[20/03, 11:31 AM] Jagadeesh KrishnanChandra: ஆழ்மனதை அறிவோம்
எண்ணங்கள் ஏற்படுத்தும் வியக்கத்தக்க விளைவுகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுமுன், ஆழ்மனம் பற்றி அறிதல் அவசியம்.
நம் மனமானது, இரண்டு தளங்களில் செயல்படுகிறது. சிந்தனைகளைத் தோற்றுவிப்பதும், கேள்வி கேட்பதும், ஆராய்ச்சி செய்வதும், அறிவுபூர்வமான முடிவுகளை எடுப்பதும், புறமனத்தின் வேலை. எந்தக் கேள்வியும் கேட்காமல், புறமனம் இட்ட கட்டளைகளை செய்துமுடிக்கும் சக்திதான் ஆழ்மனம்.
மனதின் இந்தப் பகுதி, சர்வ வல்லமை வாய்ந்தது. அண்டங்கள் அனைத்தையும் வழிநடத்தும் பிரபஞ்ச சக்தியின் சிறுதுளிதான் நம் ஆழ்மனம்.
அளவிடமுடியாத சக்திகளைத் தன்னுள் அடக்கி, அமைதியாக உறங்கும் இந்த ஆழ்மனம்தான், கடவுள் மனிதனுக்குக் கொடுத்த மிகப்பெரிய வரம்.
இதன் ஆற்றலைப் பயன்படுத்தி சாதிக்க முடியாத செயல் எதுவுமே இல்லை எனலாம். உலகின் மிகப்பெரிய சாதனையாளர்கள் அனைவரும் இந்த ரகசியத்தை அறிந்திருந்தார்கள்.
இத்தனை சக்திகளைத் தனக்குள் அடக்கியிருந்தாலும், ஆழ்மனம் பகுத்தறியும் வல்லமை அற்றது. இதை நவீன அறிவியலின் ரோபோ அல்லது கம்ப்யூட்டரோடு ஒப்பிடலாம்.
அதாவது, மனிதனால் செய்ய முடியாத பல அற்புதமான வேலைகளை ஒரு ரோபோ அல்லது கம்ப்யூட்டர் கண்ணிமைக்கும் நேரத்தில் செய்து முடிக்கும்.
ஆனால், அவற்றை ஆட்டுவிக்கும் சக்தி, மனிதன்தானே? மனிதன் இடும் கட்டளைகளைத்தானே அவை செய்து முடிக்கின்றன? அப்படித்தான், நம் புறமனம் இடும் கட்டளைகளை அற்புதமாய் நிகழ்த்தி முடிக்கும் ஆழ்மனம், சுயமாக எதையும் சிந்திப்பதில்லை.
அதுமட்டுமல்ல… நம் புற மனத்தின் தலையீடே இல்லாமல், உடலின் உள் உறுப்புகளை இயக்கி, நம்மை உயிருடன் வைத்திருப்பதும் இந்த ஆழ்மனத்தின் செயல்தான்.
நாம் தூங்கும்போது நம் புறமனம் சிந்தனைகளை நிறுத்திவிட்டு ஓய்வெடுத்துக் கொள்கிறது. ஆனால் நம் ஆழ்மனம் உறங்கிவிடுமானால், மறுநாள் நாம் கண்விழிக்க மாட்டோம். நம் பிறப்பில் தொடங்கி இறப்புவரை ஓய்வின்றி நமக்காகப் பல அற்புதப் பணிகளை செய்துகொண்டிருக்கும் விசுவாசமான ஊழியன்தான் ஆழ்மனம்.
மனதின் இந்த இரு தளங்களுக்குமான உறவு எப்படிப்பட்டது, புறமனமானது ஆழ்மனத்திற்கு எப்படிக் கட்டளைகளை அனுப்புகிறது, என்பதுதான் மிக மிக முக்கியமான கேள்வி.
இதற்கான விடையை நாம் புரிந்து கொண்டால், நினைத்ததை எல்லாம் அடையக் கூடிய சர்வ வல்லமை நமக்கு வந்துவிட்டது என்று பொருள்!
ஆம், அலாவுதீனின் அற்புத விளக்கு பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள் அல்லவா? அது உங்கள் கைவசம் வந்தது போலத்தான், உங்கள் ஆழ்மனத்தின் சக்திகளை முற்றிலும் உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதும்!
புறமனம் ஆழ்மனத்தோடு தொடர்பு கொள்ள மொழிகளைப் பயன்படுத்துவதில்லை. உணர்வுகளைப் பயன்படுத்துகிறது. அதிலும் மிக முக்கியமான உணர்வு, நம்பிக்கை.
எதையெல்லாம் உங்கள் புறமனம் உண்மையென்று நினைக்கிறதோ, நடக்குமென்று நம்புகிறதோ, அதையெல்லாம் உங்கள் ஆழ்மனம் கட்டளைகளாக பாவிக்கிறது. உடனே தன் எஜமானனின் கட்டளையை நிறைவேற்றத் தன் சர்வ வல்லமையையும் பயன்படுத்திச் செய்து முடிக்கிறது.
ஆனால், இப்படி ஒரு அலாவுதீன் பூதம் நமக்குள் கை கட்டிக் காத்து நிற்பதை நம் புறமனம் அறிவதில்லை. நாம்தான் அறிவாளிகளாயிற்றே! எது சரி, எது தவறு, எது சாத்தியம், எது சாத்தியமில்லை, எது உண்மை, எது பொய், என்றெல்லாம் பகுத்தறிவைப் பயன்படுத்தி அலசி ஆராய்ந்துதானே எதையும் நம்புவோம்!
அப்படியிருக்க, “வருங்காலத்தில் தமிழகத்தின் சூப்பர்ஸ்டார் நீங்கள்தான்” என்று யாராவது சொன்னால், அதை நாம் நம்பி விடுவோமா என்ன? நடக்குமென்ற எண்ணம் கூட நம்மை நெருங்காதே? அப்படிப்பட்ட நம்பிக்கை, ஒரு பெரிய டைரக்டரின் மகனுக்கு வரலாம். ஒரு பெரிய நடிகரின் மகனுக்கு வரலாம். குறைந்தபட்சம், ஒரு பெரிய பணக்காரரின் மகனுக்குக் கூட வரலாம். ஆனால் ஒரு கண்டக்டருக்கு வந்ததே! எப்படி வந்தது அந்த நம்பிக்கை? ஒருவேளை, அவருக்கு இந்த ஆழ்மனதின் அதிசயம் பற்றித் தெரிந்திருக்கலாம்.
ஒரு எண்ணம் உருவான உடனே அது ஆழ்மனத்தைச் சென்றடைவதில்லை. அப்படி நடக்குமானால், நம் மனதில் உதிக்கும் பயங்கர எண்ணங்கள் உடனே உண்மையாகிவிடக் கூடிய அபாயம்தான் அதிகம்.
அதனால்தான் கடவுள் இந்தப் பாதுகாப்பு ஏற்பாட்டை வைத்தார் போலும். ஒரு எண்ணம் தீவிர நம்பிக்கையாக மாறும்வரை, அது ஆழ்மனத்தைச் சென்றடைவதில்லை. ஆனால் அது சென்றடைந்துவிட்டால், நீங்கள் நினைத்தது நடந்தே தீரும் என்பதுதான் விதி.
அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. எண்ணத்தை நம்பிக்கையாக மாற்றும் கலைதான் நாம் கற்க வேண்டிய ஒன்று. அதன் முதல் அதாவது, எண்ணங்களை முதலில் நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது.
இதுநாள்வரை, எண்ணங்கள்தான் நம்மைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தன. இப்போது நாம் அவற்றின் போக்கில் குறுக்கிட்டு, அவை நமக்குத் தேவையான எண்ணங்கள்தானா என்பதை ஆராய்ந்து, தேவையற்றதெனின் திசைதிருப்பவும் முயற்சி செய்வோம்.
இதில் தேறினால்தான், வெற்றி கிடைக்கும்.. பயிற்சியைத் தொடங்க முடியும். முயலுங்கள். உங்களால் முடியாதது எதுவுமில்லை.
நினைத்ததையெல்லாம் செயலாக்கும் ஆற்றல் நமக்கு வருமுன், நல்லதை மட்டுமே நினைக்கப் பழகுவோம். வாழ்த்துக்கள்..
ஆழ்மனம் நமது மிக சிறந்த வேலைக்காரன்
By
Jagadeesh Krishnan
Psychologist and International Author
[20/03, 11:31 AM] Jagadeesh KrishnanChandra: We know the depths
Before learning about the amazing effects of thoughts, it is important to know the depths.
Our mind operates on two platforms. It is the work of the external mind to generate thoughts, to ask questions, to do research, and to make intellectual decisions. Deepness is the power to execute outward commands without asking any questions.
This part of the mind is omnipotent. Our depth is the droplet of the cosmic force that guides all the universes.
It is this depth that subdues the immeasurable forces within itself and sleeps peacefully, the greatest gift that God has given to man.
There is probably no action that cannot be achieved using its power. The greatest achievers in the world all knew this secret.
Despite possessing so many forces within itself, the depth is incapable of reasoning. This can be compared to the robot or computer of modern science.
That is, a robot or computer can complete many wonderful tasks that cannot be done by humans in the blink of an eye.
But, is the power that drives them, man? Do they carry out man-made commands? That is, the depth at which our subconscious executes the commands wonderfully, does not think of anything on its own.
Moreover, without the intervention of our external mind, it is the action of this depth that drives the internal organs of the body and keeps us alive.
When we sleep our subconscious stops thinking and relaxes. But if our depths fall asleep, we will not wake up the next day. Deep down is the faithful servant who has been working tirelessly for us from birth to death.
The most important question is how the relationship between these two bases of the mind is, and how the external mind sends commands to the depths.
If we understand the answer to this, it means that the Almighty has come to us who can achieve everything we thought!
Yes, you have heard of the miraculous lamp of Aladdin, have you not? Just as it came into your possession, bringing the forces of your depth completely under your control!
The subconscious does not use languages to communicate deeply. Uses emotions. The most important feeling is faith.
Whatever your subconscious thinks is true or believes to happen, your subconscious uses it as commands. She immediately uses her omnipotence to carry out her master's command.
But our subconscious does not know that such an Aladdin troll is waiting for us. We are the intellectuals! What is right, what is wrong, what is possible, what is not possible, what is true, what is false, we will believe anything by using reason and research
So, if someone says, "You are the superstar of Tamil Nadu in the future", will we believe it? Don't even the thought of it happening approach us? Such hope may come to the son of a great director. May come to the son of a great actor. At the very least, it could even come to the son of a great rich man. But it came down to a conductor! How did that hope come about? Perhaps, he knew about the miracle of this depth.
As soon as an idea is formed it does not reach the depths. If that happened then we would all be in big trouble if the terrible thoughts that were going through our minds were not going to come true right away.
That is why God seems to have put this security arrangement in place. Until an idea becomes a serious belief, it does not reach the depths. But once it arrives, the rule is that what you thought will happen will happen.
No one can stop it. One of the things we need to learn is the art of turning thought into hope. Its first is to bring thoughts under our control first.
To this day, thoughts keep us in check. Now we come to the part where we talk about the middle ground, and try to figure out what they are and what they are not.
Only if you pass this, you will get success .. You can start training. Try. Nothing is impossible for you.
Before we have the energy to do what we want to do, we can only think of the good. Congratulations ..
Depth is our very best servant
By
Jagadeesh Krishnan
Psychologist and International Author
No comments:
Post a Comment