Monday 15 March 2021

sarrowes

[15/03, 2:03 PM] Jagadeesh KrishnanChandra: துன்பத்தின் வேர்கள்

துன்பம் என்பது, தன்னுணர்வற்ற மனதின் ஒரு நிலை. நாம் என்ன செய்கிறோம், நாம்
என்ன நினைக்கிறோம், நாம் என்ன உணர்கிறோம் என்கின்ற விழிப்புணர்வு இல்லாததால், நாம்
துன்பம் அடைகிறோம். அதனால்தான் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நாம் நம்முடனேயே
முரண்பட்டுக் கொண்டிருக்கிறோம். நமது செயல் ஒரு திசையில் செல்கிறது, சிந்தனை
மற்றொரு திசையில் செல்கிறது, உணர்வுகள் வேறு எங்கோ செல்கிறது. நாம் பிரிந்து
பிரிந்து செல்கிறோம். நாம் மேலும் மேலும் பிளவுபட்டுச் செல்கிறோம். அதுதான்
துன்பம் ஆகும். – நாம் நமக்குள் ஒருங்கிணைந்து இருப்பதில்லை. நாம் நமக்குள் ஒற்றுமையை இழந்து விட்டோம்.

நாம் முற்றிலுமாக மையத்தில் இல்லாமலும், வெறுமனே வெளிவட்டத்திலுமாக இருக்கிறோம். எனவே,
இயல்பாகவே ஒத்திசைவு இல்லாததொரு வாழ்க்கை துன்பம் நிறைந்ததாகவும்,
துக்கமானதாகவும், ஏதோ ஒருவித சுமை போன்றும், ஒரு கஷ்டமாகவும் இருக்கிறது. அதிகபட்சமாக,
ஒருவர் இந்த துன்பத்தை கொஞ்சம் வேதனை குறைந்ததாக ஆக்கிக் கொள்ளலாம். மேலும்,
வாழ்க்கையில் ஆயிரக்கணக்கான வலி நிவாரணிகள் கிடைக்கின்றன.

வெறும் போதைப் பொருளும், மது வகைகளும் மட்டுமல்ல;  இந்த மதங்களும் கூட ஒருவிதத்தில் போதை
தரக்கூடிய அபின் போன்றதுதான். மேலும், இயல்பாகவே எல்லா மதங்களும் போதைப்
பொருட்களுக்கு எதிராக உள்ளன. ஏனெனில் அவைகளும் அதே சந்தையில்தான் தங்கள் பொருட்களை
விற்கின்றனர். எனவே, அவர்கள் தங்களின் போட்டியாளர்களுக்கு எதிராக உள்ளனர். மக்கள்
அபின் போன்ற போதைபொருட்களை எடுக்க ஆரம்பித்தால், அவர்கள் சமயவாதிகளாக இருக்க
மாட்டார்கள். அவர்கள், சமயவாதிகளாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. அவர்கள்,
தங்களின் போதைப்பொருளைக் கண்டு கொண்டுவிட்டனர். மேலும், அபின் போன்ற
போதைப்பொருட்கள் விலை மலிவானவை. அதில் நமது ஈடுபாடு கொஞ்சம் இருந்தால் போதுமானது.
மக்கள் மரிஜூவானா, எல்.எஸ்.டி போன்ற மிகவும் நேர்த்தி செய்யப்பட்ட போதைப்பொருட்களை
உபயோகிக்கும்போது, இயல்பாகவே அவர்கள் சமயவாதிகளாக இருக்கப் போவதில்லை. ஏனெனில்
சமயம் என்பது மிகவும் ஆதிகாலத்து போதை மருந்து. எனவேதான் எல்லா மதங்களும் போதைப்
பொருட்களுக்கு எதிராக உள்ளன.

அதற்குக் காரணம், உண்மையிலேயே அவைகள் போதைப்பொருட்களுக்கு எதிரானதாக இல்லை.
அதற்குக் காரணம், போதைப் பொருட்கள், மதங்களின் போட்டியாளர்கள் என்பதுதான்; எனவே மக்கள், போதைப் பொருட்களை உபயோகிப்பதற்கு தடை
ஏற்படுத்திவிட்டால், அவர்கள் நிச்சயமாக இந்த மதகுருக்களின் வலையில் விழுந்துதான்
தீர வேண்டும். ஏனெனில், அப்போது மதங்களை விட்டால், வேறுவழி கிடையாது. அது ஒருவித
ஏகபோகத்தின் வழி. அதாவது அவர்களின் மதம் என்னும் போதைப் பொருள் மட்டுமே சந்தையில்
இருக்க வேண்டும் என்பதும், மற்றவையெல்லாம் சட்டவிரோதமானவை என்பதுமாகும்.

மக்கள் துன்பத்தில் வாழ்கிறார்கள். அதில் இருந்து விடுபட இரண்டு வழிகள்தான்
உள்ளன. அவர்கள் தியானம் செய்பவர்களாக, உஷாரானவர்களாக, விழிப்புணர்வு உள்ளவர்களாக,
தன்னுணர்வு பெற்றவர்களாக ஆக முடியும். ஆனால், அது மிகவும் கடினமான வேலை. அதற்கு
தைரியம் தேவை. அல்லது இன்னொரு மலிவான வழி என்னவென்றால், நீங்கள் இப்போது எப்படி
இருக்கிறீர்களோ, அதைவிட இன்னும் அதிகமான தன்னுணர்வு இழந்த நிலைக்கு நீங்கள்
சென்றுவிட்டு, அந்த நிலையில் நீங்கள் அந்த துன்பத்தை உணராமல் இருக்க முடியும்.
உங்களை முற்றிலும் புலன்நுகர்ச்சி அற்றவர்களாக ஆக்குகின்ற ஒரே ஒரு பொருளை, ஏதோ ஒரு
மயக்க மருந்தை, ஏதோ ஒரு வலி நிவாரணியை எடுத்துக் கொள்வதால், அது உங்களை தன்னுணர்வு
இழந்த நிலைக்கு கொண்டு சென்றுவிடுவதால், நீங்கள் அந்த தன்னுணர்வு அற்ற நிலையில்
உங்களது கோபம், துன்பம், அர்த்தமற்ற தன்மை இவற்றிலிருந்து  தப்பித்துக் கொள்ளலாம்.

இந்த இரண்டாவது வழி, உண்மையான வழி அல்ல. இந்த இரண்டாம் வழி, உங்களது துன்பத்தை
கொஞ்சம் சௌகரியமானதாகவும், கொஞ்சம் தாங்கக்கூடியதாகவும், கொஞ்சம் வசதியானதாகவும்
மட்டுமே ஆக்கக் கூடியது. ஆனால் இது உங்களுக்கு உதவிகரமாக இருக்காது. – இது, உங்களை மாற்றியமைக்காது. உங்களுக்குள் மாற்றம் ஏற்பட
வேண்டுமென்றால், அது தியானத்தால் மட்டுமே முடியும். ஏனெனில் தியானம் ஒன்றுதான்
உங்களை விழிப்புணர்வு உள்ளவர்களாக ஆக்குகின்ற வழி. என்னைப் பொருத்தவரையில்,
தியானம் ஒன்று மட்டுமே உண்மையான மதமாகும். மற்றவையெல்லாம் ஏமாற்று வித்தை. மேலும்,
கிறிஸ்துவம், இந்து, முகமதியர், சமணம், பௌத்தம் என வெவ்வேறு பெயர்களில் அபின்
உள்ளது. ஆனால் அவைகள், வெறும் தொழிற் சின்னங்கள் மட்டுமே. பாத்திரங்கள் தான் வேறு
வேறானவை. ஆனால் அவற்றில் உள்ள பொருட்கள் ஒன்றுதான். அவைகள் எல்லாம், நீங்கள்
உங்கள் துன்பத்தில் எப்படியோ உங்களை சரி செய்து கொண்டு செல்கின்றதொரு வழிக்கு
உதவுகின்றன.

இங்கு, என்னுடைய முயற்சி என்னவென்றால், உங்களை இந்த துன்பத்தைக் கடந்து அதற்கு
அப்பால் கொண்டு செல்வதுதான். நீங்கள் துன்பத்தை நீங்கள் விரும்பிய வகையில் மாற்றி
அமைத்துக் கொள்ள மட்டுமே முடியும் என்பது கிடையாது. நீங்கள் இந்த
துன்பத்திலிருந்து முற்றிலும் விடுதலை பெறுகின்ற ஒரு சாத்தியம் உள்ளது. ஆனால்,
அந்தப் பாதை கொஞ்சம் கடினமானது. ஆனால் அந்தப் பாதை சவாலானது.

அதில் நீங்கள், உங்களது உடல் குறித்த விழிப்புணர்வுடன் மட்டுமல்ல; அதனால் நீங்கள் செய்கின்ற காரியங்கள் குறித்தும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

ஒருநாள் புத்தர் தனது காலை சொற்பொழிவை நிகழ்த்திக் கொண்டிருந்தார். அந்த
நாட்டின் அரசரும் அதைக் கேட்பதற்கு வந்திருந்தார். அவர், புத்தரின் முன்னால்
உட்கார்ந்து கொண்டிருந்தார். மேலும் அவர், தனது பெருவிரலை ஆட்டிக் கொண்டே இருந்தார்.
புத்தர், பேசுவதை நிறுத்திவிட்டு, அரசரின் பெருவிரலைப் பார்த்தார். புத்தர் தனது
பெருவிரலைப் பார்ப்பதைக் கண்டவுடன், அரசர் தனது பெருவிரல் அசைப்பதை
நிறுத்திவிட்டார். புத்தர் தனது பேச்சை தொடர்ந்தார். அரசரும் மீண்டும் தனது
பெருவிரலை அசைக்க ஆரம்பித்தார். உடனே புத்தர் அவரிடம், “ நீங்கள் ஏன் அப்படிச் செய்கிறீர்கள்?”  என்று கேட்டார்.

அதற்கு அரசர், “நீங்கள் பேசுவதை
நிறுத்திவிட்டு, எனது பெருவிரலை பார்க்கும்போதுதான் நான் என்ன செய்து
கொண்டிருக்கிறேன் என்கின்ற விழிப்புணர்வு  எனக்கு வருகிறது. மற்றபடி நான் எனது
தன்னுணர்வுடன் இருப்பதே இல்லை.” என்று பதில் கூறினார்.

அதைக் கேட்ட புத்தர், “அது உங்களது பெருவிரல்தானே!
அப்படியிருக்கும்போது, அது அசைவதைக் கூட உங்களால் தன்னுணர்வுடன் கவனிக்க முடியாதா?  இப்படியிருந்தால், நீங்கள் ஒருவரைக் கொலை செய்துவிட்டும் கூட அதைப் பற்றி எந்தவிதமான விழிப்புணர்வும் இல்லாமலும்கூட இருக்கலாமே!”என்றார்.

மேலும், இது போன்றதொரு வழியில் தான் மக்கள் கொலை செய்யப் படுகின்றனர். மேலும்,
கொலைகாரர்களும், தாங்கள் என்ன செய்கிறோம் என்கின்ற தன்னுணர்வு இல்லாமல்
செய்கின்றனர். நீதிமன்றங்களில் அநேகமுறை கொலை செய்தவர்கள் தாங்கள் கொலை செய்ததை
முழுமையாக மறுத்துள்ளனர். ஆரம்பத்தில் அவர்கள் நீதிமன்றத்தை ஏமாற்றுவதாகத் தான்
எண்ணப் பட்டது. ஆனால் சமீபகால கணடுபிடிப்புகள் மூலம், அவர்கள் ஏமாற்றவில்லை
என்றும், அவர்கள் அதை தங்களது சுயநினைவு இழந்த நிலையில் செய்து விடுகிறார்கள்
என்பதும் தெரிய வந்துள்ளது. அந்த நொடிப் பொழுதில், அவர்கள் அந்த அளவுக்கு ஆக்ரோஷத்துடனும்,
அந்த அளவுக்கு கோபத்துடனும் இருந்துவிட்டதால், அவர்கள் அந்த ஆக்ரோஷத்தின் பிடியில்
அகப்பட்டுக் கொள்கின்றனர். மேலும் நீங்கள் ஆக்ரோஷம் அடையும்போது உங்களது உடலில்
சில வெறியூட்டும் விஷங்கள் சுரக்கின்றன. அதனால் உங்களது இரத்தம் வெறியூட்டப்
படுகிறது. ஆக்ரோஷத்தில் இருப்பது என்பது தற்காலிகமாக புத்தி சுவாதீனம் இல்லாமல்
இருப்பதைப் போன்றது. இதனால் அந்த மனிதர் அந்த சம்பவத்தைப் பற்றி முழுமையாக
மறந்துப் போய்விடுவார். ஏனெனில் அவருக்கு அந்த சம்பவம் எப்படி நடந்தது என்கின்ற
விழிப்புணர்வு இருக்காது. இப்படித்தான் மக்கள் காதல் வசப்படுவதும், ஒருவரை ஒருவர்
கொலை செய்வதும், தற்கொலை செய்து கொள்வதும், இது போன்ற காரியங்களைச் செய்வதும்
நடக்கிறது.

எனவே, நீங்கள் உங்களது உடல்குறித்து நிறைகவனத்துடன், விழிப்புணர்வுடன் இருக்க
வேண்டியது தான் முதல்படி. கொஞ்சம் கொஞ்சமாக ஒருவர் தனது ஒவ்வொரு அசைவையும்,
ஒவ்வொரு நகர்வையும் குறித்து விழிப்புணர்வு கொள்ள முடியும். மேலும் இப்படி நீங்கள்
விழிப்புணர்வுடன் இருக்க ஆரம்பித்துவிட்டால், ஒரு அதிசயம் நடக்கும்; இதற்கு முன்புவரை நீங்கள்
செய்துவந்த அநேக காரியங்கள் வெறுமனே மறைந்து போகும். உங்களது உடல் ஓய்வுடன்
இருக்கும். உங்களது உடல் ஒத்திசைந்துவிடும், உங்களது உடலில் ஒரு ஆழ்ந்த அமைதி
நிலவும், உங்களது உடலில் ஒரு மெல்லிய சங்கீதம் துடிக்கும்.

அதன்பின்னர், உங்களது எண்ணங்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க
ஆரம்பியுங்கள். நீங்கள், உங்களது உடல் மீது செலுத்திய விழிப்புணர்வை இப்போது
அப்படியே உங்களது எண்ணங்களின் மீது செலுத்த வேண்டும். உங்களது எண்ணங்கள், உங்களது
உடலைவிட மிகவும் கண்ணுக்கு புலப்படாதவை. மேலும், அவை அபாயகரமானதும்கூட. மேலும்,
நீங்கள் உங்களது எண்ணங்கள் குறித்து விழிப்புணர்வு பெற்றுவிட்டால், அதன்பின்னர்
உங்களுக்குள் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்து, நீங்கள்
ஆச்சரியமடைவீர்கள். எந்த நேரத்திலும் உங்கள் மனதினில் ஓடிக் கொண்டிருக்கும் எண்ணங்களை
எழுத ஆரம்பித்தால், உங்களுக்கு அது மிகப் பெரிய ஆச்சரியத்தைக் கொடுக்கும். “இதுதான் எனக்குள் நடந்து கொண்டிருக்கிறதா?” என்று நீங்கள் அதை நம்ப
மாட்டீர்கள். வெறும் பத்து நிமிடங்கள் வரை உங்களுக்குள் என்னென்ன எண்ணங்கள்
ஓடுகின்றன என்று வெறுமனே குறித்து வைத்துப் பாருங்கள். அப்போது வேண்டுமானால்,
யாரும் உள்ளே வராதபடிக்கு கதவை மூடி தாழிட்டுக் கொள்ளுங்கள். எனவே, அப்போது
நீங்கள் நேர்மையுடன் உங்களுக்குள் ஓடுகின்ற எண்ணங்களை எழுத முடியும். மேலும் எழுதி
முடித்து அதை படித்த பின்னர், அதை தீயிட்டுக் கொளுத்துவதற்கு ஒரு தீப்பெட்டியையும்
தயாராக வைத்திருங்கள். எனவே உங்களைத் தவிர வேறு யாரும் அதில் உள்ளதை அறிய
முடியாது. அதனால் அப்போது நீங்கள் நேர்மையுடன் இருந்து, உங்களுக்குள் என்னென்ன
எண்ணங்கள்  வருகின்றனவோ, அதையெல்லாம் எழுதி
விட வேண்டும். அதை திரித்துக் கூறாதீர்கள், அதை மாற்றி விடாதீர்கள், அதை வெட்டிச்
சுருக்கிவிடாதீர்கள். அதை அப்படியே நிர்வாணமானதாக காகிதத்தில் எழுதுங்கள். சரியாக
அப்படியே எழுதுங்கள்.

அதன்பிறகு, பத்து நிமிடங்கள் கழித்து அதைப் படித்துப் பாருங்கள். அப்போது
நீங்கள் உங்களுக்குள் ஒரு பைத்தியக்கார மனம் இருப்பதைக் காண்பீர்கள். இப்படிப்பட்ட
முழு பைத்தியக்காரத்தனம் ஒன்று நமக்குள் ஒரு அடி நீரோட்டம் போல் ஓடிக்
கொண்டிருப்பதை நாம் ஒருபோதும் கவனிப்பதில்லை. உங்களது வாழ்க்கையின் முக்கியமான
விஷயங்களை அது பாதிக்கும். அது எல்லாவற்றையும் பாதிக்கும். ஆனால், இதுதான் உங்களது
ஒட்டுமொத்த வாழ்வாகவும் இருந்துவருகிறது!

ஆகவே, இந்த பைத்தியக்காரத்தனம் மாற்றப்பட வேண்டும். மேலும், விழிப்புணர்வின்
அற்புதம் என்னவென்றால், நீங்கள் விழிப்புணர்வுடன் இருப்பதைத் தவிர வேறு எதுவும்
நீங்கள் செய்ய வேண்டியதில்லை என்பதுதான். நீங்கள் அதை கவனிக்கின்ற விஷயமே அதை
மாற்றிவிடும். கொஞ்சம் கொஞ்சமாக உங்களது எண்ணங்கள் ஒரு குறிப்பிட்ட வகைக்குள் விழ
ஆரம்பித்து விடும். அதன் பின்னர், அவைகளில் குழப்பம் இருக்காது. அவைகள்
குழப்பங்கள் இல்லாத இந்த பிரபஞ்சம் போல ஆகிவிடும். எனவே அதன்பிறகு மீண்டும் அங்கே
ஒரு ஆழ்ந்த அமைதி நிலவும்.

மேலும், இவ்வாறு உங்களது உடலும், உங்களது மனமும் அமைதியடைந்து விட்டால்,
அப்போது அவைகள் இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒத்திசைந்து செல்வதையும் நீங்கள்
காண்பீர்கள். அங்கே ஒரு பாலம் அமைந்து விடும். இப்போது உங்களது உடலும் மனமும்
வெவ்வேறு திசையில் ஓடாது. அவைகள் வெவ்வேறு குதிரைகளில் சவாரி செய்யாது. முதல்
முறையாக அவைகள் இரண்டும் ஒத்துப் போகும். மேலும், அவைகளின் இந்த ஒத்து போகும்
செயலானது நீங்கள் அதற்கடுத்த மூன்றாவது படிக்கு செல்வதற்கு மிகவும் உதவும்.
அதாவது, மூன்றாவதாக நீங்கள் உங்களது உணர்வுகள், மனக் கிளர்ச்சிகள், மனநிலைகள்
ஆகியவைகள் குறித்து விழிப்புணர்வுடன் இருப்பதற்கு ஏதுவாக இருக்கும். இந்த
உணர்வுகள்தான் உங்களுக்குள் உள்ள கண்களுக்குப் புலப்படாத, அதேசமயம் மிகவும்
கடினமானதொரு அடுக்கு. ஆனால் நீங்கள் உங்களது எண்ணங்கள் குறித்து விழிப்புணர்வுடன்
இருக்க முடியுமெனில், அதன்பின்னர் இது இன்னும் ஒரே ஒரு படிதான் அதிகம். உங்களது
மனநிலையை, உங்களது மனக்கிளர்ச்சியை, உங்களது உணர்வுகளை பிரதிபலிக்கும்போது,
நீங்கள் கொஞ்சம் விழிப்புணர்வுடன் இருந்தால் போதும்.

இப்படி நீங்கள் இந்த மூன்று நிலைகளிலும் விழிப்புணர்வுடன் இருந்துவிட்டால்,
அவைகள் எல்லாம் ஒரே விஷயமாக ஒன்று சேர்ந்துவிடும். மேலும், இவைகள் மூன்றும் இப்படி
ஒன்றாக ஆகிவிட்டால், முற்றிலும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டால்,
உங்களால் இந்த மூன்றின் சங்கீதத்தையும் உணரமுடியும். – அவைகள் ஒரு இசைக்குழு போல ஆகிவிடும். –அதன்பின்னர்தான் நான்காவது விஷயம் நடக்கும். இந்த நான்காவது விஷயத்தை, நீங்கள்
ஏதாவது செய்வதால் கொண்டு வரமுடியாது. அது தானாகவே நிகழ்வது. அது பூரணத்தின்
வரமாகும். இந்த மூன்றையும் செய்தவர்களுக்கு கிடைக்கின்ற வெகுமதியாகும்.

மேலும் இப்படி நான்காவதாக எழுகின்ற அந்த விழிப்புணர்வுதான் உங்களை ஞானமடைந்த
ஒருவராக ஆக்கும். அப்போது ஒருவர் தனது விழிப்புணர்வு குறித்தே விழிப்புணர்வுடன்
இருப்பார்.  இதுதான் நான்காவது படி. அது
ஒருவரை புத்தராக ஆக்கிவிடும். ஞானமடைந்தவராக ஆக்கிவிடும். மேலும் இப்படி ஒருவர்
விழிப்படைந்தால் மட்டுமே ஒருவர் பேரானந்தம் என்றால் என்ன என்று அறிந்து கொள்ள
முடியும். உடல் அறிவது சுகம், மனம் அறிவது சந்தோஷம், உள்ளம் அறிவது மகிழ்ச்சி,
நான்காவதாக அறியப்படுவது பேரானந்தம். எனவே பேரானந்தம்தான் நமது லட்சியம்; விழிப்புணர்வுதான் அதற்கான பாதையாகும்.

மூலம் – விழிப்புணர்வு
By
Jagadeesh Krishnan
Psychologist and International Author
[15/03, 2:04 PM] Jagadeesh KrishnanChandra: The roots of suffering

 Suffering is a state of unconscious mind.  What we do, we
 Because of the lack of awareness of what we think and what we feel, we
 We suffer.  That is why we are with ourselves every moment
 We are at odds.  Our action goes in one direction, thinking
 Going in another direction, feelings go somewhere else.  We split up
 We are leaving.  We are becoming more and more divided.  That's it
 Suffering is.  - We are not cohesive within ourselves.  We have lost the unity within ourselves.

 We are not completely at the center, but simply outside.  Therefore,
 A life that is naturally inconsistent is full of misery and
 Sad and something like a burden, a hardship.  At most,
 One can make this suffering a little less painful.  Further,
 There are thousands of painkillers available in life.

 Not just drugs and alcohol;  Even these religions are somehow addictive
 It's like opium that can be given.  Also, naturally all religions are addictive
 Are against objects.  Because they have their products in the same market
 Sell.  Therefore, they are against their competitors.  People
 If they start taking drugs like opium, they become religious
 They will not.  They do not have to be religious.  They,
 They have found their drug.  Also, like opium
 Drugs are cheap.  It is enough if our involvement in it is a little.
 People use highly refined drugs like marijuana, LSD
 When used, naturally they are not going to be religious.  Because
 Religion is the most primitive drug.  That is why all religions are addictive
 Are against objects.

 That’s because they’re not really anti-drug.
 The reason is that drugs are rivals of religions;  Therefore, people are prohibited from using drugs
 If so, they would surely fall into the trap of these clergy
 To the coast.  Because, if you leave religions then, there is no other way.  It's kind of
 The way of monopoly.  That is, their religion is the only drug on the market
 Is to be, and everything else is illegal.

 People live in misery.  There are two ways to get rid of it
 There are.  They are meditators, alert, alert,
 Can become self-conscious.  But, it is very hard work.  For that
 It takes courage.  Or another cheap way, how you are now
 If you are, you are in a state of even greater self-consciousness than that
 Go away and in that state you may not realize that suffering.
 The only thing that makes you completely unconscious, is something
 Taking anesthesia, something like a painkiller, makes you self-conscious
 You are in that state of unconsciousness as you go into a lost state
 You can escape from your anger, misery, and meaninglessness.

 This is the second way, not the real way.  This is the second way, your suffering
 A little more comfortable, a little more bearable, a little more comfortable
 Can only be created.  But this will not help you.  - This will not change you.  Make a difference within yourself
 If desired, it can only be done through meditation.  Because meditation is one thing
 The way to make yourself aware.  As far as I'm concerned,
 Meditation is the only true religion.  Everything else is juggling.  Further,
 Opium under different names such as Christianity, Hinduism, Mohammedanism, Jainism, Buddhism
 Is.  But they are just trademarks.  The characters are just different
 Others.  But the ingredients in them are the same.  They are all, you
 In a way that somehow corrects you in your suffering
 Help.

 Here, my attempt is to help you overcome this suffering
 Is to carry beyond.  You turn suffering into the way you want it to be
 There is nothing that can only be set up.  You do this
 There is a possibility of complete liberation from suffering.  But,
 That path is a little difficult.  But that path is challenging.

 In it you, not only with awareness of your body;  So be aware of what you are doing.

 One day the Buddha was giving his morning sermon.  That
 The king of the country had also come to hear it.  He, in front of the Buddha
 Was sitting.  And he kept on stroking his big toe.
 The Buddha stopped speaking and looked at the king's thumb.  Buddha his
 When he saw the thumb, the king waved his thumb
 Stopped.  The Buddha continued his speech.  The king is his again
 He began to move his thumb.  Immediately the Buddha asked him, "Why do you do that?"  He asked.

 The king replied, “What you are saying
 What do I do when I stop and look at my thumb
 The awareness of having is coming to me.  Otherwise I am mine
 There is no self-awareness. ”  That was the answer.

 On hearing this, the Buddha said, “It is your thumb!
 When that is the case, can you not even consciously notice it moving?  If so, you may have killed someone without even realizing it! ”

 Moreover, it is in such a way that people are killed.  Further,
 Murderers, too, without a sense of what they are doing
 Do.  The murderers in the courts are often the ones who kill themselves
 Completely denied.  Initially it was as if they were cheating the court
 Counted.  But with recent discoveries, they have not disappointed
 And they do it when they are unconscious
 Has also been revealed.  At that moment, they were so aggressive,
 They are in the grip of that aggression because they have been so angry
 Are caught.  And in your body when you become aggressive
 Some secrete toxins.  So make your blood crazy
 படுகிறது.  Being aggressive means temporarily without intellectual independence
 As is.  Thus the man was fully aware of the incident
 He will forget.  Because of how the incident happened to him
 There will be no awareness.  This is how people fall in love with each other
 Murder, suicide, and doing things like that
 Going on.

 So, you have to be mindful and alert about your body
 The first step is to.  Little by little one makes his every move,
 Be able to become aware of every move.  And like you
 If you start to be vigilant, a miracle will happen;  Before this you
 Many of the things that have been done will simply disappear.  Rest your body
 Will be.  Your body will harmonize, a deep silence in your body
 Prevail, and a thin psalm will beat in your body.

 After that, be aware of your thoughts
 Get started.  You, now the awareness you have paid on your body
 Just pay attention to your thoughts.  Your thoughts, yours
 More invisible than the body.  Also, they are dangerous.  Further,
 Once you have become aware of your thoughts, then
 Knowing what is going on inside you, you
 You will be amazed.  Thoughts that are running through your mind at any moment
 If you start writing, it will give you a huge surprise.  "Is this what's going on inside me?"  That you believe it
 You will not.  What thoughts are within you for just ten minutes
 Simply note that they are running.  If you want then,
 Close the door so that no one can enter.  So, then
 You can honestly write down the thoughts that run through you.  Writing more
 After finishing and reading it, light a match to light it
 Be prepared.  So let no one but you know what is in it
 Can not.  So then you are honest, what is inside you
 Thoughts come and go, writing it all down
 To be more than.  Do not distort it, do not change it, cut it
 Do not shrink.  Write it naked on a piece of paper.  Exactly
 Write like that.

 After that, read it ten minutes later.  Then
 You will find that you have a crazy mind within you.  Such
 The whole madness is running like a foot stream within us
 We never notice what we have.  Important in your life
 It can affect things.  It will affect everything.  But, this is yours
 Overall life has been!

 Therefore, this madness must be changed.  Also, of awareness
 What is wonderful is that you can do nothing but be vigilant
 That’s what you don’t have to do.  That’s the thing you notice about it
 Will change.  Little by little your thoughts fall into a certain category
 Will start.  After that, there will be no confusion in them.  They are
 It will be like this universe without chaos.  So after that there again
 A deep silence prevails.

 Also, if your body and your mind are thus at peace,
 Then you know that they are both in harmony with each other
 You will find.  There will be a bridge.  Now your body and mind
 Do not run in different directions.  They do not ride on different horses.  First
 Formally they both agree.  Also, theirs will go with this
 The process will greatly help you move on to the next third step.
 That is, thirdly you have your feelings, mood swings, moods
 Tends to be aware of.  This
 Feelings are invisible to the naked eye within you, whereas most
 A hard layer.  But you are aware of your thoughts
 If possible, then it's only one step further.  Yours
 When you reflect on the mood, your emotions, your feelings,
 Enough if you are a little vigilant.

 Thus if you are vigilant in all these three stages,
 They all come together as one thing.  Also, these three are like this
 When they become together, when they begin to give voice completely together,
 You can feel the psalm of these three as well.  - They become like a band.  -After that the fourth thing will happen.  This is the fourth thing, you
 Doing something can not bring.  It happens automatically.  It's perfect
 Is a boon.  This is the reward for those who do all three.

 And it is that awareness that arises fourth like this that has enlightened you
 Making one.  Then one is aware of one's own awareness
 Will be.  This is the fourth step.  It
 Makes one a Buddha.  Will make you wise.  And someone like that
 Only when one is awake can one know what rapture is
 Can.  Knowing the body is bliss, knowing the mind is happiness, knowing the inside is happiness,
 The fourth is known as rapture.  So rapture is our ambition;  Awareness is the way to it.

 By - Awareness
 By
 Jagadeesh Krishnan
 Psychologist and International Author

No comments:

Post a Comment