[1/27, 6:41 PM] Jagadeesh ChandraKrishnan: ஜார்ஜ் பெர்னார்ட்ஷா
இவரது பிரதான திறமை நாடகமே.
இவர் இலக்கியத்திற்கான *நோபல் பரிசு* பெற்றவர்.
அயர்லாந்தில் பிறந்தார். அரசு வேலையுடன் தானிய வியாபாரமும் செய்துவந்த இவரது தந்தை, வருமானத்தை குடித்தே அழித்தார். வறுமையில் வாடிய குடும்பம், வீட்டு வாடகைப் பணம்கூட கட்ட இயலாமல், கடற்கரையில் ஓட்டைப் படகில் வசிக்க நேர்ந்தது.
10 வயதில் பள்ளியில் சேர்ந்தார். 4 ஆண்டுகள் மட்டுமே படித்தார்.
இப்படிப்பட்டவர்தான் நோபல் பரிசினைப் பெற்றார் என்பது ஆச்சரியமான உண்மை.
94 வயது வரை வாழ்ந்த இவர்,
உலகின் மேதையாக
புகழப்படுகிறார்.
#ஷா என்று ஒற்றை எழுத்தால் உலகெல்லாம் அறியப்பட்ட அற்புத மனிதர்.
1856-1950... இவர் வாழ்ந்த காலம்.
ஆங்கில இலக்கிய வரலாற்றில் ஷேக்ஸ்பியரின் நாடகங்களுக்கு அடுத்து, புகழ்பெற்றது இவரது நாடகங்களே.
அவரின் கருத்துக்கள் இன்றளவும் எல்லோராலும் போற்றப்படுகிறது *பலருக்கும்* *வழிகாட்டியாகவும்* இருக்கிறது...
சிலவற்றைக் காண்போம் நண்பர்களே...
செல்வந்தர்களின் ஆடம்பர வாழ்வு கண்டு மற்றவர்கள் ஏமாந்து போகக்கூடாது.
நம்மை நாமே திருத்திக் கொள்வதுதான் தலையான முதற்கடமை.
தனக்குத் தெரிந்த விஷயங்களை மட்டுமே மனிதன் பேச ஆரம்பித்தால், உலகில் முழு அமைதி நிலவும்.
பணப் பற்றாக்குறை, அனைத்துத் தீமைகளுக்கும் வேர்.
மிருகங்கள் எனது நண்பர்கள், நான் எனது நண்பர்களை உண்பதில்லை.
நகைச்சுவை உணர்ச்சி இல்லாதவர்களுக்கு வாழ்க்கை ஒரு பெருஞ்சுமை ஆகிவிடும்.
பிறரை சீர்திருத்தும் கடமையைவிடத் தன்னைச் சீர்திருத்துவதே முதல் கடமை.
மனிதர்களுள் இருவகையினர் உண்டு. திறமையானவர்கள் ஒருவகை. மற்றவர்கள், திறமையைப் பயன்படுத்தாதவர்கள்.
உயிருள்ளவரை உழைத்து வாழ விரும்புகிறேன். உழைக்க உழைக்க எனக்கு உயிர் வாழும் விருப்பம் அதிகமாகிறது.
அனுபவம் ஒரு கடுமையானஆசிரியர், அது வலிகளைத் தந்த பிறகுதான் பாடத்தை கற்பிக்கிறது.
சந்தேகத்தை வெற்றி கொள்ளுங்கள், தோல்வியைத் தவிர்த்திடலாம்.
இன்ப வாழ்க்கை வாழ்வது என்பது ஒரு கலை. இன்பமா இல்லையா என்று நினைத்துப் பார்க்க நேரமில்லாமல், விரும்புவதை ஓயாமல் செய்து, உழைத்து வாழ்வதே இன்ப வாழ்க்கைக்கு வழியாகும்.
இன்பமும் துன்பமும் பணத்தைச் சார்ந்தவை அல்ல. மனதைச் சார்ந்தவை.
நல்லொழுக்கம் என்பது உனக்கு நீயே அளித்துக் கொள்ளும் நன்மதிப்பாகும்.
மனிதன் புலியைக் கொன்றால் அது வேட்டை, புலி மனிதனைக் கொன்றால் அது மிருகத்தனம். குற்றத்திற்கும் நீதிக்குமிடையே உள்ள தொடர்பு இதனைப் போன்றதுதான்.
பணம் பசியைத்தான் போக்கும். துன்ப உணர்ச்சியைப் போக்காது.
நம்மவர்கள் சிரிப்பதற்கு மூலகாரணமே அரசாங்கம்தான். அரசாங்கம் மட்டும் இல்லையென்றால் நம் நாட்டில் சிரிப்பதற்கு ஒன்றுமே இல்லை.
செய்ய முடிந்தவன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன் போதிக்கிறான்.
சந்தர்ப்பம் வரும் என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். தங்களுக்குத் தேவையான சந்தர்ப்பங்களைத் தேடித் பெறுபவர்தான் வாழ்வில் முன்னேற்றம் காண்கிறார்.
முட்டாள்கள் செய்யும் ஒரே புத்திசாலித்தனம் காதல். புத்திசாலிகள் செய்யும் ஒரே முட்டாள்தனம் காதல்.
அறிவற்ற சிநேகிதனிடம் சேர்வதைவிட புத்திசாலியான எதிரியிடம் சேர்வது மேல்.
தவறான வழிதான் எப்பொழுதுமே பொருத்தமான வழியைப் போன்ற தோற்றம் அளிக்கிறது.
சந்தர்ப்பத்தை உருவாக்குபவர்கள் வெற்றியடைகிறார்கள்
எதைச் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், எங்கே செய்ய வேண்டும் என அறிந்திருப்பவரே நல்ல தலைவர்.
பெண்ணை ஒரு பொருள்போல நடத்துவதால்தான் எல்லா இன்னல்களும் வருகின்றன.
நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதை பெறுவதில் கவனமாக இருங்கள். இல்லையென்றால் எதை பெறுகிறீர்களோ அதை விரும்பும் கட்டாயத்திற்கு தள்ளப்படுவீர்கள்.
உங்கள் குழந்தைகளை நல்லவர்களாக்க சிறந்த வழி, அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கச் செய்வதே.
நல்ல புத்தகமே சிறந்த நண்பன். உதவி தேவையான போதெல்லாம் நண்பர்களை நாடிச் செல்வது போல துணை வேண்டும்போதெல்லாம் புத்தகங்களை நாடிச் செல்ல வேண்டும்.
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[1/27, 6:42 PM] Jagadeesh ChandraKrishnan: George Bernardshaw
His main talent is drama.
He is the recipient of the * Nobel Prize * for Literature.
Born in Ireland. His father, who ran a government-run grain business, wasted no time in drinking. The family, living in poverty, was forced to live in a dinghy on the beach, unable to even pay the rent.
Attended school at 10 years old. Studied only 4 years.
It is a surprising fact that such a person received the Nobel Prize.
He lived to be 94 years old.
The genius of the world
Is praised.
The amazing man known all over the world by the single letter #Shaw.
1856-1950 ... the time he lived.
After Shakespeare's plays in English literary history, his plays became famous.
His ideas are still admired by everyone today and are * a * guide * to many ...
Let's see some friends ...
Do not be deceived by the luxuries of the rich.
Correcting ourselves is the foremost duty of the head.
If man begins to speak only what he knows, there will be complete peace in the world.
Lack of money is the root of all evil.
Animals are my friends, I do not eat my friends.
Life can be a burden for those who have no sense of humor.
The first duty is to reform oneself rather than the duty to reform others.
There are two types of humans. A kind of talented people. Others, those who do not use talent.
I want the living to work and live. The more I work, the more I want to survive.
Experience is a rigorous teacher who teaches the lesson only after it has given rise to pain.
Overcome doubt and avoid failure.
Living a life of pleasure is an art. The way to a happy life is to work hard and do what you want without having time to think about whether it is pleasure or not.
Pleasure and pain are not about money. Mental.
Virtue is the self-esteem you give yourself.
If a man kills a tiger it is hunting, if a tiger kills a man it is brutal. The connection between crime and justice is similar.
Money will only make you hungry. Suffering does not go away emotionally.
The government is the source of our laughter. There is nothing to laugh about in our country if not for the government alone.
He who can do achieves, he who cannot do teaches.
I will not accept that the opportunity will come. He who seeks the opportunities he needs finds progress in life.
The only brilliance that fools make is love. The only nonsense that the wise do is love.
Better a poor horse than no horse at all.
The wrong way always looks like the right way.
Opportunity creators succeed
A good leader is one who knows what to do, how to do it, and where to do it.
All suffering comes from treating the woman as an object.
Be careful about getting what you want. Otherwise you will be forced to want what you get.
The best way to make your kids good is to make them happy.
A good book is a best friend. Seek books whenever you need help, just as you would seek out friends when you need help.
By
Jagadeesh Krishnan is a psychologist and international Author
No comments:
Post a Comment