new power within you. You will feel a new fire, a new life within you. Also, with this new life, new power, new personality, many things that once dominated you will simply dissolve. You don’t have to fight them.
But now you have to fight with your anger, your greed, your sexuality. Because, you are weak. So, really anger, greed, sexuality are not all problems; The problem is your weakness. When you begin to realize that you are within me - I am - all your energies are concentrated and solidified towards the same point. Also, then a ‘soul’ is born within you. Remember that this is not the ego of the self, but the soul. The ego of the self is the false sense of the soul. Without receiving the soul, you are believing that you have received the soul. That is arrogance, the ego of the self. Arrogance is a false soul - you believe you are a soul even though you have not become a soul.
Moulingaputra, a seeker of truth, came to the Buddha. The Buddha asked him, "What are you looking for?"
To which the Maulingaputras replied, “I am searching for my soul. Please help me. ”
The Buddha asked Moulingaputra to make a promise that he would do whatever he said. The Moulingaputras cried when they heard it. He said to the Buddha, “How can I vote? I am not yet, how can I make a promise? I had no idea what I would be like tomorrow. I have not yet received that soul of promise. So don’t ask me something that is impossible. I try. At most this is all I can say. Whatever you say, I can't say I do it. Because who does that? I am looking for something that promises and keeps its promise. I have not received it yet. ” said.
On hearing this, the Buddha said, “Maulingaputra, I have asked this question to ask you this answer. If you had promised me, I would have sent you back. If you had said to me, "I promise to do what you say," I would have known that you are not really a soul seeker. Because one who is a sadhaka should always know that he has not attained it yet. Otherwise what is the purpose of the search? If you already have that, you don't need it! You are not like that! And if one realizes this, then his arrogance will evaporate. ” That was the answer.
I am arrogant, a misconception about something that is not there. ‘Soul’ means the oneness that can be promised. This center is created by the fact that you are constantly alert. You have to be vigilant when doing something. You may be sitting up and going to sleep now, then you will fall asleep. You may fall asleep. Be vigilant every moment like this. After that, you will begin to realize that oneness is born within you; Then things will get harder. There will be a centerpiece. Now, everything will be related to that center.
But right now, we are without centers. Sometimes we feel like we are at the center. But, those moments can be created by something that makes you aware of a situation. If something suddenly happens, a dangerous situation, you will feel a center within yourself. Because, you will become aware of the danger. When someone comes to kill you, you can not think of anything in that moment, you can not be in that moment without self-consciousness. Bring the center throughout your power. And that moment becomes solid. You cannot move to the past, you cannot move to the future. Only then will everything be over. After that, you will become aware not only of the person who is coming to kill you, but also of yourself, that is, you who are going to be killed.
That’s why there is so much support from people for dangerous sports. Ask anyone who has been to the summit of Gaurishankar on Mount Everest. When Hillary reached it for the first time, she must have suddenly felt that center. And as soon as someone first set foot on the moon, there must have been a sudden sense of that center. That is why there is a attraction to the dangerous. You drive the car. Then as you increase the speed more and more, that speed becomes dangerous. Then you can't think. Thoughts disappear. Then you can not dream. Then you can’t float in the imagination. Then the present becomes solid. At that dangerous moment when death is possible at any moment, you will suddenly feel that center within you. Sometimes dangerous like this, just because you feel your center, makes the dangerous seem attractive to you.
Nietzsche said somewhere that wars must continue. Because, wars alone sometimes make your soul feel - a center is felt - because war is dangerous. And when death becomes a reality, life becomes serious. As death draws nearer, you will be at the center as life becomes more intense. Whenever you are aware of yourself, being centered there occurs. But, if it is caused by a situation, then it will disappear as soon as the situation is over.
It should not simply be caused by some circumstance. It has to be within you. So, try to be vigilant in every normal thing. Try this even while sitting in your chair - then be aware of who is sitting there. Be aware not only of the chair you are sitting in, but also of the room in which you are sitting, not only of the surroundings, but also of yourself who are sitting. Feel yourself with your eyes closed; Dig deep into yourself and realize yourself.
By
Jagadeesh krishnan
Psychologist and International Author
No comments:
Post a Comment