Monday 22 March 2021

Bhthi Dharmar

[22/03, 7:25 PM] Jagadeesh KrishnanChandra: போதிதர்மரும் ,சீன  பேரரசர் 'வூ' (Wu Tai) உடன் சந்திப்பின்போது ஏற்பட்ட முரண்பாடு


கி.பி. 527-இல் போதிதர்மர் தென் சீன சென்றபோது புத்தமதத்தின் ஆழ்ந்த ஈடுபாடுடைய பேரரசர் 'வூ' (Wu) தனது இராச்சியத்தின் எல்லையில் 10,000 துறவிகளுடனும், அரச உயர் அதிகாரிகளுடனும், தனது பரிவாரங்களுடனும் சகல அரச மரியாதையுடன் இவரை வரவேற்றார். ஒரு காலில் ஒரு பாதணியும் மற்றயதைத் தலையிலும் வைத்திருந்தார் இடுப்பைச்சுற்றி செம்பினாலான பட்டியும் (Copper Belt). இடுப்பில் ஒரு சிறு துணியும், கையில் ஒரு தடியும், ஒரு விசித்திரமான கிறுக்குத் தோற்றத்துடனும் காணப்பட்டார்

போதிதர்மர் அப்படியான தோற்றத்தில் வருவார் என்று யாரும் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள் பேரரசர் போதிதர்மரைப் பார்த்ததும் திகைப்படைந்தார். ஆனால் தன்னை சுதாகரித்துக்கொண்டார். இவருக்கு பைத்தியமோ ! இவர் என்ன  விசித்திரமான மனிதராக இருக்கிறார் என நினைத்தார். அரசர் 'வூ' வின் ஆச்சரியத்தை உணர்ந்து கொண்ட போதிதர்மர் சிரித்தார்

இந்த ஆள் என்ன பைத்தியமோ என்று நீர் நினைக்கலாம், கண்டிப்பாய் அப்படித்தான் நினைத்தும் இருந்திருப்பீர், நான் அதைக் கணித்துச் சொல்வேன். ஆனால் உம்மால் எதையும் கணிக்க முடியாது. அதுதான் வேறுபாடு நீர் அதை வாய்விட்டுச் சொல்லாவிட்டாலும் என்னால் கணிக்க முடியும்” என்றார் போதிதர்மர். திகைப்படைந்த அரசர் அமைதியாகத் தன் ஐயங்களை வினவினார்

அரசர்:           
                  புத்தமதத்தின் வளர்ச்சிக்குப் பெரும் செலவு செய்கிறேன் பல ஆயிரம் மடாலயங்கள் விகாரைகள் நிர்மாணித்துள்ளேன். புத்த போதனைகளைச் சீனமொழியில் மொழி பெயர்த்து போதனை செய்விக்கிறேன் தினமும் பத்தாயிரம் துறவிகளுக்கு உணவளிக்கிறேன் பெளத்தம் தர்ம காரியங்கள் செய்கிறேன். வரும் துறவிகளுக்கு எல்லாம் இல்லையென்று  சொல்லாமல் பெரும் தானங்கள்' செய்கிறேன் எனக்கு என்ன கிடைக்கும்

போதிதர்மர் : எதுவும் இல்லை, நரகலோகம் என்று ஒன்று
இருக்குமானால் உமது செய்கைகள் உம்மை அங்கே கொண்டுபோய் விழச்செய்யும். உன் தானங்களுக்குள்ளும், தர்ம காரியங்களுக்குள்ளும் பெரும் பேராசையும் சுயநலமும் மறைந்திருக்கிறது அவற்றுடன் சேர்ந்து உனக்கு அழிவும் வரும்

அரசர்: என்ன சொல்கிறீர்கள்? நான் செய்வதெல்லாம் புண்ணியச் செயல்கள், புனிதமாகவே வாழ் கிறேன்!!

போதிதர்மர் : உமது புண்ணியம், புனிதம் உம்மை நரகக் குழியில்தான் வீழ்த்தும் தர்மம், புண்ணியம் புனிதம் என்று எதுவுமில்லை .

அரசர்: நான் கூறுவது உங்களுக்குப் புரியவில்லை. நம் இருவருக்குமிடையில் சரியான மொழித் தொடர்பு இல்லை. அதனால் நான் கூறுவது உங்களுக்குப் புரியவில்லை

போதிதர்மர் : உமக்கும் எனக்கும் இடையில் எப்படித் தகவல்
பரிவர்த்தனை இடம் பெறமுடியும். நீர் மேலே வரவேண்டும். அல்லது நான் கீழே வர வேண்டும். அப்போதுதான் நாம் பொருந்த முடியும். நீர்தான மேலே வரவேண்டும். அதற்கு முயற்சித்துப்பாரும்.

அரசர்: பேருண்மையின் அதி உயர் கருத்து என்ன (What is the highest meaning of noble truth?)

போதிதர்மர் : பேருண்மை என்ற ஒன்றும் இல்லை.

அரசர்: நீங்கள் யார்?

போதிதர்மர் : தெரியாது

அரசர்:நான் யார்

போதிதர்மர் : தெரியாது

அரசர்: 
                முன்னோர்கள் சொன்ன பிரகாரம் நடக்கிறேன் பெரும் துறவிகள் கூறுவது போலெல்லாம் தர்ம காரியங்களும், தானங்களும் புண்ணியங்களும் செய்கிறேன். உங்கள் பதில்கள் வித்தியாசமாக உள்ளன. எனக்குப் புண்ணியம் கிடையாதா? மேலோகம் கிடையாதா? (அரசர் செய்வதெல்லாம் புண்ணியம் எனத் துறவிகள் கூறியிருந்தனரே)

போதிதர்மர் : ஒன்றுமில்லை

அரசர்:
                உங்களுடன் தொடர்ந்து கதைப்பதில் அர்த்த மில்லை நான் உங்களை ஏற்றுக்கொள்ள வில்லை . எனது நாட்டுக்கு விருந்தினராக வந்துள்ளீர்கள். நீங்கள் எனது அரண்மனையில் அரச விருந்தினராகத் தங்கலாம்.

போதிதர்மர் : உங்கள் இராச்சியத்திற்குள் வரமாட்டேன், இந்த எல்லைக்கப்பால் வரமாட்டேன் உமது எல்லையை நீர் தீர்மானித்துக்கொள்ளும். உமக்கு மரணம் நெருங்கும் போது என் நினைவு வரும். மரண பயமும், தனிமையும் உமது போலி நம்பிக்கைகளை எதிர்பார்ப்பு களை புண்ணியங்களை, மேலோக கற்பனை களை எல்லாம் தகர்த்தெறியும். உம்மை நீர் அரசராகப் பார்க்கிறீர் புண்ணியங்கள் நன்மைகள் செய்பவராக எண்ணிக்கொள்கிறீர் மேலோக கற்பனைகளை வளர்த்துக்கொள்கிறீர். “நீ நீயாக இல்லை, அரச பதவியை எடுத்தால் “நீ யார் உமது பத்தாயிரம் துறவிகளை எடுத்துவிட்டால் 'நீ யார்?' நீ கூறிய அத்தனையையும் எடுத்து விட்டால் "நீ யார் ,நீ யார்” என்பதை “நீ அறியாதவரையில் உனக்குள் குழப்பம் இருக்கும். நீங்கள் விரும்பிய போதெல்லாம் என்னை எப்போதும் சந்திக்கலாம்

ஆளும் பேரசரை எதிர்க்கும் துணிச்சல் எப்படித் துறவி போதிதர்மருக்கு ஏற்பட்டது? அரசன் படைப்பலத்தை மட்டும் தான் நம்புகிறான் இவர் தன் ஆத்ம பலத்தை அல்லவா நம்புகிறார். அவரது ஆத்ம பலமே அவரது வலிமை. இவர் உண்மையைத் தவிர வேறு எதுவும் பேசத் தெரியாதவர். உண்மையே அவரது பலம்.)

- (தன்னை ஒரு சாமானியராகப் போதிதர்மர் கருதியதால் கோபத்துடன் அரண்மனை திரும்பினார் அரசர்)

போதிதர்மர் : தென்சீனாவுக்குள் செல்லாது யாங்கிஸ் (Yangtze River) ஆற்றைக் கடந்து வடசீனா சென்றார். சில வருடங்களின் பின்

தென் சீனாவில் அரசர் ( (Wu-Ti) அரசாண்ட சாம்ராஜ்யத்தை கோஜிங் (Hou Jing) படைகள் கைப்பற்றினர். அரண்மனை அமைந்திருந்த நான்ஜிங் (Nan Jing) நகரம்

வீழ்ச்சியடைந்தது. அரசர் சிறைவைக்கப்பட்டார், உணவு வழங்கப்படவில்லை சகலதையும் இழந்தார், அவருடன் இருந்தவர்கள் தூர விலகினர் பல இன்னல்களைச் சந்தித்த அரசர் தனி மனிதர் ஆனார். துன்பத்தில் மூழ்கினார். அரசர் தான் யார்?' எனச் சிந்திக்கத் தொடங்கினார்.

சிறையிலிருந்து நரகலோகம், நரகலோகம்" என்று புலம்பினார். நோய்வாய்ப்பட்டு, எல்லோராலும் கைவிடப் பட்டு, மரணம் நெருங்கும்போது போதிதர்மரின் ஞாபகம் வந்தது. தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களை அழைத்துக் கூறினார் "போதிதர்மர் எங்கிருந்தாலும் கூட்டி வாருங்கள். எனக்கு உதவக்கூடியவர் அவர் ஒருவரே" என்றார்

இவரது உறவினர் போதிதர்மரைத் தேடிச்சென்றபோது, அவர்களுக்கு அதிர்ச்சிச் செய்தி காத்திருந்தது. போதிதர்மர் இல்லை ' என்பதை அறிந்தனர். அவர் அரசர் "வூ' க்கு ஒரு செய்தியைச் சீடர்களிடம் விட்டுச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது அச்செய்தி பின்வருமாறு இறக்கும்போது என்னை நினைவு கொள்வீர்  உங்கள் மறுவுலகக் கற்பனை இப்போது உடைந்து நொறுங்கத் தொடங்கிவிட்டது. மரணபயம் உங்கள் நம்பிக்கைகளை தகர்த்துவிட்டது. மரணத்தை ஆனந்தமாக ஏற்றுக் கொள்ளுங்கள் - காரணம் மரணம் தர்க்கமற்றது

அரசர் 'வூ'க்கு இச்செய்தி தெரிவிக்கப்பட்டது. "நான் பேரரசராக, தலைவணங்காதவராக இருந்தபோது போதிதர்மர்

கூறியவை. அன்று எனக்குப் புரியவில்லை. மறு உலக எண்ணத்திலே இருந்துவிட்டேன். போதிதர்மரைப் பயித்தியக் காரராக நினைத்து விட்டேன். அன்று அவர் என்னைக் காப்பாற்ற முயற்சி செய்தார். அதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனக்கு நடக்கப்போவதை அவர் அன்றே கணித்துவிட்டார். இந்த நேரத்தில் உதவக்கூடியவர் அவர் என்று நினைத்தேன். அந்த மகானைப் போய்ப் பார்க்கத் தவறிவிட்டேன். புரிந்து கொள்ள முடியாத ஒரு மாபெரும் மகான் அவர்" என்றார்
By
Jagadeesh Krishnan
Psychologist and International Author
[22/03, 7:26 PM] Jagadeesh KrishnanChandra: Conflict between Bodhisattva and Chinese Emperor Wu Tai


 AD  When Bodhisattva visited South China in 527, Emperor Wu, who was deeply involved in Buddhism, welcomed him with all the royal honors of 10,000 monks, high officials, and his entourage on the borders of his kingdom.  He wore a pair of shoes on one leg and a copper belt around his waist.  He was seen with a small cloth at the waist, a stick in his hand, and a strange twisted appearance

 The emperor was astonished to see Bodhidharma as no one expected Bodhidharma to come in such a form.  But freed himself.  இவருக்கு பைத்தியமோ!  He thought what a strange man he was.  Bodhisattva smiled as he realized the surprise of King ‘Woo’

 You might think this guy is crazy, you would definitely have thought so, I'll predict it.  But you can't predict anything.  That is the difference, I can predict even if you do not say it orally, ”said Bodhidharma.  The bewildered king quietly asked his doubts

 King:
                   I have spent heavily on the development of Buddhism and have built many thousands of monasteries and temples.  I translate and teach Buddhist teachings into Chinese. I feed tens of thousands of monks daily. I do Buddhist Dharma.  I make great donations without saying that everything is not for the coming monks' What do I get

 Bodhisattva: Nothing, something called hell
 If so, your actions will take you there.  Great greed and selfishness are hidden within your gifts and charitable deeds and with them destruction will come to you

 King: What do you say?  All I do is pious deeds, I live holy !!

 Bodhisattva: There is no such thing as your holiness, holiness, virtue, holiness that will throw you into the pit of hell.

 King: You do not understand what I am saying.  There is no proper linguistic connection between the two of us.  So you do not understand what I am saying

 Bodhisattva: How information between you and me
 The transaction can take place.  The water should come up.  Or I should come down.  Only then can we match.  The water should come to the top.  Try it.

 King: What is the highest meaning of noble truth?

 Bodhisattva: There is no such thing as greatness.

 King: Who are you?

 Bodhisattva: I do not know

 King: Who am I?

 Bodhisattva: I do not know

 King:
                 I walk according to what my ancestors said and do charity, donations and blessings as the great saints say.  Your answers are different.  Am I not blessed?  Is there no heaven?  (The monks said that everything the king did was a blessing)

 Bodhisattva: Nothing

 King:
                 No sense in telling you now - I don't wanna ruin the suprise.  You have come to my country as a guest.  You can stay in my palace as a royal guest.

 Bodhisattva: I will not come into your kingdom, I will not come beyond this border You will determine your boundary.  My memory comes to you when death is near.  Fear of death and loneliness will shatter your false beliefs, expectations, blessings, and supernatural fantasies.  You see yourself as a king, you consider yourself a doer of good deeds, you cultivate supernatural fantasies.  "You are not yourself, if you take the throne" Who are you?  If you take everything you say and say "Who are you, who are you" you will be confused until you know. You can always meet me whenever you want.

 How did the monk Bodhidharma have the courage to oppose the ruling emperor?  The king believes only in the power of creation and he believes in the power of his soul.  His strength is his soul strength.  He does not know how to speak anything other than the truth.  Truly his strength.)

 - (The king returned to the palace in anger because the Bodhisattva considered himself a commoner)

 Bodhisattva: North China crossed the Yangtze River without entering South China.  A few years later

 Hou Jing's troops occupy King Wu-Ti's kingdom in southern China.

 Fell.  The king was imprisoned, food was not provided and he lost everything, and those who were with him moved away. The king became an individual man who suffered many hardships.  Drowned in misery.  Who is the king? '  Began to think.

 From prison to hell, hell, "he lamented. He fell ill, was abandoned by everyone, and as death approached, he remembered his Bodhisattva.  He is the only one who can help me. "

 When his cousin went in search of Bodhidharma, a shocking news awaited them.  There is no Bodhisattva '.  It was revealed that he had left a message to the king "Woo" to the disciples.

 The news was conveyed to King 'Woo'.  “When I was emperor, I was a Bodhisattva

 Said.  I did not understand that day.  I have been in the mindset of the re-world.  I thought Bodhidharma was a madman.  That day he tried to save me.  I could not understand it.  He predicted what would happen to me that day.  I thought he was the one who could help this time.  I failed to go and see that maha.  He is a great saint who cannot be understood. "
 By
 Jagadeesh Krishnan
 Psychologist and International Author

No comments:

Post a Comment