[18/03, 10:00 PM] Jagadeesh KrishnanChandra: சூஃபி ஞானம்
======= = =====
றாபியா என்னும் பெண்மணியே சூஃபி (Sufi) மதத்தின் முதலாவது மறைஞானியாவார் இவரது காலம் 717 - 801 CE ஆகும். இஸ்லாமிய மதத்திலிருந்து தோன்றிய ஒரு பிரிவு என்று கூறலாம் என்பது என் அபிப்பிராயம். றாபியா ஈராக்கில் (Iraq) உள்ள பஸ்ரா (Basra) நகரில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். கல்வி, கேள்வி ஞானம் எதுவுமில்லாதவர், ஆரம்பக் கல்வியைக் கூடப் பெறாதவர் இவர் சிறுமியாக இருந்தபோது அடிமையாக விற்கப்பட்டார் ஏனைய அடிமைகளைவிட வித்தியாசமானவராக இருந்தார் இவரது பேச்சுக்கள் செய்கைகளில் விழிப்புணர்வும், தெளிவும், மாற்றமும் இருப்பதை அவதானித்த எஜமானிற்கு சற்று அச்சம் ஏற்பட்டது றாபியா அடிமையாக இருக்கும் போது ஞானமடைந்துவிட்டார். இப் பெண்ணுக்கு என்ன நடந்தது? இப்பெண்ணில் பிசாசு குடி கொண்டுவிட்டதா? என யோசித்தார் எஜமான். தொடர்ந்து அடிமையாக வைத்திருந்து வேலைவாங்கப் பயந்த அந்த முதலாளி றாபியாவை விடுதலை செய்துவிட்டார்
இவரில் இருந்த மாற்றத்தையும் ஞானத்தையும் புரிந்து கொள்ள முடியாத ஆண் சமூகம் வழக்கம் போலவே இவரையும் சூனியக்காரி", "பெண் பேய்" என்று கூறியது. ஆனால் இவர் தொடர்ந்தும் தான் உணர்ந்த உண்மையை உரைத்தார். ஞானி றாபியா “நரகலோகத்திற்கு பயந்து கடவுளை தொழாதீர்கள், புண்ணியலோகத்தை அடைவதற்காக தொழாதீர்கள், இந்த இரண்டுமே சுயநலம் தான் என்றார். எந்தக் குறிக்கோளுடனோ, எதிர்பார்ப்புடனோ, சுயநலத்துடனோ தொழுகை மேற்கொள்ளாது,
எந்தவித தூண்டுதலும் இல்லாமல், எந்தவித காரணமும் இல்லாமல், எந்தவித நோக்கமும் இல்லாமல் கடவுளை தொழவேண்டும்” என போதனை செய்தார்
இவரது போதனையால் அச்சமடைந்த கல்விமான்கள், மதப்பிரச்சாரகர்கள், இவருடன் விவாதித்தனர். கல்வி கற்காத அந்த மறைஞானி தினமும் ஆண் மேலாதிக்கத்தின் அச்சுறுத்தல்களுக்கும், மிரட்டல்களுக்கும் முகம் கொடுத்துக் கொண்டேயிருந்தார். பல இன்னல்களுக்கு மத்தியில் தன் போதனையில் உறுதியாக இருந்தார். நரகலோகத்தை முன்வைத்து பயமூட்டியும், புண்ணியலோகத்தை முன்வைத்து ஆசையூட்டிய மதவாதிகளுக்கு முன் இவர் பிரகாசமாக ஒளி விசினார்.
இவரது பிரார்த்தனையைப் பாருங்கள் :
கடவுளே....
நரகலோகத்திற்குப் பயந்து உன்னை வணங்கினால் சொர்க்க லோகத்திலிருந்து என்னைத் துரத்திவிடு,
சொர்க்கலோகத்திற்காக உன்னை வணங்கினால் என்னை நரகலோகத்தில் எரித்து விடு
உன்னை வணங்க வேண்டுமென்பதற்காக வணங்கினால் உன்பார்வையை என்மீது படரவிடாமல் இருந்து விடு
சூஃபிகள் கால் நுனிவிரலில் சுழன்று, சுழன்று வேகமாக நடனமாடி தங்களை மறந்து தங்கள் மனதைக் கடந்து செல்லும் தியான முறை கொண்டவர்கள் உலக அதிசயங்களில் ஒன்றான இந்தியாவில் உள்ள "தாஜ்மஹாலை" வடிவமைத் தவர்கள் சூஃபி ஞானிகளே. சூஃபி மதம் கடின உடல் உழைப்பை, உற்சாகத்தை, உடல் இயக்கத்தை தியானம் எனக் கூறுகிறது. சொற்களிலும், சொற்பொழிவுகளிலும் (Sufism) சூஃபி மதம் அதிக அக்கறை கொள்வதில்லை இவர்கள் செயல்களிலும், நடைமுறைச் செயற்பாடுகளிலும் அக்கறை உள்ளவர்கள். அதில் தெய்வீகத்தைக் காண்பவர்கள் அவர்கள்
சூஃபி மதத்தின் புனித நூலின் பெயர் “நூல்கள் எல்லாம் அடங்கிய நூல்' என்பதே ஆகும் The Book of The Books) அப்புனித நூலில் எந்த வார்த்தைகளும் இல்லை. உலகிலே ஒரு வார்த்தையோ அல்லது எந்த ஒரு எழுத்தோ அல்லது எந்த ஒரு வசனமோ இல்லாத மதநூல் இதுதான்
அந்நூலில் வெறும் வெள்ளை வெற்றுத்தாள்கள் மாத்திரம்தான் இருக்கிறது. இதைப் பல நூற்றாண்டுகளாக ஒரு மறைஞானியிடமிருந்து அதற்கடுத்த ஞானிக்கு பொக்கிஷம்
போல் கைமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நூல் மிகுந்த மரியாதையுடன் பாதுகாக்கப்படுகிறது ,"எல்லாம் அடங்கிய நூல்" மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது
இதைப் படிக்க முடியுமா ,இதை அச்சிடவோ எந்த வெளியீட்டாளரும் முன்வரவில்லை காரணம் அதில் வார்த்தைகள் இல்லை. அது ஒரு வெறும் வெற்றுத்தாள் புத்தகம் மட்டுமே.
மனித மனம் வெள்ளைத்தாளில் கறுப்பு மையால் எழுதப்பட்ட வார்த்தைகளைத்தான் புரிந்துகொள்ளும். காரணம் எண்ணங்களைத்தான் சொற்களாக, வசனங்களாக தாளில் எழுதப்படுகிறது. எண்ணங்கள் எல்லாம் மறைந்த பிறகு நாங்கள் எல்லோரும் நூல்கள் எல்லாம் அடங்கிய நூலாகி விடுகிறோம். அதாவது ஒன்றும் அற்ற நிலை' அந்த நிலை தான் 'கடவுளின் நிலை' என்கிறது சூஃபி மதம்
கடவுள் ஆணா அல்லது பெண்ணா ? அப்படி எதுவும் இல்லாமல் ஒன்று மற்ற உயிர்த்தன்மையாக (Being) இயங்கிக் கொண்டு இருப்பதே இதன் விளக்கமாகிறது என்பது என் அபிப்பிராயம் உலகில் உள்ள அனைத்து மதங்களும் அந்த வெறுமையை (Non- Self) நோக்கித்தான் செல்கின்றன.
By
Jagadeesh Krishnan
Psychologist and International Author
[18/03, 10:01 PM] Jagadeesh KrishnanChandra: Sufi wisdom
======= = =====
Rabia was the first mystic of the Sufi religion, dating to 717 - 801 CE. It is my opinion that it can be said to be a sect that originated from the Islamic religion. Rabia was born into a poor family in Basra, Iraq. Educated, unquestioned, and uneducated, he was sold into slavery as a child. He was different from other slaves. What happened to this girl? Did the devil drink to this woman? Thought the master. The boss, who was constantly enslaved and afraid to hire, released Rabia
The male community, which could not comprehend the change and wisdom in him, called him a "sorceress" as usual, "but he continued to speak of the truth he realized. , Does not pray with expectation or selfishness,
We must worship God without any temptation, without any reason, without any motive. ”
Scholars and missionaries, frightened by his teachings, discussed with him. The uneducated occultist faced daily threats and intimidation of male domination. He remained steadfast in his teaching in the midst of many tribulations. He shone brightly in front of the religious people who were afraid to present hell and aspire to be blessed.
See his prayer:
God ....
If you fear hell and worship me, cast me out of heaven,
If you worship me for heaven burn me in hell
If I worship you for want of you, do not let your gaze fall on me
Sufis are the ones who designed the "Taj Mahal" in India, one of the wonders of the world, with a meditative way of forgetting themselves by spinning and dancing fast on the toes. Sufism refers to meditation as hard physical exertion, exertion, and physical movement. Sufism does not care much about words and discourses (Sufism). They are interested in actions and practices. They are the ones who see divinity in it
The name of the holy book of Sufism is "The Book of the Books". The Holy Book contains no words. This is the only religious book in the world that does not have a word or a letter or a verse
There are only white blank sheets in the book. This is a treasure trove from one mystic to the next for centuries
Is being exchanged as. The book is well-respected and the "All-Inclusive Book" is of paramount importance
Can't read this, no publisher has come forward to print this because it has no words in it. It's just a blank sheet of paper.
The human mind can only understand words written in black ink on white paper. The reason is that thoughts are written on paper in words and verses. After all the thoughts disappear we all become a book that contains all the texts. Sufism says that 'the state of nothingness' is the state of 'God'
Is God male or female? The implication of this is that one is functioning as the other being (Being) without anything like that, in my opinion, all the religions in the world are moving towards that emptiness (Non-Self).
By
Jagadeesh Krishnan
Psychologist and International Author
No comments:
Post a Comment